செஞ்சி, வல்லம் பகுதிகளில் புதிய அரசுக் கட்டடங்கள்: அமைச்சர் திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை,  ஊரக வளர்ச்சித் துறை சார்பில், செஞ்சி, வல்லம், மயிலம் ஊராட்சி ஒன்றியங்களில் புதிதாக கட்டப்பட்ட பல்வேறு அரசுக் கட்டடங்களை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முக


விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை,  ஊரக வளர்ச்சித் துறை சார்பில், செஞ்சி, வல்லம், மயிலம் ஊராட்சி ஒன்றியங்களில் புதிதாக கட்டப்பட்ட பல்வேறு அரசுக் கட்டடங்களை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சி அணிலாடி கிராமத்தில்  ஊரக வேலை உறுதித் திட்டம் 2015-16-ன் கீழ், ரூ. 17 லட்சம் செலவில் கட்டப்பட்ட கிராம ஊராட்சி சேவை மையக் கட்டடத்தையும், இதே திட்டத்தின் கீழ், 2017-18ன் கீழ் தலா ரூ. 15 லட்சம் செலவில் மயிலம் ஊராட்சி அகூர், நடுவந்தல், டி.கேணிப்பட்டு ஊராட்சியிலும், செஞ்சி ஊராட்சி பரதன்தாங்கல் ஆகிய கிராமங்களிலும் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சிமன்ற அலுவலக கட்டடங்களையும், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில்,  மயிலம் ஊராட்சியில் ரூ. 23.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகக் கட்டடத்தையும் அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார். 
மேலும், கூட்டுறவுத் துறை சார்பில் ஆலம்பூண்டி, கூட்டேரிப்பட்டு, மேல்சேவூர், மேல்ஒலக்கூர், நடுவனந்தல், நாகந்தூர், பாதிராப்புலியூர் ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ. 15 லட்சம் செலவில் கட்டப்பட்ட தானியக் கிடங்குகளையும், விழுக்கம், நல்லாண்பிள்ளைபெற்றாள் ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ. 20 லட்சம் செலவில் கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக கட்டடங்களையும், செஞ்சி கூட்டுறவு வங்கியில் அமைக்கப்பட்ட அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடியையும் அமைச்சர் திறந்து வைத்துப் பேசினார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வருவாய் அலுவலர் இரா.பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வெ.மகேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர்கள் பாலகிருஷ்ணன், மலர்விழி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மனோகரன், மக்களவை உறுப்பினர்கள் வெ.ஏழுமலை, சு.ராஜேந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.சக்கரபாணி, இரா.மாசிலாமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுந்தரேசன், திண்டிவனம் வட்டாட்சியர் பிரபுவெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com