விழுப்புரம்

எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு ஆளும் கட்சிக்கு பாதகமாக அமையும்: கே.பாலகிருஷ்ணன்

தினமணி

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும், ஆளும் கட்சிக்கு பாதகமாகவே அமையும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
 விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒப்பந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்புத் தொழிலில் ஒரு லட்சம் குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், அவர்களுக்கு உரிய வளர்ப்புத் தொகை கிடைப்பதில்லை. கிலோவுக்கு ரூ.10 வளர்ப்புத் தொகையாக வழங்க வேண்டும்.
 இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர்கள், அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
 கூட்டுறவு சங்கத் தேர்தல் முறையாக நடைபெறவில்லை. ஆளும் கட்சிக்கு வேண்டியவர்கள் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், கூட்டுறவு வங்கிகள் முடங்கியுள்ளன. வைப்புத் தொகை குறைந்துள்ளது. நகைகள் போலியாக மாற்றப்பட்டுள்ளன. தேங்காய்க்குப் பதிலாக, தேங்காய் ஓடு வைக்கப்பட்டுள்ளது. இப்படி கூட்டுறவு வங்கியில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
 தமிழகத்தில் தற்போது மின்வெட்டு அதிகமாக உள்ளது. காற்றாலை மின்சாரமும் கிடையாது. தினமும் தனியாரிடம் இருந்து 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வாங்குகிறார்கள். அரசு, மின் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
 எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகள் கடந்த ஓன்றரை ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது. நான்குநேரியில் மின் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 அரசு விதிப்படி 20 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பில் இருக்க வேண்டும். ஒரு நாளுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை.
 ஆனால், நிலக்கரி இருப்பு இல்லாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் மின் உற்பத்தி இல்லை.
 பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடங்கி, அனைத்துத் துறைகளிலும் நியமனங்களுக்கு லஞ்சம், பணியிட மாற்றத்துக்கு லஞ்சம் என்ற நிலையே தொடர்கிறது.
 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வந்தால், தமிழகத்துக்கு விமோசனம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
 சட்டப்பேரவைத் தலைவரின் உத்தரவு சொல்லும் என்று தீர்ப்பு வந்தால் 18 தொகுதிகளுக்கு மீண்டும் தேர்தல் வரும். அது சிறிய பொதுத் தேர்தல் போல இருக்கும். அவரது உத்தரவு செல்லாது என்று வந்தாலும், அதுவும் இந்த அரசுக்கு எச்சரிக்கையாகவே அமையும். தீர்ப்பு எப்படி வந்தாலும் ஆளும் கட்சிக்கு பாதகமாகவே இருக்கும் என்றார் பாலகிருஷ்ணன்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT