18 நவம்பர் 2018

மகரம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** மகரம் (CAPRICORN) இது ஒரு பெண் ராசி. பூமி ராசி மற்றும் சர ராசி. இதன் அதிபதி சனி. இங்குதான் செவ்வாய் உச்சம் பெறுகிறார். குரு நீசம் பெறுகிறார். பொதுவாக, சனியானவர் எதற்கும் தடங்கல்களைக் கொடுப்பவராகவும், எதிலும் ஏற்றத்தை தராதவராகவும், பொறுப்புகளைக் கொடுப்பவராகவும்தான் கருதப்படுகிறார். இதுவும் ஒரு நாலு கால் ராசி. இதனுடய உருவம் ஆடு. இதனுடைய சின்னம் J. இதுதான் உடலிலுள்ள எலும்புகள், முழங்கால் மூட்டுகள் இவற்றையெல்லாம் குறிக்கிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இது எதிரியின் வீடு. ஆனால் சுக்கிரனுக்கும் புதனுக்கும் இது நண்பனின் வீடு. இது ஒரு பூமி ராசியாக இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் செலவைக் குறைப்பதில் நாட்டம் உள்ளவராகவும் நியாயஸ்தர்களாகவும் எதையும் யோசித்துச் செயல்படுபவர்களாகவும், கடின உழைப்பை மேற்கொள்பவராகவும் இருப்பார்கள். இந்த ராசிக்கு சனி அதிபதியாவதால், 6-ம் வீட்டுடன் சம்பந்தப்பட்டால் மூட்டு வலிகள், தோல் சம்மந்தமான வியாதிகள் ஆகியவை வரக்கூடும்.​

இன்று

நவம்பர் 18

இன்று தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும். பணத்தை விட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழில் அதிக வருவாய் கிடைக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே அரசிடம் இருந்துதான் கோரிக்கைகள் நிறைவேறும். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
 

இந்த வாரம்

நவம்பர் 16 - நவம்பர் 22 (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய) தோல்விகள் அகன்று வெற்றிகள் குவியத்தொடங்கும். உங்கள் செயல்கள் சரியான இலக்கை அடையும். ஆன்மிகத்தில் சாதனை புரிவீர்கள். குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு  பணிகள் சுமுகமாக முடியும். மேலதிகாரிகள் நட்புடன் பழகுவார்கள். எதிர்பார்த்த  இடமாற்றங்களைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய யுக்தியுடன் செயல்பட்டு வியாபாரத்தைப் பெருக்குவார்கள். கூட்டாளிகளின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் மிகுந்த லாபம் கிடைக்கும், கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல வருமானம் பெறுவர். 

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை எளிதாக முடித்து வெற்றி பெறுவார்கள். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். கலைத்துறையினருக்கு முயற்சிகள் யாவிலும் வெற்றி உண்டாகும்.  
பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவர். கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வர். மாணவமணிகள் படிப்பில் அதிகக் கவனம் செலுத்தவும். விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: சனீஸ்வரருக்கு தீபமேற்றி வழிபடவும்.  அனுகூலமான தினங்கள்: 17, 20.  

சந்திராஷ்டமம்: இல்லை.
 

இந்த மாதம்

நவம்பர் மாத பலன்கள் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) இந்த மாதம் ராசிநாதன் சனிபகவான் விரையஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் ஏனைய கிரகங்கள் வலுவாக இருப்பதல் காரியங்களில் இருந்த தாமதமான போக்கு நீங்கும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சு வெறும் பேச்சு அல்ல மதிப்புள்ள பேச்சு என மற்றவர்கள் நினைப்பார்கள். உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் ஸ்தானாதிபதி சுக்ரன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். ராசிநாதனும் குடும்பாதிபதியுமாகிய சனிபகவானின் சஞ்சாரம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது.  பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை. பெண்கள் உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மைதரும். கலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம்.  அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.      மாணவர்களுக்கு  கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.

உத்திராடம்:
இந்த மாதம் எடுத்த முயற்சிகள் கை கூடும். வரவுக்கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோ தைரியம் கூடும். மற்றவர்களால் தேவையற்ற குற்றசாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கண்நோய், பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். திடீர் கோபம் உண்டாகும்.

திருவோணம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் உண்டாகலாம். நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மை தரும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

அவிட்டம்:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும். சில்லறை சண்டைகள் அக்கம் பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம். 

பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைபளு நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன், வெள்ளி; சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15
 

இந்த ஆண்டு

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2018 (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய) இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நீண்ட நாளாக சுணங்கி வந்த காரியங்கள் கொஞ்சம் முயற்சி எடுத்துக்கொண்டால் மீண்டும் நல்லமுறையில் நடக்க ஆரம்பிக்கும். பொருளாதார விஷயங்களில் நல்ல விதமான, போக்கு தென்படும். நேர்முக மறைமுக எதிர்ப்புகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அரசாங்கத்திலிருந்து வந்த கெடுபிடிகள் அகலும். மனதிலிருந்த இனம் புரியாத குழப்பங்களும் சஞ்சலங்களும் நீங்கிவிடும். முடிவு எடுக்கப்படாமல் இருந்த சில விஷயங்களில் தீர்க்கமாக முடிவெடுப்பீர்கள்.  உடல் நலம் நன்றாக இருக்கும். உடல்நலம், மனவளம் மேம்பட யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். மகான்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அவர்களால் மந்திர உபதேசங்களும் கிடைக்கும். ஆன்மிகத்திலும் தெய்வ காரியங்களிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். குடும்பத்தின் வளர்ச்சி மேன்மையாக இருக்கும். உடன்பிறந்தோருக்கிடையே இருந்துவந்த கோபதாபங்கள் நீங்கி அவர்களுக்கு ஆதரவாகவும் இருப்பீர்கள். தொழில் சம்பந்தமாக சிலர் வெளியூர், வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்வீர்கள். குழந்தைகள் வகையில் முன்னேற்றங்கள் ஏற்படும்.   இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் பிடிவாதம், பெருமிதம் போன்றவற்றை ஓரங்கட்டி வைத்துவிட்டு அற்புதமாக காரியமாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்படினும் தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் அளவுக்குப் பணம் கிடைக்கும். சிலருக்கு ஸ்பெகுலேஷன் துறைகள் மூலம் கணிசமான லாபம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் உங்களை சிறிது அலட்சியப் படுத்துவார்கள். செய்தொழிலை வெளியூருக்கு விரிவுப் படுத்த வேண்டாம். குடும்பத்தில் சிலருக்கு தேவையற்ற பிரச்னைகள் தலை தூக்கும். அதனால் அனைவரிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும்.  கைவிட்டுச் சென்ற வாய்ப்புகளையும் மறுபடியும் தேடிச் சென்று பெறுவீர்கள். அநாவசிய பயணங்களைத் தவிர்க்கவும். எவரையும் அலட்சியப் படுத்தாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவீர்கள். எதிர்ப்பார்த்திருந்த பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளை குறித்த காலத்திற்குள் கெடுபிடியில்லாமல் முடித்துவிடுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். அலுவலக ரீதியான பயணங்களைத் தவிர்க்க முடியாமல் போகும். வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்ய வேண்டிய ஆண்டாக அமைகிறது. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது அவசியம். வியாபாரத்தை சீர்படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயிகளுக்கு லாபங்கள் அதிகரிக்கும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறாது. அதனால் கொள் முதல் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவும். அரசு மானியங்கள் கிடைக்கும். பழைய கடன்களும் ஓரளவுக்கு வசூலாகும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து ஆதரவு பெருகும். ஆனால் அதனை முழுவதுமாக அனுபவிக்க விடாமல் சிறு குறுக்கீடுகளும் இருக்கும். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடித்து புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும்.  கலைத்துறையினர் புகழும் பொருளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெற நீங்கள் செய்யும் முயற்சிகள் பலனளிக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் பயணம் மேற்கொள்வீர்கள். உங்கள் வசீகரமான பேச்சினால் நன்மைகளைப் பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். கணவருடனான உறவு சீராகவே செல்லும்.  