சமூக நலத் துறை சேவை மையத் திட்ட பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்ட சமூக நலத் துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத் திட்டத்தில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்


விழுப்புரம் மாவட்ட சமூக நலத் துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத் திட்டத்தில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை மூலம்,  விழுப்புரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்  திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. திட்டத்தை செயல்படுத்த மாவட்ட அளவில் 7 பேரை பணி நியமனம் செய்ய சென்னை சமூகநல ஆணையர் தெரிவித்துள்ளார்.  
இதனால்,  தகுதியான நபர்கள்,  விண்ணப்பங்களை 25.02.2019க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 
ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி பணிக்கு,  முதுநிலை சமூக பணி முடித்திருக்க வேண்டும்.  மாத ஊதியம் ரூ.30 ஆயிரம்.   மூத்த ஆலோசகர் பணிக்கு முதுநிலை சமூக பணி முடித்திருக்க வேண்டும்.  மாத ஊதியம் ரூ.20 ஆயிரம்,  2 அலுவலக பணியாளர் இடங்களுக்கு,  இளநிலை சமூக பணி முடித்திருக்க வேண்டும். 
 மாத ஊதியம் ரூ.12 ஆயிரம்.  ஒரு தகவல் தொடர்பு அலுவலர் பணிக்கு,  இளநிலை கணினி அறிவியல் முடித்திருக்க வேண்டும்.  மாத ஊதியம் ரூ.18 ஆயிரம்.  உதவியாளர் பணிக்கு ரூ.6,400,  ஓட்டுநர்,  காவலர் பணிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.  
மேலும்,  விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை, 04146-222288 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com