மத அரசியல்-9: இஸ்லாம் தத்துவப் பிரிவுகள்

மத அரசியல்-9: இஸ்லாம் தத்துவப் பிரிவுகள்

ஃபிகா / ஃபிக்ஹ் (FIQH) 

நபிகள் உயிர் வாழ்ந்த வரைக்கும் குரானும், அவருடைய வாக்குமே எல்லாப் பிரச்னைகளையும் தீர்க்கப் போதுமானவையாக இருந்தன. நபிகள் மறைவுக்குப் பின், அவருடைய நடவடிக்கைகள் சுன்னத் அல்லது நன்னடத்தி அத்தாட்சிகளாகக் கருதப்பட்டன. ஃபிகா எனும் மத நூல் இஸ்லாமிய உப சட்டங்களாக கருதப்படுகிறது. ஃபிக்ஹ் என்பதன் அடிப்படைப் பொருள் – ஆழமாக ஒன்றைப் புரிந்து கொள்ளுதல் என்பதாகும்.

இமாம் அபூஹனீஃபா (ரஹ்) (கி.பி.699-767) (Abū Ḥanīfa al-Nuʿmān)

இமாம் அபூஹனீஃபா மெசபடோமியாவிலுள்ள கஃபாவைச் சேர்ந்தவர். இவரைப் பின் தொடர்பவர்களை “ஹன்ஃபீ” என்கின்றனர். இந்தியாவில் இவர்களே அதிகம். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம் என்பதை அறியாமல், எங்கள் சொல்லை எடுத்து நடப்பது ஹலால் இல்லை. (ரஸ்முல் முஃப்தீ)

‘ஒவ்வொரு புதிய வி'யத்தையும் விட்டுவிடுங்கள். அவைகள் பித்அத்கள் ஆகும். எங்களை கண்மூடிப் பின்பற்றாதீர்கள். அல்குர்ஆனையும், ஹதீஸையுமே பின்பற்றுங்கள்.’ (நூல்: மீஸானுல் குப்ரா பாகம்-01, பக்கம்-58 )

‘அல்லாஹ்வுடைய வேதத்திற்கும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் மாற்றமாக நான் ஒன்றைச் சொன்னால் என்சொல்லை விட்டுவிடுங்கள். அல்குர்ஆனையும், ஹதீஸையுமே  பின்பற்றுங்கள்.’ (நூல்: ஈகாழுல் ஹிமம், பக்கம்-50)

‘என்னுடைய ஆதாரத்தை அறியாதவன், என்சொல்லைக் கொண்டு  மார்க்கத்தீர்ப்பு அளிப்பது ஹராம்.’ (நூல்: மீஸான் ‘ஃரானி பாகம்-01, பக்கம்-55)

‘ஓர் ஆதாரப்பூர்வமான நபிமொழி கிடைத்தால் எனது வழிமுறைக்கு மாற்றமாயிருந்தாலும் அதனை  (நபிமொழி  யை)யே  பின்பற்றுங்கள்.’ (நூல்: ஆலம்கிரியின் முன்னுரை பாகம்-01, பக்கம்-12) என இமாம் அபூஹனீபா அவர்கள் கூறுகின்றார்கள்:

இமாம் மாலிக் (ரஹ்) (கி.பி.715-795) (Malik ibn Anas)

இமாம் மாலிக் மதீனாவைச் சேர்ந்தவர். இவரை பின்பற்றுபவர்கள் “மாலிகீ’ எனப்படுகின்றனர். ஸ்பயினிலும் மொராக்கோவிலும் முதலில் முஸ்லீம்கள் அனைவரும் “மாலிக்கீ’ களாக இருந்தனர். இமாம் மாலிக் நபிகள் வாக்கியங்களை (ஹதீஸ்), மதத்தைப் பற்றிய முடிவுகள் எடுக்கும் போது, மிக அதிகமாக அடிப்படையாகக் கொண்டார். இதன் விளைவாக இஸ்லாமிய பண்டிதர்கள் நபிகள் வாக்கியங்களைத் திரட்ட ஆரம்பித்தனர். பிற்காலத்தில் இவர்கள் செல்வாக்கு மிகுந்த குழுவாக “அஹ்லே ஹதீஸ்’ எனப்பட்டனர்.

