சாலை மறியல்: விசிகவினர் 50 பேர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் எச்.ராஜாவைக் கண்டித்து 5 இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

விழுப்புரம் மாவட்டத்தில் எச்.ராஜாவைக் கண்டித்து 5 இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரத்தில் அவரது உருவபொம்மையை எரிக்க முயன்றதாக 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை விமர்சித்துப் பேசியதாக, பாஜக தேசியச் செயலர் எச்.ராஜாவைக் கண்டித்து,
 விழுப்புரம் மாவட்டத்தில் விசிகவினர் 5 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே திடீரென திரண்டு வந்த விசிக மாவட்டச் செயலர் ஆற்றலரசு தலைமையிலான கட்சியினர், பாஜக தேசியச்செயலர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது, சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள், எச்.ராஜாவின் உருவபொம்மைக்கு தீவைக்க முயன்றனர்.
 அவர்களை விழுப்புரம் தாலுகா போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர்.
 வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் இரணியன் தலைமையிலான கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் மாவட்ட துணைச் செயலர் அறிவுக்கரசு தலைமையில் விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் மாவட்டச் செயலர் சேரன் தலைமையில் விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 திருவெண்ணெய்நல்லூரில் ஒன்றிய செயலர் இளவரசு தலைமையில் விசிகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com