செவ்வாய்க்கிழமை 20 நவம்பர் 2018

பாரதியார் நினைவு தினம் கடைப்பிடிப்பு

DIN | Published: 12th September 2018 09:31 AM

விழுப்புரம் பவ்டா தொண்டு நிறுவனத்தில் மகாகவி பாரதியாரின் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
விழுப்புரம் பவ்டா தொண்டு நிறுவனத்தில் பவ்டா கலை, அறிவியல் கல்லூரி, பவ்டா  வானொலி சார்பில், மகாகவி பாரதியாரின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. எழுத்தாளர் நாஞ்சில் கி.ராஜேந்திரன் வரவேற்றார்.
 பவ்டா தொண்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் செ.ஜாஸ்லின் தம்பி, பாரதியார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார். 
தொடர்ந்து, பவ்டா தொண்டு நிறுவன முதுநிலை பொது மேலாளர்கள்  வெங்கடாஜலபதி, பாரி, ஆல்வின்சகாயம், கோவிந்தராஜ், அரிசந்திரன், ராஜதுரை, ஆனந்தவேலன், சாந்தி, வளர்மதி, அசோகன் மற்றும் ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு, பாரதியாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

More from the section

மின்னல் பாய்ந்து விவசாயி சாவு
ஆட்சியர் அலுவலகம் முன் நெசவுத் தொழிலாளி தர்னா


சமூக சமத்துவப் படை சார்பில் மக்கள் மனுநீதி நாள் முகாம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடு தொடக்கம்
இந்திரா காந்தி பிறந்த நாள் விழா