அரசியல் பயில்வோம்!

மத அரசியல்-19: வேத மதம்

சி.பி.சரவணன்

வேத மதம் (Vedism/ Vedic religion)

வேத மதமே ஆரியர்களின், ஆரிய குடும்பத்தின் முதல் மதமாகும். பிராமண மதம் அதிலிருந்து பிறந்தது. இயற்கைதான் கடவுள். துரத்தும், உலுக்கும் சக்தி தான் கடவுள். நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய் அதற்கு நாம் கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்ததால் வேதம் உண்டாயிற்று. உற்றுப் பார்த்து சிந்தித்து சிந்தனையாளர்களால் நாகரிகம் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கியது.

‘இந்த உலகமே தெய்வம் தான். நாம் மகிழ்ச்சியாக வாழத்தான் தெய்வத்தைப் பயன்படுத்த வேண்டும்” - வேதம்.

“Civilisation never born, but, it is the heritage of humanity” என பிற்பாடு அமெரிக்க அறிஞர் ப்ரைஸ் சொன்னது போல் தொட்டுத் தொடர்ந்தது நாகரிகம். முதலில் இயற்கையைப் பார்த்துப் பயந்த மனிதர்களுக்கு சிந்தனை செய்து உற்றுப் பார்த்த மனிதனான ரிஷி அறிவுரை சொன்னது “பயப்படாதே, நீயும் நானும் நன்றாக வாழ வேண்டும். அதற்கு இந்த மரத்தைப் பயன்படுத்துவோம். நதிகளைப் பயன்படுத்துவோம். இயற்கை நமக்காகத்தான் வேதம் என்ற ஒரு கட்டுப்பாடு மிக்க கலாசாரத்தைக் கொண்டு வந்தது. ஆரிய இனத்தவர்கள் என வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும் இம்மனிதர்களிடையே இப்படித்தான் வேத மதம் பிறந்தது. இந்த நல்லெண்ண சிந்தனை வளர்ந்து மெருகேற்றியதுதான் சமூக அமைப்பு. கலாசாரத்தைக் கட்டிக் காப்பாற்ற ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும். வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழ கற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

வேதங்கள்

ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகியவற்றின் அடிப்படையில் வேதங்கள் கருதப்பட்டன. அதர்வண வேதத்தை பிற்காலத்தில் தான் அது நான்காவது வேதமாகச் சேர்க்கப்பட்டது. இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும். அவை -  அறம், பொருள், இன்பம், வீடு என்பவையாகும்.  

நான்மறை வேதங்கள்: 

  • ரிக் வேதம்
  • யஜுர் வேதம்
  • சாம வேதம்
  • அதர்வண வேதம்

என்பனவாகும். வேதங்கள் நான்கு என வகுத்தவர் வியாஸர். வேதங்களை "சுருதி, மறை" எனவும் கூறுவர்.

வேதக் கடவுளர்கள் (Vedic Gods)

பிரம்மன்

வருணன்
 

வருணன் அல்லது வருண தேவன் வேதகாலத்தில் மிகச் சிறப்புப் பெற்றிருந்த தேவர்களில் ஒருவர். வேதகாலத்தில் சிறப்புப் பெற்றிருந்த ஆதித்தர்கள் எனப்படும் பன்னிருவரில் ஒருவர். உலகம் முழுவதும் பரந்து இருப்பவர் என்று கூறப்படுகிறவர். வருணன் ஆகாயத்தைக் குறிப்பவராகவும், மேகம், மழை, ஆறு, கடல் போன்ற நீர் சார்பான அம்சங்களுடன் தொடர்பு படுத்தப்படுபவராகவும் உள்ளார்.

அளவற்ற அறிவுத்திறனும், வலுவும் உள்ளவராகப் புகழப்படும் வருணன், உலகம் முழுவதையும் மேற்பார்வை செய்து வருவதாகக் கருதினார்கள். இதனால் வருணனை ஆயிரம் கண்கள் உடையவராக  சித்தரிக்கின்றன.

ஆரம்பகாலத்தில் இப்பிரபஞ்சம் முழுமையையும் ஆள்பவர் இவரே என்றும் கருதப்பட்டது. எனினும் வேதகாலத்தின் பிற்பகுதிகளில் இந்திரன் சிறப்புப் பெறத் தொடங்கியபோது, வருணனின் முக்கியத்துவம் குறைந்து விட்டது எனலாம்.

