ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலய குருகுல மாணவிகளுக்குப் பாராட்டு

உளுந்தூர்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலய குருகுலத்தில் சுவாமி விவேகானந்தரின் 125-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலய குருகுலத்தில் சுவாமி விவேகானந்தரின் 125-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
 குருகுலத்தின் தாளாளர் யதீஸ்வரி அனந்த பிரேமப்ரியா தலைமை வகித்து எழுச்சியுரையாற்றினார். சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை குருகுல மாணவ, மாணவிகள் மிகப்பிரமாண்டமான கண்காட்சியாக அமைத்திருந்தனர்.
 சுவாமி விவேகானந்தரின் உணர்வுமிகு கருத்துகள் குறித்து சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடம் பள்ளி மாநில அளவில் நடத்திய கட்டுரைப் போட்டியில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலய குருகுல மாணவி எம்.பிருந்தா மகாலட்சுமி முதலிடத்தைப் பெற்றார். பேச்சுப்போட்டியில் மாணவி திரிஷா 3-ஆம் இடத்தைப் பெற்றார். இவர்களுக்கு கடந்த 11-ஆம் தேதி கோவை குமரகுரு கல்லூரியில் நடைபெற்ற விழாவில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் முன்னிலையில் ரொக்கப் பரிசாக ரூ.10 ஆயிரம், சான்றிதழை பத்திரிகையாளர் ரவி வழங்கினார் (படம்). போட்டிகளில் வென்ற குருகுல மாணவிகளை ஆஸ்ரம சந்நியாச சகோதரிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com