அரசியல் பயில்வோம்!

மத அரசியல்-17: பஹாய் மதம்

சி.பி.சரவணன்

1844-ஆம் ஆண்டு பாரசீக நாட்டில் உதித்த பஹாய் மதம் இன்றைய அளவில் வேறு சில நாடுகளிலும் பரவியிருக்கிறது. சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் இதை பின்பற்றி வருகின்றனர்.

பகாவுல்லா (Bahá'u'lláh)

பகாவுல்லா

பகாவுல்லா, நவம்பர் 12, 1817 அன்று பிறந்தவர். பாரசீக நாட்டின் தெஹரான் நகரத்தின் மேல்குடிகளில் ஒருவராவார். இவரது இயற்பெயர் “மிர்சா உசேய்ன் அலி”. பத்தொன்பதாம் நூற்றாண்டில், அரச போகம் மற்றும் பாதுகாப்பைத் துறந்து, பெருந்துன்பம் மற்றும் இல்லாமைக்கிடையே, ஒற்றுமை மற்றும் ஐக்கியம் குறித்த மனம் நெகிழச் செய்கின்ற செய்தி ஒன்றை மனுக்குலத்திற்கு அளித்தார். 1863 ஆம் ஆண்டு இவர் பாப் என்பவரால் கூறப்பட்ட இறைவனின் அவதாரம் தாமே என அறிவித்தார். இவருடைய மனைவியின் பெயர் ஆசிய்யா ஃகானும். இத்தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தைகளுள் உயரிரோடிருந்த மூவரின் பெயர்கள் – அப்துல்-பஹா, பாஹிய்யா ஃகானும் மற்றும் மிர்சா மிஃடி என்பவையாகும். இந்த மூவரும் பின்னாளில் தங்களின் தந்தையின் நிழலில் பஹாய் சமயத்திற்காகப் பல அரிய சாதனைகள் புரிந்தனர்.

முறையாகக் கல்வியறிவு பெறவில்லை என்றாலும், சமயப் பெருமக்களின் வழியாக இறையறிவை நிரம்பப் பெற்றார். பதினெட்டு வயதில் திருமணம் நடந்து, பல குழந்தைகளுக்கு தந்தையும் ஆனார். 1844ஆம் ஆண்டு ஷிராஸ் நகரில் சயீத் அலி முகமது என்றும், பாப் என்றும் அழைக்கப்பட்ட இளைஞர் ஒருவர், தன்னை கடவுளின் அவதாரம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். தமக்குப் பின்னால் வரப்போகும் இறைத்தூதரின் வருகையை அறிவிப்பதே தனது நோக்கம் என்றும் அவர் அறிவித்தார்.  இந்த பாப் என்பாரை பஹாவுல்லா  தாமே முதலில் அறிந்து ஏற்றுக்கொண்டார்.

இதனால் அங்கு மிகப் பெரிய கிளர்ச்சிகள் நடைபெற்று 750 ராணுவ வீரர்களால் பாப் மரண தண்டனையை அடைந்தார். இவர்களுடன் சேர்ந்து பஹாவுல்லாவும் கைது செய்யப்பட்டு டெஹ்ரான் நகரில் பிரசித்தி பெற்ற சிய்யாச்சால் என்னும் பாதாள சிறையில் அடைக்கப்பட்டுக் கொடுமைக்குள்ளானார்.

அச்சிறையில் பஹாவுல்லாவிற்கு அவருடைய உயர்ந்த ஸ்தானத்தை இறைவன் அறிவித்தார். இறைவனைப் பல நேரங்களில் பலவிதமாகவும் உணர்ந்தார். குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பஹாவுல்லா பாக்தாத் நகருக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கிருந்தும் துருக்கிக்கு நாடு கடத்தப்பட்ட அவர், இறுதியில் தற்போதைய பாலஸ்தீனத்திலேயே பெரும்பாலான நாட்களைக் கழித்தார்.

1863-ஆம் ஆண்டு துருக்கிக்குச் செல்லும் வழியில் டைகிரிஸ் நதிக் கரையில் ரித்வான் என்னும் பூங்காவில் பன்னிரெண்டு நாட்கள் தங்கியிருந்தார். அப்போதுதான் முதன்முதலாகத் தன்னை இறைவனின் அவதாரம் என்று பகிரங்கமாக அறிவித்தார். உலகில் இனி கடவுளின் ஆட்சியே நடக்கும் என்றும் நம்பிக்கையோடு அழுத்தமாகத் தெரிவித்தார்.

