விழுப்புரம்

ஆசிரியர் கழக முப்பெரும் விழா

DIN


விக்கிரவாண்டியில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில் மாநிலத் தலைவருக்கு பாராட்டு விழா, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும், பணி நிறைவு பெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா மற்றும் பொதுக் குழுக் கூட்டம் ஆகியவை முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டது.
மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்புச் செயலாளர் வேல்முருகன், தலைமையிட செயலாளர் சூரிய நாராயணா, மாவட்ட மகளிரணி செயலாளர் யமுனாபாய் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் அருள் வரவேற்றார்.
சங்க மாநிலத் தலைவர் மணிவாசகனை பாராட்டி, விருதுகள் வழங்கப்பட்டன. பின்னர், மாநிலத் தலைவர் மணிவாசகன் சங்க ஆசிரியர்களைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார்.
மாநில பொருளாளர் கிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் செல்வம், தலைமையிட செயலாளர் சாமிநாதன், மகளிரணிச் செயலாளர் பாப்பிஸ்டா மேரி, சட்டத் துறைச் செயலாளர் அண்ணாமலை, துணைத் தலைவர் கலாநிதி, துணை பொதுச் செயலாளர் செந்தில்வேலன், மகளிரணி இணைச் செயலாளர் ஜனசக்தி உள்ளிட்டோர் பேசினர்.
விழாவில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் .
பொதுக் குழுக் கூட்டத்தில், ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் டிசம்பர்
4-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், ஊதிய முரண்பாட்டை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிட்டி அறிக்கையை வெளியிட வேண்டும், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 14 தீர்மானங்கள் நினைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT