திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

கும்பம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** கும்பம் (AQUARIUS) இது ஒரு ஆண் ராசி. ஸ்திர ராசி. காற்று ராசியும்கூட. இதற்கும் அதிபதி சனிதான். இது காற்று ராசியாக இருப்பதால், மிகுந்த புத்திக்கூர்மையைத் தரக்கூடியது. நீருடன் உள்ள கும்பம்தான் இதன் அடையாளம். இதன் குறியீடு K. இந்த ராசி கணுக்கால் மற்றும் உடல் நரம்புகளைக் குறிக்கிறது. நரம்பு சம்பந்தமான VERICOSE என்னும் நோய் வரக்கூடும். இந்த வீடு சுக்கிரனுக்கும் புதனுக்கும் நட்பு வீடு. சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியோருக்குப் பகை வீடு. இந்த ராசியானது மற்ற கிரகங்களின் கெட்ட பார்வை பட்டால், சோம்பேறித்தனம் பற்றிக்கொள்ளும். எப்போதும் கவலையுடனும், எதிர்மறை எண்ணங்களுடனும் இருப்பார்கள்.

இன்று

செப்டம்பர் 22

இன்று மனோ தைரியம் உண்டாகும். மனதில் இருந்த கவலை, வருத்தம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்க செய்யும். பணவரத்து அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணத்தின் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9    

இந்த வாரம்

செப்டம்பர் 21 - செப்டம்பர் 27 கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய) வருமானம் ஓரளவுக்குச் சீராக இருந்தாலும் வீண் விரயங்களும் ஏற்படும். நண்பர்களின் அலட்சியத்தைப் பெரிது படுத்த வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.  அலுவலக வேலைகள் திட்டமிட்டதுபோல் முடியும். வியாபாரிகளுக்கு சரளமான பணப்புழக்கம் இருக்கும். புதிய முதலீடுகள் ஏதும் செய்ய வேண்டாம். எவரையும் நம்பி கடன் கொடுப்பதோ கையெழுத்துப் போடுவதோ கூடாது. விவசாயிகள் உற்பத்திப் பொருள்களில் நல்ல லாபம் காண்பீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் பெயரும் புகழும் உயரும். திட்டங்களை தீவிரமாக நிறைவேற்றி கட்சித் தலைமையின் கவனத்தைக் கவரவும். கலைத்துறையினருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் திறமையை மற்றவர்கள் பாராட்டுவார்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.பேசும் நேரத்தில் நிதானம் தேவை. மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். படிப்பில் போதிய அக்கறையுடன் பாடங்களை பலமுறை படித்து மனதில் பதிய வைக்கவும். பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டு வரவும்.   அனுகூலமான தினங்கள்: 21, 27.  சந்திராஷ்டமம்: இல்லை.

இந்த மாதம்

செப்டம்பர் மாத பலன்கள் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் களத்திராதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் கும்ப ராசி அன்பர்களே, குடும்பத்தில் பெண்களின் பேச்சால் நன்மைகள் ஏற்படும். திருமணம் கைகூடும். நீண்ட நாள் காத்திருந்த பெண்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் வார்த்தைக்கு குடும்ப உறுப்பினர்களிடம் மதிப்பு கிடைக்கும். உங்கள் பேச்சைக் கேட்டு அனைவரும் சில காரியங்களைச் செய்வார்கள்.

தொழில் -  வியாபாரம் உங்கள் உடல் நலத்தால் முடங்க வாய்ப்பு இருப்பதால், உங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்வது அவசியமாகிறது. வார்த்தைகளைக் கோர்த்துப் போட்டு பேசவும். தெரியாமல் வாக்கு கொடுக்க வேண்டாம்.  உத்தியோகத்தில் மேலிடத்தின் ஆதரவு உங்களுக்கு தான். அதனால் ஏதாவது பதவி உயர்வு பற்றிய கவலை இருந்தால் அதை விட்டொழியுங்கள். உங்களை அனைவருமே முன்மொழிந்து பரிந்துரை செய்யும் அளவிற்கு உங்களுக்கு சாதகம் தான்.  அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில்   மதிப்பு, மரியாதை  உயரும். கடந்த காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள். கட்சிப் பணிகளில்   ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கட்சியில்  மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டாம். தற்போது உள்ள நிலைமையைப் பயன்படுத்தி   கட்சி மேலிடத்திடம் நல்ல பெயர் வாங்க  முயற்சிக்கவும். சமுதாயத்தில் உங்கள் கௌரவமும், புகழும் உயரும்.  கலைத்துறையினருக்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். கால தாமதம் ஏற்பட்டாலும் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சக   கலைஞர்களில்  நம்பகமானவர்களைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் நிலவிய போட்டி,   பொறாமைகள் குறையும்.  பெண்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். மாணவ மணிகளுக்கு எதிர்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும். மிகப்பிரகாசமான வழியை அமைக்க ஆசிரியர்கள் உதவுவார்கள்.

அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் தீவிர முயற்சிகளின் பேரில் சில சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். தெய்வ அனுகூலத்தால் சிக்கலில் இருந்து விடுபட்டு முன்னேற்றம் ஏற்படும். தூரத்திலிருந்து வரும் செய்திகள் உங்களுக்கு அனுகூலம் இல்லாமல் இருக்கலாம். 

சதயம்:
இந்த மாதம் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். கணவன், மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். வீட்டில் சின்னச் சின்ன வாக்கு வாதங்கள் தலை தூக்கலாம். 

பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
இந்த மாதம் உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். வேலைப் பளு அதிகமாக இருக்கும். 

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் - வெள்ளி
பரிகாரம்: பெருமாள் ஆலயத்திற்குச் சென்று துளசி சாற்றி வழிபட பணப்பிரச்சனைகள் குறையும்.
 

இந்த ஆண்டு

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் - 2018 (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய) இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் கஷ்டங்கள் பிரச்னைகள் அனைத்தும் கதிரவனைக் கண்ட பனிபோல் தீர்ந்துவிடும். உடலுழைப்புக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றிக்குமேல் வெற்றி கிடைக்கும்.  வருமானத்தின் பெரும்பகுதியை சேமிக்கத் தொடங்குவீர்கள். சிறிய முதலீடுகளில் தொழிலைப் பெருக்கி நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள். அதாவது சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக மாறிவிடும். அவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்களும் வளர்ச்சி அடைந்து விடுவார்கள். முடிபெறாது இழுத்தடித்துக் கொண்டிருந்த வம்பு வழக்குகள் வெற்றி பெறும். தைரியமாக எதையும் சமாளிப்பீர்கள்.  பழைய கடன்களையும் திருப்பி அடைந்து விடுவீர்கள். புதிய  தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கும். சிலருக்கு அன்னியரின் சொத்து அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கும். சொந்தவீடு வாகனம் வாங்கும் யோகங்கள் உண்டாகும். மனதிற்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் வெளியூரிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். மற்றபடி உங்களின் வாழ்க்கைத்தரம் சீரும் சிறப்புமாக இருக்கும் காலக்கட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது,  இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றலாம். இருப்பினும் செய்தொழிலில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. குழந்தைகளுக்கு சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்கு கலைத்துறையில் நாட்டம் ஏற்படும். சமுதாயத்தில் புதிய பொறுப்புகள் பெற வாய்ப்புகள் தேடிவரும்.  பெற்றோர்களின் உடல்நலம் சீராகும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. உங்கள் பெயர் புகழ் அந்தஸ்து, கௌரவம் ஆகியவை கூடும். பங்கு வர்த்தகம் போன்றவைகளிலிருந்து தொடர்ந்து சிறு வருவாய் வந்து கொண்டிருக்கும். சிலர் பழைய வாகனங்களை விற்று  விட்டு புதிய வாகனங்களை வாங்குவார்கள். சமுதாயத்தில் உயர்தோரால் பாராட்டப் படுவீர்கள். உடன்பிறந்தோர் சற்று கூடுதலாக எதிர்பார்ப்பார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விவகாரங்களில் பெரியவர்களின் தலையீட்டினால் கோர்ட்டுக்குச் செல்லாமல் சமாதானமாகச் சென்று பாகப்பிரிவினையை ஏற்றுக்கொள்வீர்கள். எதையும் புத்தி கூர்மையுடனும் சமாளிக்கும் திறமை உண்டாகும் காலக்கட்டமிது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வார்கள். சில தவிர்க்க முடியாத வேலைகளை உங்களுக்கு ஒதுக்குவார்கள். அதை முடித்துக்கொடுத்து உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். சக ஊழியர்களிடம் நட்போடு பழகுவீர்கள். எந்த நேரம் என்னவாகுமோ என்ற அநாவசியப் பதட்டம் இருக்கும்.  வியாபாரிகளுக்கு போட்டிகளையும் பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் இருந்து அவைகளைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோசித புத்தியால் தேவையில்லாத பிரச்னைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் புதிய வாழ்க்கை வசதிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யமாட்டார்கள்.  அரசியல்வாதிகள் தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் மிகப்பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். கௌரவமும் அந்தஸ்தும் உயரும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்.  கலைத்துறையினருக்கு  இந்த ஆண்டு வரவேற்பு அதிகரிக்கும். திறமைக்குத் தக்க அங்கீகாரமும் விருதுகளும் கிடைக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்த முனைய வேண்டாம்.  பெண்மணிகளுக்கு இந்த ஆண்டு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து செல்வீர்கள். மாணவமணிகள் கல்வியில் பெருமைபடும்படி மதிப்பெண்களைப் பெறுவார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். 