அடுத்த சில ஆண்டுகளில் பஹாவுல்லாவின் புகழ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. ‘உலக ஒற்றுமைக்காக உழைக்குமாறும், மக்கள் தங்கள் இஷ்டம்போல் நடந்தால் அழிவும் அராஜகமுமே மிஞ்சும் என்றும் எச்சரித்தார். நிறைய எழுதினார் போதித்தார்.  இவற்றை அனைத்தும் தொகுத்தால் நூறு நூல்கள் கிடைக்கும். பெரும்பாலானவை மொழியாக்கம் செய்யாமல் இருப்பதால் அவ்வாறு செய்ய முடியவில்லை.

பஹாய் நம்பிக்கை

உயிர்வாழ் இவ்வுலகில் பிரார்த்தனையைவிட இனிமையான ஒன்று வேறெதுவும் இல்லை. மனிதன் பிரார்த்தனை நிலையில் வாழ வேண்டும். பிரார்த்தனை மற்றும் இறைஞ்சுகின்ற நிஐலதான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட நிலையாகும். பிரார்த்னை என்பது இறைவனுடன் உரையாடல் செய்வதாகும். மிக உயர்ந்த நிஐலயை அடையவது அல்லது மிக இனிமையான நிலை, இறைவனுடன் உரையாடுவதுதான். அது ஆன்மீகத்தை தோற்றுவிக்கிறது. தெய்வீக உணர்வுகளையும் விழிப்புணர்ச்சியையும் தோன்றுவிக்கிறது. மேலுலக ராஜ்யத்தின் புதிய கவர்ச்சியை பெற்றுத்தருகிறது. சிறந்த மதிநுட்பத்தை நமக்கு மிகவும் எளிதில் ஏற்படுத்துகிறது.

கடவுளின் நாமம் மொழியப்பட்டு அவரது புகழ் பாடப்படும் ஸ்தலமும், இல்லமும் இடமும், நகரமும், இதயமும், மலையும் புகலிடமும், குகையும், பள்ளத்தாக்கும், தேசமும், கடலும், தீவும், புள்வெளியும் ஆசிபெற்றதாகும்.

பஹாய் புனித நூல்

பஹாய் சமயத்தின் புனித நூலாக கித்தாப்-இ-அக்தாஸ் (Kitab-i-Aqdas) விளங்குகிறது.

பாலஸ்தீனத்தின் கடற்கரை நசகரமான ஆக்கோ சிறையில் அடைக்கப்பட்ட பஹாவுல்லா, பின்னர் அங்குள்ள மாஸ்ராயே என்னும் இடத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைக்க்பட்டார். அங்கேயே தனது கடைசி காலம் வரைக் கழித்தார். 1892-ஆம் ஆண்மு மே மாதம் 29-ஆம் தேதி அன்று அதிகாலை பஹாவுல்லா இறைவனடி சேர்ந்தார்.

அதன்பிறகு பஹாவுல்லாவின் விருப்பமத்திற்கு இணங்க அவரது மகன் அப்துல் பஹா இச்சமயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தின் பஹாய் மதம் இரண்டாவது பெரிய மதமாக இன்றளவும் இருந்தது வருகிறது.

பஹாய் தலைமையகம்,இஸ்ரேல்

மனித ஒற்றுமை, உண்மையை தனித்துவமாக ஆய்வு செய்தல்,  சமயங்கள் அனைத்தும் ஒன்றே, சமயமும்,  அறிவியலும் ஒன்றோடொன்று ஒத்துழைத்து இயக்க வேண்டும், ஆண் - பெண் சமத்துவம் அவசியம், துவேஷங்களை நீக்க வேண்டும், உலகளவில் கட்டாயக் கல்வி அவசியம் என்பன போன்ற சமூக நியதிகளை உள்ளடக்கியதாக பரிமளிக்கிறது பஹாய் மதம்.

தாமரைக் கோயில் (Lotus temple)

தாமரைக் கோயில் என்பது இந்தியாவில் தில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டுத்தலம் ஆகும். அதன் தாமரை மலர் போன்ற வடிவத்தின் காரணமாக தாமரைக் கோயில் என அறியப்படுகிறது. பஹாய் வழிபாட்டுத்தலம் தில்லியின் வசீகரமான இடமாக உள்ளது. 1986-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இது இந்தியத் துணைக்கண்டத்தின் தாய் கோயிலாக கருதப்படுகிறது. இது எண்ணற்ற கட்டடக்கலை விருதுகளை வென்றுள்ளது. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் உலக அமைதியைக் கண்டிப்பாக வலியுறுத்துகிறது இம்மதம்.

பகாவுல்லா நினைவாலயம், இஸ்ரேல்

பஹா ஹுல்லா பாலஸ்தீனத்தில் (தற்போது இஸ்ரேலில் பாஹ்ஜி என்ற இடத்தில் மே 29, 1892 அன்று மறைந்தார்.

தொடரும்...

C.P. சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT