பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

மரக்காணம் ஒன்றியம் கட்டளை கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியை புதன்கிழமை நடத்தின.

மரக்காணம் ஒன்றியம் கட்டளை கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியை புதன்கிழமை நடத்தின.
 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலிருந்து தொடங்கிய மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணிக்கு தலைமை ஆசிரியை இரா. துளசி தலைமை வகித்தார்.
 வட்டார வளமைய பயிற்றுநர் முருகன், தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் ச.சுகதேவ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, பிளாஸ்டிக் பொருள்களின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
 இதையடுத்து புறப்பட்ட பேரணி கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை பயன்படுத்தக் கூடாதெனவும் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜெயபாஸ்கர், ந.சம்பத், க.அருண்பிரபாகர ராணி, கா.தேவரூபி , அ.குப்பு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com