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டு வரவும்.
 

***** ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் - 2018 (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய) இந்த 2018 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் குதூகலம் நிறையும். உற்றார் உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். பலவழிகளில் பணம் கைவந்து சேரும். நம்பிக்கையுடன் உங்கள் காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். அவர்களும் சிறப்பான வெற்றிகளைக் காண்பார்கள்.  வெளிநாட்டு படிப்புக்கு முயற்சி செய்பவர்கள் பண உதவியுடன் பெயர் பெற்ற பல்கலைக் கழகங்களில் சேருவார்கள். பூர்வீகச் சொத்துகளில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். மனதை ஒருமுகப் படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைப் புரிந்து கொண்டு அதற்குத் தக்கவாறு நடப்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் புகழ், கௌரவம் கூடும். மனதை அழுத்திக் கொண்டிருந்த பிரச்னைகள் விலகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்துச் செல்வீர்கள். முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடிக்காமல் அனைவரின் எண்ணங்களுக்கும் வளைந்து கொடுத்துச் சென்று நற்பெயர் எடுக்கும் காலகட்டமாக இது அமைகிறது. ஜூலை மாதம் முதல்  இந்த ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் வெளியில் கொடுத்திருந்த கடன்களும் திரும்பக் கைவந்து சேரும். முயற்சிகளில் தடை ஏற்பட்ட பிறகே வெற்றி காண்பீர்கள். ஒதுக்கி வைத்திருந்த பயணங்களையும் மேற்கொள்வீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண கடினமாக உழைக்க வேண்டிவரும். உங்கள் பேச்சில் கடமை உணர்ச்சி மிகுந்திருக்கும். நீங்கள் நியாயவாதி என்று பெயரெடுப்பீர்கள். சிலர் புது வீட்டிற்கு கிரகபிரவேசம் செய்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். அரசுத்துறையின் மூலம் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்கள் ஆலோசனைகள் அனைவருக்கும் பயன்படும் காலகட்டமாக இது அமைகிறது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீரும் சிறப்புமாக இருக்கும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் சுமுகமான உறவுநிலை தொடருவதால் வேலைகள்குறித்த நேரத்தில் நிறைவேறி விடும். உங்கள் வேலைத் திறனைக்கூட்டிக்கொள்ள புதிய அலுவலக பயிற்சிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரிகள் உழைப்பைக் குறைத்துக்கொள்ளாமல் பாடுபட்டால் எதிர்பார்த்த வருவாய் வருவதற்குத் தடையிராது. கூட்டாளிகளும் நண்பர்களும் சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கல்கள் அனுகூலமாகவே தொடரும். முயற்சிகள் படிப்படியாக வெற்றிகளைக் கொடுக்கும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு  வருமானம் திருப்திகரமாக இருப்பதால் புதிய விவசாய உபகரணங்களையும் வாங்குவீர்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த பலன் பெற முடியாமல் போகும்.  அரசியல்வாதிகள் பொதுச்சேûவையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். தொண்டர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உங்கள் முயற்சியில் தடைகள் உண்டானாலும் இறுதியில் வெற்றி காண்பீர்கள். எதிர்கட்சியினரின் போட்டி பொறாமைகளுக்கு ஆளாக நேரிடும். பயணங்களை அதிகம் செய்யும் ஆண்டாக இது அமையும். கட்சித் தலைமைக்கு தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். கலைத்துறையினர் படிப்படியாக வளர்ச்சியைக் காண்பார்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்கு சிறிது செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் சில புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். புதிய வண்டி வாகனங்களையும் வாங்குவீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மனமகிழ்ச்சி காணப்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். குழந்தை பிறப்பும் உண்டாகும் ஆண்டாகும். மாணவமணிகள் படிப்பில் வெற்றிவாகை சூடுவீர்கள். ஞாபக சக்தி அறிவாற்றல் அதிகரிக்கும். விளையாடும் நேரத்தில் கவனம் தேவை. பெற்றோர் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவர். பரிகாரம்: அனுமனை வழிபட்டு வரவும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...