சனிக்கிழமை 22 செப்டம்பர் 2018

போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

DIN | Published: 12th September 2018 09:32 AM

விழுப்புரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் போர்வெல் லாரி உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
தமிழகத்தில் டீசல், பெட்ரோல் விலையைக் குறைக்க வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஆழ்துளை கிணறுகளை அமைத்து வரும் ரிக் உரிமையாளர்கள் (போர்வெல் லாரி) சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை முதல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலும் ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தை தொடங்கினர். மாவட்டத் தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி 4 நாள்கள் வேலை  நிறுத்தப் போராட்டத்தில்  ஈடுபடுவது, டீசல் விலை உயர்வால் இனி ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு அடி ஒன்றுக்கு ரூ.60-லிருந்து ரூ.80-ஆக கட்டணத்தை உயர்த்துவதென தீர்மானித்தனர். மாவட்டத்தில் உள்ள 250 போர்வெல் லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாகத் தெரிவித்தனர்.
 

More from the section

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த மாதம் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார் வாசன்
செப்.27-இல் மக்கள் தொடர்பு முகாம்
ரயில்வே தொழில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பூட்டிய வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு
தேசிய வேளாண் சந்தையுடன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை இணைக்க ஆலோசனை