விழுப்புரம்

ஆட்சியர் அலுவலகம் முன் நெசவுத் தொழிலாளி தர்னா

DIN

மகன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நெசவுத் தொழிலாளி  திங்கள்கிழமை தர்னாவில்  ஈடுபட்டார்.
கண்டாச்சிபுரம் அருகேயுள்ள சத்தியகண்டநல்லூரைச் சேர்ந்தவர் அண்ணாமலை (50), நெசவுத் தொழிலாளி.  இவர், திங்கள்கிழமை மனுவுடன் வந்து, ஆட்சியர் அலுவலக வாயில் முன்பாக அமர்ந்து திடீரென தர்னாவில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: எனது மகன் திருமலை(7)  மன வளர்ச்சி குன்றிய நிலையில்,  மாற்றுத் திறனாளிகள் சிறப்புப் பள்ளியில் படித்து வந்தார். அவரது பாதுகாப்புக்காக,  வீட்டின் முன் சாலையோரம் வேலி அமைத்தேன். இதனை அகற்றுமாறு அதே பகுதியைச் சேர்ந்த கேசவன் குடும்பத்தினர் சில வாரங்களுக்கு முன்பு தகராறு செய்து தாக்கியதில், எனது  மகன் காயமடைந்து,  புதுவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,  தீபாவளி தினத்தன்று (நவ.6)  உயிரிழந்தார்.
இந்த சோகத்தில் இருந்த நிலையில், நவ.8-ஆம் தேதி கேசவன் குடும்பத்தினர் வந்து, தகராறு செய்து எங்களைத் தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர்.  
இதுதொடர்பாக நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், எனது குடும்பத்தினர் மன உளைச்சலில் தவித்து வருகின்றனர்.  மகன் சாவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தர்னாவில் ஈடுபட்ட அவரை விழுப்புரம் தாலுகா ஆய்வாளர் ராஜன் அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினார்.  மேலும், இது தொடர்பாக,  அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளரிடம் செல்லிடப்பேசியில் பேசிய அவர், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.  
இதையடுத்து, அண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை வழங்கிச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT