மத்திய, மாநில அரசுகள் தொடர அதிமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பு

மத்திய, மாநில அரசுகள் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளதாக பாமக நிறுவனர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.

மத்திய, மாநில அரசுகள் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளதாக பாமக நிறுவனர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.
 விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள மரகதாம்பிகை மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு பாமக நிறுவனர் ச.ராமதாஸ், அவரது மனைவி சரஸ்வதி மற்றும் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது, ராமதாஸ் கூறியதாவது:
 மத்திய, மாநில அரசுகள் தொடர வேண்டும் என்ற மனநிலையோடு மக்கள் வாக்களித்துள்ளனர். தமிழகம், புதுவை உள்ளிட்ட 39 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.
 இந்தியா முழுவதும் குடிமக்களின் கடமையும், உரிமையும் கருதி, 95 சதவீதத்துக்கு மேல் வாக்களிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. எந்தக் கட்சி எத்தனையாவது இடம் வரும் என்பதை தற்போது கணிக்க முடியாது என்றார் அவர். அப்போது, விழுப்புரம் மக்களவை (தனி) தொகுதி பாமக வேட்பாளர் எஸ்.வடிவேல்ராவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 அன்புமணி: முன்னதாக, இதே வாக்குச் சாவடியில் காலை 8.30 மணிக்கு பாமக இளைஞரணித் தலைவரும், தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ், தனது மனைவி செüமியாவுடன் வந்து வாக்களித்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 வலிமையான இந்தியா, வளமான தமிழகம் உருவாக அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்தது குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விசாரணை நடத்தி தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. பணம் விநியோகித்த வேட்பாளரை நீக்கி தேர்தலை நடத்தி இருக்கலாம்.
 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை விவிபாட் கருவி மூலம் நேரடியாகப் பார்க்க முடிந்தது வரவேற்கக் கூடியது. இருந்தபோதிலும், உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் வாக்குச் சீட்டு முறையை ஆய்வு செய்து, தேர்தல் ஆணையம் சீர்திருத்தம் செய்யலாம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com