உற்றார் உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். பொருளாதாரம் மேன்மையாகவே இருக்கும். மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல்வலிமை பெற உடற்பயிற்சிகளையும் மனவளம் பெற யோகாப் பயிற்சிகளையும் மேற்கொள்வீர்கள். பரிகாரம்: ஸ்ரீ அனுமனை வழிபட்டு வர நன்மைகள் பெருகும். ***** ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2018 (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய) இந்த 2018 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பெற்றோர் நண்பர்கள் வழியில் இருந்த மனதாங்கல்கள் அகலும். குறைந்த அளவு முதலீட்டில் அதிக அளவு லாபத்தைக் காண்பீர்கள்.  எண்ணிய எண்ணங்களுக்கு கச்சிதமாக செயல் வடிவம் கொடுப்பீர்கள்,. எதிரிகளின் தொல்லைகளும் இராது.  உடல் உபாதைகள் சீராகும். உங்களுக்கு எதிராக போடப்பட்டிருந்த பொய் வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பக் கைவந்து சேரும்.  விரும்பப் படாத நிலையிலிருந்து மாறி பலரால் வரவேற்கப்படுவீர்கள். மனதிற்கு விருப்பமான வேறு வீட்டிற்கு மாறுவீர்கள். உயர்ந்தோரின் நட்பைப் பெற்று மகிழ்வீர்கள்.கௌரவம் அந்தஸ்து கூடும். களவு போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும். உறுதி இல்லாமல் செய்த செயல்களும் இப்போது மளமளவென்று நடந்தேறிவிடும்.   ஜூலை மாதம் முதல்  இந்த ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்களை துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் மேம்படும். குடும்பத்தில் அமைதியும் குதூகலமும் தாண்டமாடும். உங்களுக்கான பின்னடைவுகள் நீங்கி தைரியமாக முன்னோக்கிச் செல்வீர்கள். என்ன நடக்குமோ என்று அஞ்சியிருந்த நிலை மாறி செயல்கள் மகிழ்ச்சிகரமாக  நடந்தேறும். எந்த பிரச்னைகள் வந்தாலும் முடிவில் அதிலிருந்து தப்பித்து விடுவீர்கள். உடன்பிறந்தோர் சில நேரங்களில் பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். உங்களை எதிர்த்து நின்ற போட்டியாளர்களை எளிதில் வென்று வாகை சூடுவீர்கள். சிலருக்கு அரசாங்கத்திலிருந்து விருதுகள் கிடைக்கும். தெய்வ பலம் கூடும். உங்கள் பிரார்த்தனைகளுக்கு செவிசாய்க்கும் காலகட்டமாக இது அமைகிறது. உத்தியோகஸ்தர்கள் பொருளாதாரத்தில் சுபிட்சங்களைக் காண்பார்கள். மேலதிகாரிகளிடமிருந்து எதிர்பார்த்த  ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வேலைகளை சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டே செய்வீர்கள். வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்ய வேண்டிய ஆண்டாக இது அமைகிறது. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது அவசியம். மற்றவர் பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.  வியாபாரத்தைச் சீர்திருத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். விவசாயிகள் சிறு சங்கடங்களைச் சந்திப்பார்கள். பழைய கடன்களை படிப்படியாக அடைப்பார்கள். கொள் முதல் லாபங்கள் இருந்தாலும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் கால்நடைகளுக்கும் செலவு செய்ய நேரிடும். சக விவசாயிகளிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். நழுவிப்போன குத்தகைகள் மீண்டும் உங்களைத் தேடி வரும்.  அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவார்கள். ஆனால் அதை முழுவதுமாக அனுபவிக்க விடாமல் சிறு குறுக்கீடுகளும் இருக்கும். அவற்றைச் சமாளிக்க மனம் தளராமல் பாடுபட்டு நற்பெயரைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். கலைத்துறையினர் எதிர்பாராத பண வரவையும் புதிய வாய்ப்புகளையும்  பெறுவார்கள். உங்கள் திறமையால் புதுபொலிவைக் காண்பீர்கள். வெளியூர் பயணங்கள் நன்மை தரும். உழைப்புக்கும் அப்பாற்பட்டு பாராட்டப்படுவீர்கள். ரசிகர்கள் சற்று ஒதுங்கியே இருப்பார்கள்.  பெண்மணிகள் மனநிம்மதியைக் காண்பார்கள். தர்ம காரியங்களிலும் தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவார்கள். புதிய சொத்துகள் வாங்க அதற்கான வேலைகளை துவங்குவீர்கள். குடும்பத்தினருடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். கணவருடன் ஒற்றுமை கூடும். குடும்பப் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.  மாணவமணிகள் தங்கள் கோரிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவும். தீவிர முயற்சி செய்து படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் வேண்டாம். 

பரிகாரம்: ஸ்ரீ ராதா கிருஷ்ணரை வழிபட்டு வரவும்.
 

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...