திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

கடகம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** கடகம் (CANCER) இது ஒரு பெண் ராசி. அத்துடன் நீர் ராசியும்கூட. இது எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிற சர ராசி வகையைச் சேர்ந்தது. இந்த ராசியின் உருவம் நண்டு. இதை D என்ற குறியீட்டால் குறிப்பார்கள். அதாவது, நண்டின் கால்கள்தான் இந்த உருவம். உடல் உறுப்புகளில் மார்பையும், வயிற்றுப் பகுதியையும் குறிப்பது இந்த ராசி. இந்த ராசிக்காரர்கள் வயிறு சம்பந்தமான பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகளால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள். இது ஒரு ஊமை ராசியும்கூட. பிறவியில் பேச முடியாதவர்களுக்கு வாக்கு ஸ்தானமான 2-ம் வீட்டோடு இந்த ராசி சம்மந்தப்பட்டிருக்கும். இந்த ராசியில் குருவானவர் உச்சம் பெறுகிறார். செவ்வாய் நீச்சம் பெறுகிறார். இதன் அதிபதி சந்திரன். சந்திரன் வளர்ந்து தேய்வதுபோல், இவர்களும் தங்கள் குணாதிசயங்களில் அடிக்கடி மாறக்கூடியவர்கள்.

இன்று

செப்டம்பர் 24

இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 6
 

இந்த வாரம்

செப்டம்பர் 21 - செப்டம்பர் 27 (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய) உங்கள் எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். புதிய ரகசியங்களை அறிவீர்கள். சமுதாயத்தில் உங்கள் மரியாதை உயரும். குடும்பத்தினர் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.   உத்தியோகஸ்தர்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பார்கள். பிறரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகளுக்கு சுமுகமான நிலைமை தென்படும். போக்குவரத்து தேவைகளைப் பழுது பார்ப்பீர்கள். விவசாயிகள் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது. கால்நடைகளால் லாபம் அடைவீர்கள்.  அரசியல்வாதிகள் சாதுர்யத்துடன் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பீர்கள். மேலிடத்தின் பாராட்டுகளைப் பெற்று நன்மதிப்பையும் பெறுவீர்கள்.  கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே இருக்கும். கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி முன்னேறவும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும். சுற்றுலா தலங்களுக்கும் செல்ல வாய்ப்பு உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வர நன்மைகள் தேடி வரும்.  அனுகூலமான தினங்கள்: 21, 25. 

சந்திராஷ்டமம்: 22, 23, 24.
 

இந்த மாதம்

செப்டம்பர் மாத பலன்கள்  (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) 

கிரகநிலை:
ராசியில் ராஹூ - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் தனாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் கடக ராசி அன்பர்களே,
குடும்பத்தில் நல்லதோர் விசங்களுக்காக அனைவரும் ஒன்றாக பேசி கலந்து ஆலோசித்து முடிவெடுப்பீர்கள். அனைவரின் கருத்தும் ஒற்றுமையாக இருக்கும். திருமண வயதில் உள்ளோருக்கு வரன் பார்க்கும் படலமும் நடைபெறும். மாமியார் - மருமகள் ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீருவதால் அனைவரும் ஒன்றாக இணைந்து குல தெய்வ பிரார்த்தனையை முடித்து வாருங்கள்.

தொழிலில்  கொடுக்கல் -வாங்கலில் சிறு பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள். புதிய தொழிலுக்கு தேவையான அடிக்கல் நாட்டுவீர்கள். மற்றபடி லாபம் அதிகமாகத் தான் இருக்கும். யாரிடமும் நம்பி வேலைகளை கொடுக்காமல் உங்கள் கண்  பார்வையிலேயே கவனியுங்கள்.

உத்தியோகத்தில் தாங்கள்  மேற்கொண்டு வரும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம் ஓரளவு முன்னேற்றம் ஏற்படக் கூடும். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகம் தொடர்பான பயணங்களும் ஏற்படுவதற்கு  வாய்ப்புண்டு. 
அரசியல் துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள். 

கலைத்துறையினர் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.  பெண்கள் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். அவ்வப்போது ஓய்வும் எடுத்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் எதிலும் பொறுப்பாக நடந்து கொள்வது அவசியம். புத்தி சாதுர்யம் உங்களுக்கு வெளிப்படும்.

புனர் பூசம் 4ம் பாதம்: 
இந்த மாதம் சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.பெண்கள் சுபச் செலவு உங்களால் ஏற்படும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும். 

