விழுப்புரம்

குடிநீர் பிரச்னை: பெண்கள் சாலை மறியல்

DIN

செஞ்சி அருகே குடிநீர் விநியோகம் செய்யக் கோரி, காலிக் குடங்களுடன் பெண்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செஞ்சி ஒன்றியம், பெருங்காப்பூர் காலனி பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. 
இவர்களின் தேவைக்காக இரு இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைத்து சின்டெக்ஸ் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இவ்விரு மோட்டார்களும் 3 மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து விட்டதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து, இப் பகுதி மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், 
அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் பெருங்காப்பூர்-செஞ்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ மறியலில் ஈடுபட்டவர்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார். செஞ்சி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் குலோத்துங்கன், வரதராஜன் உள்ளிட்ட அலுவலர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 
மின் மோட்டார்களை உடனடியாக பழுது நீக்கம் செய்து குடிநீர் வழங்குவதாக எம்எல்ஏ மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் உறுதி அளித்தனர். 
இதனைத் தொடர்ந்து, மறியலைக் கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

ஜோதிட சூட்சுமங்களும் - நம்பிக்கை தாண்டிய உண்மையும்!

SCROLL FOR NEXT