நான் (சில நேரங்களில்) சரியாகவும் (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன்;. எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள்! அவற்றில் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் பொருத்த மில்லாதவற்றை விட்டு விடுங்கள். (உஸுலுல் அஹ்காம் ப:294 பா:6)  நான் சிலவேளைகளில் சரியாகவும், சிலவேளைகளில் பிழையாகவும் முடிவெடுக்ககூடிய ஒரு மனிதன். எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள். அல்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் உட்பட்டவைகளை  எடுத்துக் கொள்ளுங்கள். அல்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மாற்றமானவைகளை விட்டுவிடுங்கள்.’ (நூல்: ஈகாழுல் ஹிமம், பக்கம் 62) என இமாம் மாலிக் கூறுகிறார்கள்

இமாம் ஷாஃபயீ (ரஹ்)  (கி.பி 767-820) (Abdullāh Muhammad ibn Idrīs al-Shāfiʿī)

ஷாஃபயீ காஸாவில் பிறந்தவர். “ஷாஃபயீ” என்னும் மூன்றாவது மதநூல் பிரிவை ஏற்படுத்தினார். இக்குழு நபிகளின் நன்னடத்தையை வலியுறுத்துகிறது. எனது நூலில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானதைக் கண்டால், நபி (ஸல்) அவர்களின் வழி முறையையே (மக்களிடம்) கூறுங்கள், என் கூற்றை விட்டு விடுங்கள். (அல்மஜ்மூஃ பாகம் – 1 பக்கம் – 63) என இமாம் ஷாஃபயீ கூறுகிறார்கள்.

இமாம் அஹ்மத் பின் ஹன்பல்  (Ahmad ibn Hanbal)

அஹ்மத் பின் ஹன்பல் “ஹம்பலியா’ என்னும் நான்காவது பிரிவைத் தோற்றுவித்தார். இப்பிரிவு கடவுளை உருவமுடையவராகக் கருதுகிறது.

‘ஆதாரபூர்வமான நபிமொழிகளையே பின்பற்றுங்கள். யார் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை விட்டுவிட்டு மற்றவர்களின் அபிப்பிராயங்களை பின்பற்றுகின்றார்களோ அவர்கள் அழிவின் விளிம்பில்தான் இருக்கின்றார்கள்.’ (நூல்: இப்னுல்கய்யிம் பாகம் 02, பக்கம் 302)

இஸ்லாம் தத்துவப் பிரிவுகள்

1.மோத்ஜலா பிரிவு
இப்பிரிவினைத் தோற்றுவித்தவர் அல்லாப் ஆவார். இவர்களின் கொள்கைகள்:

  • 1.ஜீவன் செயலாற்றுவதில் சுதந்திரம் படைத்தது
  • 2.கடவுள் நல்லவைகளுக்கு மட்டுமே பிறப்பிடமானவர்
  • 3.கடவுள் குணநலன்களற்றவர்
  • 4.கடவுளின் சர்வ வல்லமை எல்லைக்குட்பட்டது
  • 5. கடவுளின் அற்புதங்கள் என்பது தவறாகும்
  • 6. உலகம் தொன்றுதொட்டு இருப்பதல்ல
  • 7.குரானும் அனாதியானதல்ல

மோத்ஜலா பிரிவை அல்லாஃப் அபுல் ஹூஸைல் அல் அல்லாஃப், நஜ்ஜாம், ஜஹீஜ், முவம்மர், அபூ ஹாஷிம் பஸ்ரீ போன்ற ஆசாரியர்கள் போற்றி வந்தனர்.

2.கராமி பிரிவு 
இப்பிரிவை நிறுவியவர் ஈரான் ஸீஸ்தானைச் சேர்ந்த முகம்மது பின் கரீம் ஆவார். மோத்ஜலா பிரிவினர் குரானை தம்மிச்சைப்படி விளக்கியதைப் பார்த்து, முஸ்லீம் பக்தர்கள் வரவிருக்கும் அபாயத்தை உணர்ந்து மோத்ஜலீக்களுக்கு எதிராக குரலெழுப்பினர். ஆலுல் இப்னகராம் கடவுளை ஒரு மனைதராகவே-மன்னராகவே பிரகடனப்படுத்தினார்.

