கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

கால்நடை பராமரிப்புத் துறையில் உள்ள அமைச்சுப் பணி காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற அந்தத் துறையின் அமைச்சுப் பணி


கால்நடை பராமரிப்புத் துறையில் உள்ள அமைச்சுப் பணி காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற அந்தத் துறையின் அமைச்சுப் பணி அலுவலர் சங்க மாநிலக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
விழுப்புரத்தில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்கத்தின் மாநில உயர்நிலைக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் என்.மணி தலைமை வகித்தார்.
பொதுச் செயலாளர் த.சங்கர், மாநிலப் பொருளாளர் ஈ.கோபி, தலைமை நிலையச் செயலர் ஆ.முத்துக்குமார், பிரசாரச் செயலாளர் எஸ்.சரவணன், மகளிரணிச் செயலர் ஏ.சரஸ்வதி, தணிக்கையாளர் எஸ்.கஜபதிராம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் தலைவர் கு.ராமச்சந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவராக தொடர்ந்து 5-ஆவது முறையாக பொறுப்பேற்றுள்ள இரா.சண்முகராஜனுக்கும், மாநில துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்க மாநில பொதுச் செயலர் த.சங்கருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறையில் உள்ள அமைச்சுப் பணி காலியிடங்களை நிரப்ப வேண்டும், நிலுவையில் உள்ள கண்காணிப்பாளர் பதவி உயர்வை வழங்க வேண்டும், இளநிலை உதவியாளர், தட்டச்சர்களுக்கு முறையான உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கான 21 மாத ஊதியக் குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு கால்நடை ஆய்வாளர் பயிற்சி அளிக்க வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
தமிழகம் முழுவதும் உள்ள சங்க மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர்
ஏ.கோபி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com