அரசியல் காரணங்களுக்காக புதுவை சட்டப்பேரவை கூடுகிறது: அதிமுக குற்றச்சாட்டு

அரசியல் காரணங்களுக்காகவே புதுவை  சட்டப்பேரவையை ஆளும் காங்கிரஸ் கட்சி கூட்ட முயற்சி செய்கிறது என்று அதிமுக குற்றஞ்சாட்டியது.

அரசியல் காரணங்களுக்காகவே புதுவை  சட்டப்பேரவையை ஆளும் காங்கிரஸ் கட்சி கூட்ட முயற்சி செய்கிறது என்று அதிமுக குற்றஞ்சாட்டியது.
இதுகுறித்து சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அதிமுக குழுத் தலைவர் அன்பழகன் கூறியதாவது:
புதுவை சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரை அரசு கூட்ட வேண்டும். அதன்படி, இன்னும் சில தினங்களில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ள நிலையில், திடீரென வருகிற 22-ஆம் தேதி சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த அறிவிப்பில் எதற்காக அந்தக் கூட்டம் கூட்டப்படுகிறது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. இது சட்டப்பேரவை நடத்தை விதிகளை அவமதிக்கும் செயல். 
சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரைக் கூட்டும் அளவுக்கு இங்கு புயல், வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? ஆளும் அரசு அரசியல் ரீதியான நடவடிக்கைக்கு சட்டப்பேரவைக் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. துறைகள் தொடர்பாக உள்ள எந்தக் குழுக் கூட்டத்தையும் முதல்வர், அமைச்சர்கள் கூட்டுவது இல்லை. 
தமிழகத்தில் மாவட்ட அளவில் மக்கள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்று மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்கின்றனர். தீர்க்கப்படாத குறைகள்கூட 10 நாள்களில் தீர்க்கப்படுகின்றன.
இதேபோல, புதுவையில் "மக்கள் குரல்' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள திட்டம் நல்ல முயற்சி என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com