விழுப்புரம்

சிறப்பாகப் பணியாற்றிய போலீஸாருக்கு வெகுமதி

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மது விலக்கு காவல் ஆய்வாளர் உள்பட 8 போலீஸாருக்கு வெகுமதி வழங்கி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் திங்கள்கிழமை பாராட்டினார்.
 விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் போலீஸார் "மெச்சத்தகு நற்பணியாற்றியவர்கள்' என்ற பெயரில் வாரந்தோறும் தேர்வு செய்யப்பட்டு, பாராட்டப்பட்டு வருகின்றனர்.
 அந்த வகையில், பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த சாராய வியாபாரியை விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு தலைமைக் காவலர் ரேணுகாதேவி தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
 இதையடுத்து, காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி, உதவிக் காவல் ஆய்வாளர்கள் செந்தில்குமார், சீத்தாபதி, கெடார் தலைமைக் காவலர் சௌந்தர்ராஜன் ஆகியோரை திங்கள்கிழமை நேரில் அழைத்து எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டி, வெகுமதி வழங்கினார்.
 இதேபோன்று, திண்டிவனம் பேரூராட்சிக்கு உள்பட்ட ஒழுங்குமுறை விற்பனை நிலையம் உள்ளிட்ட இடங்களில் 25 கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுத்த வெள்ளிமேடுப்பேட்டை தனிப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பிரத்தியுமனன், மயிலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சதானந்தம், எலவனாசூர் கோட்டைப் பகுதியில் உள்ள செம்பியமாதேவியில் விபத்துகளைத் தடுக்க 12 ஒளிரும் மின் விளக்குகள், 4 கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுத்த திருக்கோவிலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானவேல், எலவனாசூர் கோட்டை உதவிக் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் எஸ்.பி. ஜெயக்குமார் வெகுமதி வழங்கி, பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT