விழுப்புரம்

புயல் பாதித்த பகுதிகளில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

DIN


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவை கிடைக்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை மாவட்டங்களை சனிக்கிழமை பார்வையிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்னைக்குச் செல்லும் வழியில் விக்கிரவாண்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.
மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பால் கிடைக்கவில்லை. மரங்கள் விழுந்து கிடக்கின்றன. உயிரிழப்புகள் 50-ஐ தாண்டியுள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், தரங்கம்பாடி, வேதாரண்யம், காரைக்கால், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினேன். அங்கு அமைச்சர்கள் வரவில்லை, அதிகாரிகள் வரவில்லை, முதல்வரும் வரவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுபோன்ற சூழலில் முதல்வர் உடனடியாக அங்கு சென்று, தங்கியிருந்து பணிகளை விரைவுபடுத்தி இருக்க வேண்டும். மீட்புப் பணிகள் நடைபெறாததால், மக்களிடையே எதிர்ப்பு காணப்படுகிறது. ஆங்காங்கே சாலை மறியல் நடைபெறுகின்றன.
எனவே, அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT