இளையோர் தலைமைத்துவ பயிற்சி முகாம்

மத்திய அரசு, நேரு யுவகேந்திரா, புதுவை இளையோர் நலம் - விளையாட்டு அமைச்சகம் ஆகியவை சார்பில்,

மத்திய அரசு, நேரு யுவகேந்திரா, புதுவை இளையோர் நலம் - விளையாட்டு அமைச்சகம் ஆகியவை சார்பில், இளையோர் தலைமைத்துவம், சமுதாய மேம்பாடு என்ற தலைப்பிலான 
3 நாள்கள் பயிற்சி முகாம் புதுச்சேரி சோலை நகர் இளைஞர் விடுதியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை தொடங்கிய பயிற்சியை புதுச்சேரி கிழக்குக் காவல் துறைக் கண்காணிப்பாளர் சி. மாறன் தொடக்கி வைத்து, சைபர் குற்றங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். நேரு யுவகேந்திராவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா. ஹெலன்ராணி தலைமை வகித்து, நோக்கவுரையாற்றினார்.
இதில், தலைமைப் பண்புகள், ஆளுமை திறன், பிரதமரின் திட்டங்கள், தன்னார்வத் தொண்டு, தூய்மைப் பணியில் இளைஞர்களின் பங்கு, டெங்கு விழிப்புணர்வு, யோகா செய்வதால் ஏற்படும் பயன்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 
இந்த முகாமில் கிராமப்புற  இளையோர்கள் 40 பேர் பங்கேற்றனர். பயிற்சி முகாமின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க. லட்சுமிநாராயணன் எம்எல்ஏ, இளையோர் தலைமைத்துவம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து, பயிற்சி முகாமில் பங்கேற்ற இளையோருக்கு அவர் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். முத்துகுமார் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com