வருவாய்த் துறையினர் மீதான நடவடிக்கையை கைவிட வலியுறுத்தல்

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தால் வருவாய்த் துறையினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அந்தத் துறை அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 


ஜாக்டோ - ஜியோ போராட்டத்தால் வருவாய்த் துறையினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அந்தத் துறை அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
விழுப்புரத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின்  மத்திய செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் கே.குமரேசன் தலைமை வகித்தார். மத்திய செயற்குழு உறுப்பினர் ஆர்.பாலசுப்பிரமணியன், மாநிலப் பொதுச் செயலர் எஸ்.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.
சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர்கள் ஆர்.மங்களபாண்டியன்,  கே.பாலமுருகன்,  ஏ.வாசுதேவன்,  மாநிலச் செயலர்கள் பி.முருகையன், கே.தமிழ்மணி, ஜே.ராமகிருஷ்ணன், எல்.பிரேம்சந்த், வ.மூர்த்தி உள்ளிட்டோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர்.  விழுப்புரம் மாவட்டத் தலைவர் கணேசன், செயலர் சங்கரலிங்கம்,  பொருளாளர் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட 32 மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்ற 28 வருவாய்த் துறை ஊழியர்கள் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  பிரதமர் விவசாயிகள் நிதி உதவி வழங்கும் திட்டத்துக்கு நிர்வாகச் செலவினங்கள், கணக்கெடுப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  
மக்களவைத் தேர்தலை காரணம் காட்டி,  எப்போதும் இல்லாத வகையில், வட்டாட்சியர் நிலை அலுவலர்களை வெளி மாவட்டங்களுக்கு மாற்றுவதைக் கைவிட வேண்டும், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தால்,  வருவாய்த் துறையினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், துணை ஆட்சியர் பதவி உயர்வை அளிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை (பிப். 25) அனைத்து மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து முறையிட்டு,  உயரதிகாரிகளுக்கு தகவல் அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கோ.இளங்கோவன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com