பூசம்:
இந்த மாதம் பொதுநல சேவை செய்ய ஆர்வம் அதிகரிக்கும். ஆகையால் பாராட்டு, புகழ் கிடைக்கும். உணவு, பழக்க வழக்கங்களை ஒழுங்கு படுத்தி அதனால் வரும் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். 

ஆயில்யம்:
இந்த மாதம் முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதனால் பொருளாதாரரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். 

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23,24
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன்
பரிகாரம்: சிவன் ஆலயத்திற்குச் சென்று வில்வம் அர்ப்பணித்து வர மனம் ஒருநிலைப்படும்.

இந்த ஆண்டு

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2018 (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய) இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் விருப்பம்போல் செய்தொழிலை மாற்றியமைப்பீர்கள். செய்தொழிலில் இருந்த பிரச்னைகள் யாவும் படிப்படியாக நிவர்த்தியாகி மனநிம்மதி உண்டாகும். சிலர் செய்தொழிலை சொந்த இடத்திற்கு மாற்றுவார்கள். குழந்தைகளின் கல்விக்காக மகிழ்ச்சியுடன் செலவழிப்பீர்கள். அவர்களால் குடும்பத்தின் அந்தஸ்து உயரும். பணவரவு எதிர்பார்த்ததிற்கும் மேலாகவே வரும். இல்லத்தில் சந்தான பாக்கியம் உண்டாகும் தீர்க்கமாக சிந்தித்து சிறப்பாக முடிவெடுப்பீர்கள். உங்கள் முயற்சிகள் எதுவும் வீண் போகாது. சிலர் பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய நவீன வாகனங்களை வாங்குவார்கள். நண்பர்களுடனும் கூட்டாளிகளுடனும் இணைந்து காரியமாற்றுவீர்கள். உங்கள் எண்ணங்களை செய்தொழிலில் நடைமுறைப்படுத்துவீர்கள். அதனால் உண்டாகும் நற்பலன்களை கண்கூடாகவும் பார்ப்பீர்கள். கைவசம் உள்ள பொருள்களை செம்மைப்படுத்திக் கொள்வீர்கள். அதேநேரம் உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் சிறிது பகைமை, விரோதம் ஆகியவைகளைக் கொண்டிருப்பதால் அதற்கு ஏற்ப எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.  இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எவரிடமும் எதிர்வாதம் செய்யாமல் விட்டுக்கொடுத்து மாற்றங்கள் உண்டாகி அதன்வழியே நல்ல செல்வம், செல்வாக்கு ஆகியவை பெறுவதற்கு வழி உண்டாகும். நெடுநாளாக வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொண்டவர்கள் சுயமாக செயல்படத் தொடங்குவார்கள். தாமாகவே நல்ல முடிவுகள் எடுத்து சிறப்பாக வெற்றிபெறுவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சுலபமாக நடந்தேறிவிடும். மனதிற்கினிய பிரயாணங்களைச் செய்து அதன்மூலம் ஆதாயங்களைப் பெறுவீர்கள். இல்லத்தில் முத்தான புத்திரப் பேறு உண்டாகும். தெய்வ காரியங்களில் ஈடுபடுவதற்கும் புனிதமான தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்வதற்கும் தகுந்த காலகட்டமாக அமைகிறது. வெளிநாடு சென்று வர முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைத்துவிடும். உங்களின் உள் உணர்வு சிறப்பாக வேலைசெய்யும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் அனைவரிடமும் சுமுகமாகப் பழகுவார்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடிவரும். தடைபட்டிருந்த ஊதிய உயர்வு உங்களுக்குக் கிடைக்கும். மேலும் உடலில் சிறிது சோர்வு காணப்படுவதால் சுறுசுறுப்பு குறையும். வியாபாரிகளுக்கு போட்டிகள் குறையும். வியாபாரத்தில் லாபங்கள் வரும். நண்பர்களையும் வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். கொடுத்த இடத்திலிருந்து பணம் திரும்பிவராமல் தங்கிவிட நேருமாகையால் புதியவர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக, கால்நடை வைத்திருப்போர் எதிர்பார்த்த லாபத்தை அடைவர். நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்ள முயற்சிகளைச் செய்வீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப் படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல்ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அடிக்கடி பிரயாணங்களைச் செய்வீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் சில தடைகள் ஏற்படலாம். வருமானம் சீராக இருக்கும். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களிலும் பங்கு கொள்வீர்கள். உடல்சோர்வும் சில நேரங்களில் உண்டாகும். மாணவமணிகள் பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். பெற்றோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பார்கள். உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள். பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு சிறப்படையுங்கள். ***** ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2018 கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய) இந்த 2018 -ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில் அனுகூலமான திருப்பங்களை காண்பீர்கள். புதிய சேமிப்பு திட்டங்களில் சேர்வீர்கள். உடல் சோர்விக்கும் சோம்பேறித்தனத்துக்கும் விடை கொடுப்பீர்கள். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளை இனம் கண்டு கொள்வீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றிவிடுவீர்கள்.  அனுகூலமில்லாத விஷயங்களையும் உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் புத்தி சாதுர்யம் ஏற்படும். எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் உங்களின் தனித்தன்மையை இழக்க மாட்டீர்கள்.   அடுத்தவர்கள் உங்களுக்கு அறிவுரை கூறும்படி நடந்துகொள்ள மாட்டீர்கள். அரசாங்கத் தொடர்புகள் தூர பயணங்களையும் செய்ய நேரிடும். உங்கள் முயற்சிகளில் இருந்த இடற்பாடுகள் நீங்கி தைரியத்துடன் முன்னேறுவீர்கள். குடும்பத்தில் அவசியமான சுபகாரியங்களை உடனடியாக முடிப்பதற்கு புதிய கடன் வாங்க நேரிடும். குடும்ப சொத்துகளை அடமானம் கொடுக்க வேண்டிய நிலைமை எதுவும் ஏற்படாது. அரைகுறையாக விடப்பட்ட கட்டடப் பணிகள் மீண்டும் தொடரப்பட்டு அது நல்ல விதத்தில் முடிக்கப்படும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. 

ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுத்து செய்யும் செயல்கள் சிறப்பான வெற்றியைத் தேடி தரும். உங்கள் தர்ம
சிந்தனைகள் மேலோங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வருமானத்தின் ஒரு பகுதியை ஆலயத் திருப்பணிகளுக்கு செலவு செய்வீர்கள். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உழைப்பும் வீண் போகாது. உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தாய்வழி உறவுகளிலிருந்த மனச் சஞ்சலங்கள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். குடும்பத்திலும் உற்றார் உறவினர்களிடமும் உங்கள் செல்வாக்கு உயரும்.

அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிலும் சுலபமான முயற்சியில் நிறைவான வெற்றி வாய்ப்புகள் கூடிவரும். மனதில் பளு இன்றி உற்சாகமாக சஞ்சரிக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சிறிய குழப்பங்கள் ஏற்பட்டாலும் சக ஊழியர்களின் உதவியால் சிறப்பாக முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகளும் உதவிகரமாக இருப்பதால் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள்.  சிலர் விரும்பிய இடமாற்றங்களைக் காண்பார்கள். விரும்பிய பதவி  உயர்வு உங்களைத் தேடி வரும். உழைப்பிற்கு ஏற்ற பொருளாதார அபிவிருத்தியையும் காண்பீர்கள்.  வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த தொய்வுகள் நீங்கி மனதில் உற்சாகம் தோன்றும். மேலும் புதியவர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகள் பயிர்விளைச்சலில் ஆதாயங்களைப் பெறுவார்கள். தங்களுக்குகீழே வேலை செய்பவர்களால் நன்மையை அடைவார்கள். சக விவசாயிகள் மத்தியில் செய்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். குடும்பத்தில சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். பழைய குத்தகை பாக்கிகளையும் அடைக்கும் அளவிற்கு பொருளாதார வசதிகள் மேம்படும்.  அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன்  அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப் படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள் கலைத்துறையினர் பாராமுகத்தை பக்குவமாகச் சமாளிப்பது அவசியம். உடலையும் மனதையும் சிறப்பாக வைத்திட பிராணாயாமம் யோகா போன்றவைகளைச் செய்யவும். ரசிகர்களிடம் வெளிப்படையாக பேச வேண்டாம். அவர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்து அவர்களது ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளவும். பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளைப் பெறுவார்கள். ஆடை ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களிலும் பங்கு கொள்வீர்கள். மாணவமணிகள் மற்றவர்களை அதிகம் எதிர்பார்க்காமல் உங்களின் கல்வி சம்பந்தப்பட்ட வேலைகளை நீங்களே  செய்து கொள்ள முயலுங்கள். அதனால் பெற்றோர் மற்றும் ஆசிரியரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவீர்கள்.  பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...