பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் 

நாடு தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டத்தில் பிஎஸ்என்எல் தொழிற் சங்க கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர். இதனால் கட்டண வசூல் உள்ளிட்ட பணிகள்

நாடு தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டத்தில் பிஎஸ்என்எல் தொழிற் சங்க கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர். இதனால் கட்டண வசூல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. 
 பிஎஸ்என்எல் தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள், அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பினர்,  ஊழியர்களுக்கான 
3-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்துதல், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர். இதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலும்  பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.  
விழுப்புரம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திரண்டபிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம், அதிகாரிகள் சங்க கூட்டமைப்பினர் அலுவலக வாயில் கதவை மூடி போராட்டத்தை தொடங்கினர். பின்னர், அலுவலகம் எதிரே வேலை நிறுத்த விளக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு தலைவர் கணேசன் தலைமை வகித்தார். குமார்,  சண்முகம்,  சுந்தரம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்துப் பேசினர்.
விழுப்புரம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 100 பேரில்,  சுமார் 50 ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதேபோல, கள்ளக்குறிச்சி, திண்டிவனம்,  செஞ்சி, உளுந்தூர்பேட்டை, அரகண்டநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகங்களில் பணியாற்றும் 900 பேரில் 300-க்கும் மேற்பட்டோர்,  வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால், கட்டணம் வசூல், புகார்கள் மீதான பழுது நீக்கப் பணிகள்,  செல்லிடப்பேசி ரீசார்ஜ் போன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com