சிறு, குறு விவசாயிகளுக்கு நிதியுதவி: விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி

விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமர் சிறு, குறு விவசாயிகளுக்கான நிதி உதவித் திட்டத்துக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (பிப். 19) இறுதி நாளாகும்.இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட

விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமர் சிறு, குறு விவசாயிகளுக்கான நிதி உதவித் திட்டத்துக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (பிப். 19) இறுதி நாளாகும்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 

பிரதமர் சிறு, குறு விவசாயிகளுக்கான நிதி உதவித் திட்டத்தின் கீழ்,  2 ஹெக்டேர் அளவுள்ள (5 ஏக்கருக்குள்) சாகுபடி நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு,  ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் (நான்கு மாதங்களுக்கு ஒருமுறை)  3 தவணையாக வழங்கப்பட உள்ளது.  

இந்தத் திட்டத்துக்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் பலர் தகுதியுடைய பயனாளியாக இருந்தும் இதுவரை விண்ணப்பிக்காமல் உள்ளனர். 

அவ்வாறு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தங்களுடைய நிலத்துக்கான சிட்டா நகலுடன்,  ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல்களுடன் 19.2.2019-க்குள்  கிராம நிர்வாக அலுவலரை அணுகி,  இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com