4,038 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்காக வாக்குச் சாவடிகளுக்கு 4,038 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்காக வாக்குச் சாவடிகளுக்கு 4,038 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் 3,227 வாக்குச் சாவடிகளில் 15 ஆயிரத்து 673 வாக்குச் சாவடி அலுவலர்கள் வியாழக்கிழமை (ஏப்ரல் 18) நடைபெறும் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். முன்னதாக, சட்டப் பேரவைத் தொகுதிகள் வாரியாக தேர்வு செய்யப்பட்ட இந்த அலுவலர்களுக்கு 3 கட்டப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இறுதிகட்டப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மையத்தில் பயிற்சி நடைபெற்றது. இதில், தேர்தல் பணியில் பங்கேற்க உள்ள வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் இதர 4 நிலை அலுவலர்கள் என மொத்தம் 1,379 பேர் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கு எந்த ஊர் வாக்குச் சாவடியில் பணி ஒதுக்கியுள்ளார்கள் என்பதற்கான பணி ஆணைகளை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான குமாரவேல் வழங்கினார். இதையடுத்து, பணி ஆணைகளைப் பெற்ற வாக்குச் சாவடி அலுவலர்கள் அங்கிருந்து வாக்குச் சாவடிகளுக்குப் புறப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபாட் சாதனங்கள் 'சீல்' வைக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டு, 284 வாக்குச் சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கூடிய வாகனத்ததில் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது.
இதேபோல, விக்கிரவாண்டியிலிருந்து 275 வாக்குச் சாவடிகளுக்கும், வானூரிலிருந்து 277 வாக்குச் சாவடிகளுக்கும், திண்டிவனத்திலிருந்து 264 வாக்குச் சாவடிகளுக்கும், திருக்கோவிலூரிலிருந்து 286 வாக்குச் சாவடிகளுக்கும், உளுந்தூர்பேட்டையிலிருந்து 337 வாக்குச் சாவடிகளுக்கும், கள்ளக்குறிச்சியில் இருந்து 330 வாக்குச் சாவடிகளுக்கும் அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இயந்திரங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த வகையில், 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பணிபுரியும் 15,673 அலுவலர்களுக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டு, 3,227 வாக்குச் சாவடிகளுக்கான 4,038 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 4,167 விவிபாட் சாதனங்களும் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com