சுகாதாரத் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் சங்கத்தினர் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் சங்கத்தினர் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 சென்னை சாலையில் உள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர்கள் ராமலிங்கம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மாவட்டத் துணைத் தலைவர் ரங்கராஜன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் மகாலிங்கம் கோரிக்கை உரையாற்றினார். மருத்துவத் துறை ஊழியர் நிர்வாக ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் அசோகன், மாநிலச் செயலாளர் பார்த்திபன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் தேசிங்கு, உணவுப் பாதுகாப்புத் துறை ரவிக்குமார், அன்பழகன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். சங்க நிர்வாகிகள் அரசுச் செயலரைச் சந்திக்க அனுமதி அளிப்பதில் சுகாதாரத் துறை இணைச் செயலாளர் சுகவனம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வது, சங்க பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணனுக்கு குற்றக் குறிப்பாணை வழங்கி சங்கத்தின் ஜனநாயக நடவடிக்கையை முடக்க முயல்வது போன்ற செயல்களை கண்டித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வட்டார மேற்பார்வையாளர்கள் பொறுப்பில் பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தினரை நியமிக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பொன்னுசாமி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com