விழுப்புரம்

உலகங்காத்தான் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

கள்ளக்குறிச்சியை அடுத்த உலகங்காத்தான் கிராமத்தில் ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த திங்கள்கிழமை ஸ்ரீகணபதி, ஸ்ரீலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், மஹாபூர்ணாஹுதி, புதிய சிலைகள் கரிவலம், முதல்கால யாகசாலைப் பூஜைகள் நடைபெற்றன.
செவ்வாய்க்கிழமை இரண்டாம் கால யாகசாலைப் பூஜை நடைபெற்றது. புதன்கிழமை காலை 6 மணிக்கு கோ பூஜையும், அதைத் தொடர்ந்து நாடிசந்தனம், தத்துவார்ச்சனை, சுவாமி சிலைகளுக்கு கண் திறப்பு, விஷேச ஹோமங்களும் நடைபெற்றன.
இதையடுத்து, காலை 9.30 மணிக்கு கோபுர கலசங்களுக்கும், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீஆதிபராசக்தி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
கும்பாபிஷேகத்தை வெங்கடேச குருக்கள், ஹரி குருக்கள், பட்டு சிவாச்சாரியார் உள்பட 10 சிவாச்சாரியார்கள் பங்கேற்று நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT