விழுப்புரம்

3 மாநிலத் தேர்தல்களில் வெற்றி: காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்

DIN

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தக் கட்சியினர் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
விழுப்புரத்தில்  மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்டத் தலைவர் ஆர்.டி.வி.சீனுவாசகுமார் தலைமையில், புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகள் வழங்கினர். மேலும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
இதில், நகரத் தலைவர் செல்வராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் சிவா, ராஜாராம், சுரேஷ்ராம், துணைத் தலைவர்கள் ராஜ்குமார், நாராயணசாமி, குப்பன், பொதுச் செயலர்கள் விஸ்வநாதன்,  நடராஜன், காஜா மொய்தீன், சேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் பரிமளா கஜேந்திரன்,  தன்சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் காந்தி சிலை சந்திப்பில் முன்னாள் மாவட்டத் தலைவர் எம்.டி.குலாம்மொய்தீன் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர். இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலசுப்பிரமணியன், எஸ்.ஆறுமுகம், பொதுச் செயலர்கள் காஜா, சுந்தர், சீனுவாசன், அகமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருக்கோவிலூர்:  திருக்கோவிலூரில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத் தலைவர் ஏ.ஆர்.வாசிம்ராஜா தலைமையில், அந்தக் கட்சியினர் பேருந்து பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
செஞ்சி: செஞ்சி கூட்டுச் சாலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனங்களின் தலைவருமான வழக்குரைஞர் 
ஆர்.பூபதி தலைமை வகித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தினகரன், மாவட்ட துணைத் தலைவர் பாலப்பட்டு சண்முகம், வட்டாரத் தலைவர் சரவணன், செஞ்சி நகரத் தலைவர் இ.சரவணன், விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவர் ஜோலாதாஸ், சிவக்குமார், கோணராஜா, சுரேஷ், பாண்டுரங்கன், முருகானந்தம், காளி, கேபிள்ரமேஷ், சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் மக்களவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்

கடலூா் தொகுதியில் 19 வேட்புமனுக்கள் ஏற்பு

தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

4-8 வகுப்புகளின் தோ்வு அட்டவணையில் மாற்றம்

SCROLL FOR NEXT