16 டிசம்பர் 2018

தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்

DIN | Published: 16th November 2018 09:47 AM

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, விழுப்புரம், வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
 இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கும், இரவு 10 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல, மறு மார்க்கத்தில் திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரத்துக்கு நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பகல் ஒரு மணிக்கும், நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.15 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அந்தம்பள்ளம், தண்டரை ஆகிய ஊர்களில் நின்று செல்லும்.
 இதேபோல, வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரவு 9.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறு மார்க்கத்தில் திருவண்ணாமலையிலிருந்து வேலூருக்கு நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
 
 

More from the section

நெடுஞ்சாலைத் துறை அனுமதிக்காக சுவாமி சிலை ஏற்றிய வாகனம் நிறுத்தம்
கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
சுவாமி சிலை ஏற்றிய லாரி திண்டிவனம் பகுதியிலிருந்து புறப்பட்டது
சாலை மறியல்: விசிகவினர் 50 பேர் கைது
விழுப்புரம் அருகே சாலையோரம் கிடந்த பேரலில் இருந்து ரசாயனக் கசிவு