தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் இன்று விடுமுறை

மக்களவைத் தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது புகார் தெரிவிக்க தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராமு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தலையொட்டி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில், தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க ஏதுவாக, தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் உள்பட அனைத்து தனியார், பொதுத் துறை நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் தற்காலிக, ஒப்பந்த, தினக்கூலி ஊழியர்களுக்கு ஊதியத்துடன்  கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
அப்படி, விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இதுகுறித்து மாநில அளவில் புகார் தெரிவிக்க 9600198875, 9786810097, 8778270221 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும், விழுப்புரம் மாவட்ட அளவில் புகார் தெரிவிக்க 04146 - 226324 மற்றும் 9442068215 ஆகிய எண்களிலும் 
தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com