சட்டம் ஒழுங்கில் தீவிர கவனம் செலுத்தப்படும்: கள்ளக்குறிச்சி புதிய டிஎஸ்பி உறுதி

சட்டம்-ஒழுங்கை காப்பதில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற ந.ராமநாதன் தெரிவித்தார்.

சட்டம்-ஒழுங்கை காப்பதில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற ந.ராமநாதன் தெரிவித்தார்.
 கள்ளக்குறிச்சி உட்கோட்ட புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக ந.ராமநாதன் திங்கள்கிழமை பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இங்கு பணிபுரிந்து வந்த வி.கோமதி கடலூர் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவிற்கு மாறுதலாகிச் சென்றார்.
 கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற ந.ராமநாதன் கூறியதாவது: சட்டம்-ஒழுங்கில் தீவிர கவனம் செலுத்தப்படும். கள்ளச் சாராய விற்பனை, கடத்தல் முற்றிலும் தடுக்கப்படும். நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்படும். பொதுமக்கள் எந்த நேரத்திலும் செல்லிடப்பேசி மூலமோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு என்னிடம் பிரச்னைகளை தெரிவிக்கலாம் என்றார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com