செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

மேஷம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** மேஷம் (ARIES) இது ஒரு ஆண் ராசி. நெருப்பு ராசியும்கூட. இது ஒரு நான்கு கால் ராசி. செம்மறி ஆட்டின் உருவம் கொண்ட ராசி. இதை A என்ற அடையாளத்தால் குறிப்பார்கள். இந்தக் குறியீடு, ஒரு செம்மறி ஆடு நீண்ட மூக்குடனும், இரண்டு காதுகளுடன் இருப்பதுபோல் தெரிகிறது அல்லவா! இது ஒரு சர ராசி. அதாவது, நகரும் தன்மை கொண்ட ராசி. இதற்கு அதிபதி செவ்வாய். சூரியன் இந்த ராசியில்தான் உச்சம் பெறுகிறார். சனி இங்குதான் நீச்சம் பெறுகிறார். இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதியாவதால், இந்த ராசியை லக்கினமாகக் கொண்டவர்கள், மிகவும் சுறுசுறுப்பு உடையவர்களாகவும், முன்னேறத் துடிப்பவர்களாகவும் இருப்பார்கள். இந்த லக்கினம், மற்ற கிரகங்களால் கெட்ட பார்வையால் பார்க்கப்பட்டால், அவர்கள் மிகுந்த அவசரக்காரர்களாகவும், நிதானித்துச் செயல்படாதவர்களாகவும் இருப்பார்கள். அதுவே, நல்ல பார்வையால் பார்க்கப்பட்டால் நிதானம் மிக்கவர்களாகவும், தைரியத்துடன் எதையும் எதிர்கொள்பவராகவும் இருப்பார்கள். உடல் உறுப்புகளில் தலையைக் குறிப்பது இந்த ராசிதான்.

இன்று

செப்டம்பர் 25

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு
முன்னேற்ற வாய்ப்புகள் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2, 9

இந்த வாரம்

செப்டம்பர் 21 - செப்டம்பர் 27 (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) கவலைகள் குறையத் தொடங்கும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். நண்பர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். உடன்பிறந்தோர் வழிகளில் நிலவிய மனக்கசப்பு நீங்கும். பொருளாதாரத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும்.  உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொண்டால் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கும்.  வியாபாரிகள் கடுமையாக உழைக்க வேண்டிய நேரமிது. காலதாமதம் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி வாயிற்கதவை தட்டும். விவசாயிகளின் உடல் உழைப்புக்கு இரு மடங்கு லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் தீரும்.  அரசியல்வாதிகள் சிரமமின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். தொண்டர்களிடம் இணக்கமாக நடந்து கொள்வீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். வருமானம் பெருகும்.  பெண்மணிகள் கணவரை அனுசரித்து நடந்து கொள்ளவும். பணவரவுக்குக் குறைவு இருக்காது. மாணவமணிகள் கல்வியில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பெரிய சாதனைகளுக்கு  அடித்தளம் போடுவீர்கள். பரிகாரம்: நவக்கிரகத்திலுள்ள சூரிய கடவுளுக்கு ஞாயிறு அன்று அர்ச்சனை செய்யவும்.  அனுகூலமான தினங்கள்: 21, 22.

சந்திராஷ்டமம்: இல்லை.
 

இந்த மாதம்

செப்டம்பர் மாத பலன்கள் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:
ராசியில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் பஞ்சமாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தில் அமைதி நிலவும். உணர்ச்சி வசப் பட்டு பேசுவதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் சரியாகும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையப் பெறுவீர்கள்.  பல வருடங்களுக்கு முன்பு சந்தித்த உற்றாட், உறவினர்களை இப்போது சந்திப்பீர்கள். பழைய கடன்களை அடைக்க இப்போது வழி பிறக்கும். சாமர்த்திய சாலி என்று அனைவரும் ஒப்புக் கொள்ளும்படி நடந்து கொள்வீர்கள்.

தொழில் ரீதியான வெளிநாட்டுப் பயணம் ஒன்றை ஏற்க வேண்டியிருக்கும். நடக்கும் தொழிலைப் பொறுத்தவரை நல்லபடியாக அமையும்.  வீண் அலைச்சல் அவ்வப்போது அலைய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி ஒன்று வரும். அதனால் மனம் ஓரளவிற்கு நிம்மதி அடையும் உத்தியோகஸ்தர்கள் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். வேலைக்குச் சென்று வரும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு ஏற்பட்டாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் நிம்மதியாக இருப்பீர்கள். அரசியல் துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை.  கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் வரலாம். எதிலும் கூடுதல் கவனம் செலுத்தி செயல்படுங்கள். இறைவனை வழிபடுங்கள். மாணவர்கள் வெளிநாடு சென்று மேற்கல்வி பயில வேண்டுமென்ற விருப்பமிருப்பின் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

அஸ்வினி:
இந்த மாதம் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். காரியத் தடைகள் நீங்கி, அனுகூலம் பிறக்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். 

