ரிஷிவந்தியத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

ரிஷிவந்தியத்தில் பள்ளி அருகே நின்றிருந்த இளைஞர்களை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ரிஷிவந்தியத்தில் பள்ளி அருகே நின்றிருந்த இளைஞர்களை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 ரிஷிவந்தியத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த பாலு மகன் அரவிந்த் (23). இவர் தனது வீட்டுக்கு வெளியே நண்பர்கள் சுரேஷ் (35), சத்தியமூர்த்தி (23) உள்ளிட்டோருடன் செவ்வாய்க்கிழமை காலை பள்ளி தொடங்கும் நேரத்தில் நின்றிருந்தார். அப்போது, அந்தப் பகுதியில் ரோந்து பணியிலிருந்த ரிஷிவந்தியம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சபரிமலை, பள்ளிக்கு அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த அரவிந்த் மற்றும் அவரது நண்பர்களை அழைத்து விசாரித்தார். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த அரவிந்த் உள்பட 5 இளைஞர்களை உதவி ஆய்வாளர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். 
 இது குறித்து தகவல் அறிந்த அந்த இளைஞர்களின் உறவினர்கள், கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு காவல் நிலையத்தை முற்றுக்கையிட்டு, இளைஞர்களை விடுவிக்குமாறு தெரிவித்தனர். மேலும், காவல் நிலையம் முன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இவர்களிடம் திருக்கோவிலூர் டி.எஸ்.பி. மகேஷ், ரிஷிவந்தியம் காவல் ஆய்வாளர் ரத்தினசபாபதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அந்த வழியாக வந்த ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரித்தார். பொதுமக்களுக்கு ஆதரவாக, பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இளைஞர்களை விடுவிக்க வேண்டும், சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, அந்த இளைஞர்களை போலீஸார் விடுவித்தனர். பின்னர் பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். மறியலால் திருக்கோவிலூர் - கள்ளக்குறிச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com