இலவச மல்டிமீடியா, எடிட்டிங் பயிற்சி 

விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பில்லா இளைஞர்கள் இலவசமாக மல்டிமீடியா, எடிட்டிங் பயிற்சியில் சேர

விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பில்லா இளைஞர்கள் இலவசமாக மல்டிமீடியா, எடிட்டிங் பயிற்சியில் சேர நேர்காணலில் பங்கேற்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து, வேலைவாய்ப்பு சார்ந்த இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சியை விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி நடத்தவுள்ளது. இதில், மல்டிமீடியா, டிஜிட்டல் நான் லீனியர் படத்தொகுப்பு(விடியோ எடிட்டிங்) ஆகிய பிரிவுகளில் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் 18 முதல் 35 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் சேரலாம். விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி இருக்கலாம். ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும். காலை 8.30 முதல் 1.30 வரை (திங்கள் முதல் வெள்ளி வரை) பயிற்சி வகுப்பு இருக்கும். பயிற்சி பெறுபவருக்கு உதவித் தொகையாக நாளொன்றுக்கு ரூ.100 வீதம், பயிற்சிக்கு வந்த நாள்களுக்கு ஏற்ப முடிவில் கணக்கிட்டு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம்,  இரண்டு மார்பளவு புகைப்படம் மற்றும் வேலைவாய்ப்புப் பதிவு அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும்.
இந்த இலவசப் பயிற்சிக்கான நேர்முகத் தேர்வு நவ.22 முதல் 24  வரை மூன்று நாள்கள் விழுப்புரம்,  ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும்.     பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு மாநில தொழிற்கல்வி மையம் மூலமாக சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் திரைப்படத் துறை, தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் போட்டோ ஸ்டூடியோக்களில் வேலைவாய்ப்பு பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9840420743, 9677144786 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com