இந்திரன்

இந்திரன் வேதகால சமயத்தில், மிக முக்கியமான தேவர்களில் ஒருவராக உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்டவர். ரிக் வேதத்தில் தலைமைக் கடவுளாகப் போற்றப்படுபவர் இந்திரன். அவ்வேதத்திலுள்ள சுலோகங்களில் கால்பங்கிற்கும் மேற்பட்டவை இந்திரனைப் போற்றுவதாகவே உள்ளன. இவருடைய வீரதீரச் செயல்களைப் பற்றிய ஏராளமான குறிப்புகள் வேதங்களில் காணப்படுகின்றன. மனதின் வேகத்தையும் கடந்த வேகத்தில் செல்லக்கூடிய தேரை உடையவராகக் கூறப்படுகிற இந்திரன், ஐராவதம் என்னும் வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவர் என்றும் குறிப்பிடப்படுகிறது. இவர் வஜ்ஜிராயுதத்தை ஆயுதமாகக் கொண்டவர்.

அக்னி

ரிக் வேதத்தில் இந்திரனுக்கு அடுத்து அதிக பாடல்களில் போற்றப்படுபவர். வேதப்பாடல்களில் இருநூறு வரையான பாடல்கள் அக்கினியைப் போற்றுகின்றன. அரணிக்கட்டைகளே இவரது உறைவிடம் என்றும், பிறந்ததும் தனது தாய் தந்தையரை விட்டு நீங்கி விட்டார் என்றும் கூறப்படுகிறார். ஆயிரம் நாக்குகள் கொண்டவர் என்றும் செந்நிற மேனி உடையவர் என்றும் வர்ணிக்கப்படுகின்றார். வேள்விகளின் போது இடப்படும் ஆகுதிப் பொருட்களை தேவர்களிடம் கொண்டு சேர்ப்பிப்பவனாக விளங்குவதால் இவர் புரோகிதன் என்றும் அழைக்கப்பட்டார்.

எமன்

இவர் குறித்த தகவல்கள் வேதங்களில் காணப்படுகின்றன. இவர் சூரியனின் மகன். சனீஸ்வரனின் அண்ணன். எமன் இந்தோ-இரானிய புராணக்கதைகளை ஒட்டி எழுந்த ஒர் தெய்வம் ஆவார். வேதத்தின்படி, எமன் பூமியில் இறந்த முதல் மனிதர் ஆவார். தன்னுடைய அளவற்ற புண்ணியத்தின் காரணமாக இவர் இறப்பின் பின் உயிர்கள் கொண்டு செல்வதாகச் சொல்லப்படும் உலகத்துக்கு அதிபதியாக நியமிக்கப்பட்டார்.

சோமச் செடி முக்கிய வழிபாட்டுக்குரியதாக ஆனது. இந்நிலையில் விலங்குகள் பலியிடுவது (பக் 13) முக்கிய சடங்கானது. இதற்கு நூற்றுக் கணக்கான ஆடுகளும், மற்ற விலங்குகளும் பலியிடப்பட்டன. இதற்கு யாஜ்னா (Yajna) என்று பெயர். 

வேதச் சடங்குகள் (Rituals)

வேதத்தின் குறிப்பிட்ட சடங்குகள்:

  • சோமா சடங்குகள், இதில் சோமாவின் பிரித்தெடுத்தல், பயன்பாடு மற்றும் நுகர்வு.
  • அக்னிஸ்தோமா (Agnistoma) அல்லது சோமா தியாகம்.
  • கடமைகளை உள்ளடக்கிய தீ சடங்குகள் (Havir).
  • அக்னிக்கு அக்னிஹோத்ரா அல்லது அலைவரிசை, ஒரு சூரியன் அழகு.
  • அக்கினி பலி, நெருப்பு பலிபீடத்தைத் தொடுக்கும் அதிநவீன சடங்கு.
  • புதிய மற்றும் முழு நிலவு மற்றும் பருவகால (Cāturmāsya) தியாகங்கள்.
  • ராஜபக்ஷவின் தியாகம் (Rajasuya).
  • அஸ்வமேத அல்லது யஜ்னா ராஜ்யம் அல்லது பேரரசின் மகிமை, நல்வாழ்வு மற்றும் செழிப்பு ஆகியவற்றை அர்ப்பணிக்கவும்.
  • புருஷமேதம்(Purushamedha).
  • அதர்வண வேதத்தில் குறிப்பிடப்பட்ட சடங்குகள் மற்றும் குணநலன்களின் மருந்து மற்றும் சிகிச்சைமுறை நடைமுறைகள். 

பிற்காலத்தில் இம்மதம் மெல்ல மறையத் தொடங்கியது.

References: The Religions of India_Rev.Allam Menzies 1906

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT