எஸ்.பி.யுடன் மாணவர்கள் சந்திப்பு

குழந்தைகள் தின விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்ட சைல்டு லைன் அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்கள் புதன்கிழமை காவல் துறை அதிகாரிகளைச் சந்தித்து, நல்லுறவு வளர்க்கும் வகையில்  கைப்பட்டை

குழந்தைகள் தின விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்ட சைல்டு லைன் அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்கள் புதன்கிழமை காவல் துறை அதிகாரிகளைச் சந்தித்து, நல்லுறவு வளர்க்கும் வகையில்  கைப்பட்டை கட்டிவிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 
 விழுப்புரம் சரக டிஐஜி அலுவலகத்துக்கு, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பிரசாத் தலைமையில் உறுப்பினர்கள் ஜெயசீலி, அருள்மணி, ஐஸ்வர்யா, பிரசாத் மற்றும் குழந்தைகள் நேரில் வந்து டிஐஜி சந்தோஷ்குமாருக்கு குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 
அப்போது, மாணவ, மாணவிகள் டிஐஜி கையில் நல்லுறவு கைப்பட்டையை கட்டினர். 
இதேபோல, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த மாணவர்கள், மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாருக்கும் நல்லுறவு கைப்பட்டைகளை கட்டிவிட்டனர். இதையடுத்து, அந்தக் குழந்தைகளுக்கு இனிப்புகளை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில், தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com