3.அஷரி பிரிவு
மோத்ஜலிக் குடும்பமொன்றில் பிறந்தவர் அபுல் ஹஸன் அஷரி (கி.பி873-935). அஷரி பிரிவினரின் சில கொள்கைகள்:

  • 1. காரண-காரிய விதியை மறுத்தல்
  • 2. கடவுளின் குரலான “குரான்” ஒன்று மட்டுமே அத்தாச்சி
  • 3. கடவுள் அனைத்து விதிகளுக்கும் அப்பாற்பட்டவர்

கிழக்கிந்திய இஸ்லாமிய அறிஞர்கள்

1.அஜூத்தின் ராஜி (கி.பி.923)
மேற்கு ஈஇரானிலுள்ள “ரே” நகரத்தில் பிறந்தவர்.
2. அபூயாகூப் கீந்தி (கி.பி.870)
கிந்தா எனும் அரேபிய இனக்கூட்டத்துடன் தொடர்புடையவர். 
3. அபூநஸ்ர ஃபாராபி (கி.ப்870-950)
ஃபாரபி ஆமூ நதிக்கரயிலிருந்த வஸிஜ்ஜில் ஒரு சிறு கோட்டையில் படைத்தளபதியாக அபூ நஸ்ரவின் தந்த இருந்தார். கீந்திக்குப் பிறகு இஸ்லாமிய தத்துவ வளர்ச்சியில் முக்கிய இடம் வகிப்பவர்.
4. பூவலி மஸ்கவியா (கி.பி 1030)
சுல்தான் அதூதத்தௌலாவின் பொருள் காப்பாளராக இருந்தவர்.
4. பூவலி ஸீனா (கி.பி 980-1037)
பூவலி புகாராவுக்கு அருகில் அப்ஷனில் பிறந்தவர். இவரது ஷஃபா 2. இஷாராத 3. நஜாத் முக்கிய நூல்கள்.

புனித சங்கம்

மோத்ஜலாஅ, கராமி, அஷரி ஆகிய மூன்று பிரிவினருமே தத்துவயியலுக்கு துரோகம் புரிந்தவர்கள். அதன் பின் பஸ்ரா நகரில் பலமான ஆதரவாளர்கள் தோன்றினர்.
1, முதிய இப்ன மைமூன் (கி.பி,850)
2.முகத்தஸீ
3.ஜஞ்ஜானி
4.நஹ்ராஜூரி
5.அபுஃபீ
6.ரிஃபாவ்

மதவாதத் தத்துவ அறிஞர்கள்

முகமது கஜாலி (கி.பி. 1059-1111)
கஜாலி கி.பி.1050 இல் தூஸ் (ஸீஸ்தான்) நகரின் தாஹிரானில் பிறந்தவர். கஜாலியில் மிகச்சிறந்த நூல்கள் 1. தோஹபதுல் ஃபிலாஸஃபா 2. அஹ்யாவும் உலூம் ஆகும்

அபூபகர் முகமத் இப்ன பாஜா (கி.பி 1130)

இப்ன பாஜா ஸ்பெயினில் ஸர்கோஸா நகரில் பதினொன்றாம் நூற்றாண்டு இறுதியில் பிறந்தவர். இவரது “தத்பீருல் முத்வஹ்ஹத்”, ஹயாதுல் மோத்ஜல் போன்ற நூல்கள் முக்கியமானவை.

அபூவலீத் முகமத் இப்ன ரோஷ்த் (கி.பி1126-1198)

இப்ன ரோஷ்த் கி.பி1126 –இல் ஸ்பெயினில் கார்தோவாவில் பிறந்தவர். ரோஷ்த் தத்துவ நூல்கள் 28, மருத்துவம் 20, மத நூல் 8, தர்க்கவியல் 6, ஜோதிடமும் கணிதமும் 4, அராபிய இலக்கணம் 2 ஆக 68 நூல்கள் எழுதியுள்ளார்.

மூஸா இப்ன மைமூன் (கி.பி 1135-1208)

இப்ன மைமூன் ரோஷ்த பிறந்த கார்த்தோவாவில் பிறந்தவர். இவர் யூத குடும்பத்தில் பிறந்தவர்.

யூசுப் இப்ன யஹ்யா (கி.பி.1191)

இவர் மொராக்காவைச் சேர்ந்த யூதர். ரோஷ்த் நூல்களைப் பரப்புவதில் தன் கடமையைச் செய்தார்.

இப்ன கல்தூன் (கி.பி 1332)

வட ஆப்ரிக்காவிலுள்ள டூனிஸ் நகரில் பிறந்தார். ஜீவன் இயற்கையாகவே ஞானமற்றது என்று கருதுகிறார்.

786

இறைவனின் திருப்பெயரை போற்றும் 'பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்' என்ற இஸ்லாமியர்களின் அரபு வார்த்தைக்களுக்கான எண்களின் கூட்டுத்தொகைதான் (Numeric value) 786.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com