கடலில் மூழ்கி கேபிள் ஆபரேட்டர் சாவு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடல் அலையில் சிக்கிய மகனைக் காப்பாற்றச் சென்ற கேபிள் ஆபரேட்டர், கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடல் அலையில் சிக்கிய மகனைக் காப்பாற்றச் சென்ற கேபிள் ஆபரேட்டர், கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
புதுச்சேரி சஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் தர்மன் மகன் குணசேகரன் (45). கேபிள் டிவி ஆபரேட்டர். இவர் தனது மகன் மோகன்தாஸ் (15), உறவினரான சங்கர் மகன் ராகவன்(15), கார் ஓட்டுநரான ஜெ. லோகேஷ் (25) ஆகியோருடன் காணும் பொங்கலை கொண்டாட, கோட்டக்குப்பம் அருகேயுள்ள தந்திராயன்குப்பம் கடற்கரைக்கு வியாழக்கிழமை சென்றார்.
கடலில் குளித்த போது, மோகன்தாஸும், ராகவனும் ராட்சத அலையில் சிக்கிக் கொண்டனர். 
அவர்களைக் காப்பாற்ற குணசேகரனும், லோகேஷும் முயற்சித்த போது அவர்கள் கடலில் மூழ்கினர்.
கடலில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் நால்வரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் மோகன்தாஸ், ராகவன், லோகேஷ் ஆகியோர் உடனடியாக மீட்கப்பட்டனர்.
 தீவிர முயற்சிக்குப் பிறகு குணசேகரன் மீட்கப்பட்டார். பின்னர், நால்வரும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். 
குணசேகரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோட்டகுப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு: திண்டிவனம் அருகேயுள்ள நல்லாவூரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் கஜேந்திரன் (48). சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். 
பொங்கல் பண்டிகைக்காக நல்லாவூருக்கு வந்த அவர், புதன்கிழமை மாலை வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நல்லாவூரிலுள்ள குளத்தில் கஜேந்திரனின் சடலம் மிதப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது. 
கிளியனூர் போலீஸார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com