பரணி:
இந்த மாதம் எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். முன்னேற்றம் கண்டிப்பாக உண்டு என்பதை உறுதியாக சொல்லலாம். 

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்த வந்த காரியத்தடை அகலும். நண்பர்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கு நீங்கள் காரணமாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு -  புதன்
பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் பூ மாலை சூடி வணங்க மனக்கஷ்டங்கள் தீரும்.

இந்த ஆண்டு

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2018 (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் புதிய முயற்சிகளைத் திறம்படச் செயல்படுத்துவீர்கள். செய்தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சியைப் பார்ப்பீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உடல் ஆரோக்கியம் சீராகி மருத்துவச் செலவுகள் குறையும். வெளிவட்டாங்களில் உங்கள் பெயர் புகழ் உயர்ந்து செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறந்தோருக்கிடையே இருந்த பிணக்குகள் மறைந்து ஒற்றுமை கூடக் காண்பீர்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியமும் குடும்பத்தில் பேரக்குழந்தை பாக்கியமும் கிடைக்கும். மந்தமாக இருந்த குழந்தைகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்குவார்கள். பழைய சொத்துகளை விற்றுவிட்டு புதிய சொத்துகளை வாங்கும் வாய்ப்புகளும் சிலருக்குக் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பிரயாணங்களால் எதிர்பாராத செலவினங்களும் ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் அதற்காக சிறிது சேமித்து வைத்துக் கொள்ளவும். அதேநேரம் இந்த பயணம் சுபகாரியங்களுக்காக நிகழும் என்பதால் மனதில் மகிழ்ச்சிக்குக் குறைவராது. மேலும் சிலருக்கு தர்ம காரியங்களில் ஈடுபட்டு பிரபலமடையும் யோகமும் உண்டாக பாக்கியமுள்ளது.


இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் தேவைக்கேற்ற பணவரவு கிடைக்கும். பழைய கடன்களை அடைக்கத் தொடங்குவீர்கள். செய்தொழிலில் திடீர் திருப்பங்களைக் காண்பீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் சற்று விலகி இருந்தாலும் விட்டுக்கொடுத்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த சலுகைகள் கிடைத்துவிடும். குலதெய்வ வழிபாட்டினைச் செய்வீர்கள். முக்கிய தருணங்களில் உங்கள் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். வெளியூரிலிருந்து அனுகூலத் தகவல் ஒன்று வந்து சேரும். குறிப்பாக, இது குழந்கைளுக்கு நன்மையாக அமையும். வெளியூர் சென்று செய்தொழிலை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் சிறப்பாக வெற்றி பெறும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் வரத்தொடங்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.


உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பார்கள். மேலும் சில நேரங்களில் காரணமில்லாமல் அதைரியப்படுவீர்கள். ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் சம்பந்தப்பட்ட பயணங்களால் நன்மை உண்டாகும். பணவரவுக்குக் குறைவு வராது. தன்னம்பிக்கை கூடும். பதவி உயர்வு எதிர்பார்க்கமாலேயே கிடைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் மனக்கஷ்டம், பணக்கஷ்டமும் உண்டாகும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். கடன்கள் வசூலாவதற்குத் தாமதமாகும். அதனால் புதிய கடன்களைக் கொடுக்க வேண்டாம். வியாபாரத்தில் உங்கள் கௌரவம், அந்தஸ்து கூடும். கூட்டாளிகளை நம்பி எதையும் செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் குறைவாகவே தெரியும். அதனால் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் வருமான இழப்பை ஈடு செய்யவும். இக்காலத்தில் நீர்வரத்தும் மிகக்குறைவாக இருப்பதால் பாசன வசதிகளுக்காக சேமிப்புகளை எடுத்து செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகளுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். தொண்டர்களின் அதிருப்தியையும் சந்திக்க நேரிடும். பொறுமையுடன் நடந்து கொள்ளவும். சமுதாயத்தில் அந்தஸ்தான பதவிகள் தேடிவரும். உங்களின் பணியாற்றும் திறனைக் கட்சி மேலிடம் கவனிக்கும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் சுமாராக இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவிலேயே இருக்கும். உங்கள் செயல்களில் உங்களின் தனித் திறமையை வெளிக்கொணரும் ஆண்டாக இது அமைகிறது. பெண்மணிகளுக்கு கணவன் மனைவி வகையில் விரிசல்கள் ஏற்படாமல் கவனமாக இருக்கவும். உடன்பிறந்தவர்களின் சிறுசிறு பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரியும் ஆண்டாகும். பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும். ***** ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2018 (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) இந்த 2018 -ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டகரமான திருப்பங்கள் உண்டாகும். வருமானம் படிப்படியாக உயரத்தொடங்கும். வாழ்க்கையில் ஒரு புதிய மைல் கல்லை எட்டி விடுவீர்கள். மனதிற்கினிய பயணங்களை செய்ய நேரிடும். புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். அரசாங்கத்திலிருந்து திடீரென்று சலுகைகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் அனைவரிடமும் சுமுகமாகப் பேசி பாகப்பிரிவினை உண்டாகும். உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எதிரும் புதிருமாக இருந்த உற்றார் உறவினர்கள் சுமுகமாகப் பேசி உங்களுடன் இணைவார்கள்.  நீண்ட நாள்களாக மூடி வைத்திருந்த தொழிலை புதுப்பித்து நடத்தத் தொடங்குவீர்கள். கானல் நீராகி போன விஷயங்கள் திடீரென்று கைகூடி விடும். உங்கள் செயல்களில் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். இல்லத்தில் தள்ளிப்போய்க் கொண்டிருந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் திடீரென முடிவாகும். உங்கள் பேச்சுக்கு வீட்டிலும் வெளியிலும் மதிப்பு உண்டாகும். உங்கள் குறிக்கோள்களை திட சிந்தனையுடன் செயல்படுத்த முனைவீர்கள். அசையா சொத்து விஷயங்களில் இருந்து வந்த கஷ்ட நஷ்டங்களும் இழப்புகளும் இந்த காலகட்டத்தில் தொடராது என்றால் மிகையாகாது.  ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் புகழின் உச்சியை நோக்கி படிப்படியாக உயர்வீர்கள். கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆடம்பரச் செலவுகளும் காணப்படுவதால் வரவுக்கேற்ற செலவுகள் செய்வது சிறந்தது. மேலும் கடன் வாங்க நேரிடாது. நண்பர்களின் குறையை பெரிதுபடுத்தாமல் அவர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். உடலில் இருந்த நோய்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும்.  பேச்சிலும் உங்களின் அறிவு முதிர்ச்சி வெளிப்படத் தொடங்கும். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுத்து அதற்கு தக்கபடி செயல்படுவீர்கள். ஸ்பெகுலேஷன் துறைகள் மூலமும் பெரிய வருமானத்தைப் பெறுவீர்கள். பெற்றோர் வழியில் இருந்து வந்த மனத்தாங்கல்கள் தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். செய்தொழிலில் இருந்த முடக்கங்கள் நீங்கி விறுவிறுப்பாக நடக்கத் தொடங்கும். பட்டும் படாமலும் பேசி வந்த நண்பர்கள் மனம் விட்டு பேசத் தொடங்கும் காலம் இது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சரியாகச் செய்து முடிப்பார்கள். சில சமயங்களில் காரணமில்லாமல் அதைரியப்படுவீர்கள். இந்நேரங்களில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக ரீதியான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். பணவரவுக்கு குறைவு வராது. தன்னம்பிக்கை கூடும். பதவி உயர்வு எதிர்பார்க்காமலேயே கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சரியான நேரத்தில் கைகொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். கேட்ட இடத்திலிருந்து கடன்கள் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள்.  போட்டியற்ற சந்தைகளைப் பார்ப்பீர்கள். கூட்டாளிகளும் நண்பர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் குறைவாகவே இருக்கும். அதனால் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் வருமான இழப்பை ஈடுசெய்வீர்கள். கால்நடைகளுக்கு சிறிது செலவு செய்ய வேண்டிவரும்.   அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள். உங்கள் தைரியமும் ஆற்றலும் கூடும். எதையும் சமாளிப்பீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கட்சித்தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் சுமாராக இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும்.   உங்கள் திறமையினால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்கள் தனித்தன்மையை வெளிக்கொணரும் ஆண்டாக இது அமைகிறது. பெண்மணிகளுக்கு பூர்வீகச் சொத்து கிடைக்கும். அனைவரையும் கவருவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். 

கணவருடன்அன்யோன்யம் கூடும். மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள். மாணவர்கள் சாதனை புரியும் ஆண்டாகும். பெற்றோரின் ஆதரவு நன்றாக இருக்கும். 
வெளிவிளையாட்டுகளிலும் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: அம்பாளை வழிபட்டு வரவும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...