விழுப்புரம்

குடிநீர் பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்

DIN


மேல்மலையனூர்அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேல்மலையனூர் வட்டம், கெங்கபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் காலனிப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கிணற்றில் தண்ணீர் வற்றிவிட்டது. மேலும் மின் மோட்டாரும் பழுதடைந்து விட்டதால், கடந்த ஒரு மாதமாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக பெரும் அவல நிலைக்கு உள்ளாகினர்.
இது குறித்து மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் சனிக்கிழமை காலை வளத்தி தேவனூர் கூட்டுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து தடைபட்டது.
தகவல் அறிந்த மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திருவேங்கடம், வளத்தி காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் போலீஸார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மின்மோட்டாரை சரிசெய்தும், கிணற்றை தூர்வாரியும் விரைவில் தண்ணீர் வழங்குவதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT