பதிவுத் துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாநில நிர்வாகிகள் தேர்தல்

தமிழ்நாடு பதிவுத் துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்


தமிழ்நாடு பதிவுத் துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்

விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் விக்கிரவாண்டி
சார்-பதிவாளர் கி.உதயசூரியன் தேர்தல் ஆணையராகவும், சார்-பதிவாளர்கள் ஞா.ஜெயக்குமார், ஜி.சண்முகசுந்தரம் ஆகியோர் துணை ஆணையர்களாகவும் செயல்பட்டு தேர்தலை நடத்தினர்.
சங்கத்தின் மாநிலத் தலைவர், மாநிலச் செயலாளர், மாநில பொருளாளர், துணைத் தலைவர்கள், இணைச் செயலர்கள் உள்ளிட்ட 11 பதவிகளுக்கு நடைபெற்ற இந்தத் தேர்தலில் இரு அணிகளில் இருந்து

22 பேர் போட்டியிட்டனர்.
பதிவுத் துறையில் மாநிலம் முழுவதும் உள்ள அமைச்சுப் பணியாளர்கள் வாக்களித்தனர்.
தேர்தல் பார்வையாளர்களாக தென்சென்னை உதவி பதிவுத் துறைத் தலைவர் ஆர்.ரவிந்திரநாத், மாவட்ட பதிவாளர் எம்.முத்துக்கண்ணன் ஆகியோர் செயல்பட்டனர்.
மாலை வரை நடைபெற்ற தேர்தலில் சங்கத்தில் மொத்தம் உள்ள அமைச்சுப் பணியாளர்கள் 1,837 பேரில், 1,140 பேர் வாக்களித்தனர்.
இதன் பிறகு, வாக்குகள் எண்ணும் பணி இரவு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com