திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

ஆற்றில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும்: மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மனு

DIN | Published: 12th September 2018 09:34 AM

விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த மாட்டு வண்டித் தொழிலாளர்கள் ஆற்றில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் அருகே உள்ள  சாலாமேடு உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த மாட்டு வண்டித் தொழிலாளர்கள் 100 பேர்,  செவ்வாய்க்கிழமை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து,  ஆற்றில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.   
அப்போது அவர்கள் கூறுகையில், அரசு வழங்கி வரும் தொகுப்பு வீடுகளுக்கு மணலின்றி பணி தடைபடுகிறது.   மாட்டு வண்டித் தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
 இதை கருத்தில் கொண்டு,   மீண்டும் ஆற்றில் கட்டணம் செலுத்தி மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.  கோரிக்கையை பரிசீலிப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.
 

More from the section

புயல் பாதித்த பகுதிகளில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஆசிரியர் கழக முப்பெரும் விழா
விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்: 7 இடங்களில் மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை
தொடர்ந்து ஏமாற்றி வரும் மழை: செஞ்சி பகுதி விவசாயிகள் கவலை
எஸ்.ஐ. உள்பட 3 காவலர்கள் பணியிட மாற்றம்