திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

மிதுனம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** மிதுனம் (GEMINI) இது ஒரு ஆண் ராசி. காற்று ராசியும்கூட. இது ஒரு உபய ராசியும் ஆகும். இது இரட்டை ராசியாதலால், இரண்டு கோடுகளால் குறிப்பார்கள். இரண்டு கோடுகள் போட்டு அதை இணைத்தால் இந்த ராசியின் உருவம் கிடக்கும். C-தான் இந்த ராசியின் குறியீடு. இந்த ராசிக்கு அதிபதி புதன். அதுவும் ஒரு இரட்டை கிரகம். இரண்டு மனைவி, இரண்டுவிதமான வருமானங்கள், இரட்டைக் குழந்தைகள் ஆகியவற்றைக் குறிப்பது இந்த ராசியும், புதன் கிரகமும்தான். இந்த ராசியும், புதன் கிரகமும் புத்திசாலித்தனத்தையும், புத்திக்கூர்மையையும் குறிப்பவை. பொதுவாகவே, காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் புத்திசாலித்தனத்தைக் குறிப்பவை. புதன் கிரகம் ஒரு நிலையில்லா தன்மை கொண்டது. இது சூரியனுக்கு முன்னும் பின்னும் நிலையில்லாமல் சென்றுகொண்டிருக்கும். ஆகவே, இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் ஒரு நிலையில்லா சுபாவம் கொண்டவர்கள். எதிலும் ஸ்திரமான பிடிப்பு இல்லாதவர்கள். உடல் உறுப்புகளில் கைகள், தோள்பட்டை, நுரையீரல் ஆகியவற்றைக் குறிப்பது இந்த ராசி.

இன்று

நவம்பர் 19 இன்று வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும் இப்போது தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கலாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3

இந்த வாரம்

நவம்பர் 16 - நவம்பர் 22 (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய) பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு குறைந்து காணப்படும். சமயோசித புத்தியுடன் பணியாற்றி நற்பெயரை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் கவனம் சிதறாமல் வேலைகளைப் பட்டியலிட்டு செய்து முடிக்கவும். பதவி உயர்வை நீங்கள் எதிர்பார்க்கலாம். வியாபாரிகளுக்கு உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். விவசாயிகளுக்கு தானிய விற்பனை லாபகரமாக முடியும். குடும்ப நிலைமை மேன்மையடையும். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும், ஒத்தி வைத்திருந்த திட்டங்களைச் செயல்படுத்த முனைவீர்கள். கட்சியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைக்கும். 

பெண்மணிகளுக்குக் கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பேசும் நேரத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். மாணவமணிகள் விளையாட்டில் கவனம் செலுத்தவும். மேலும் படிப்பிலும் வெற்றிக்கு பிரகாசமான வழிகள் தென்படும். பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை வழிபடவும்.  அனுகூலமான தினங்கள்: 17, 18.

சந்திராஷ்டமம்: இல்லை.
 

இந்த மாதம்

நவம்பர் மாத பலன்கள் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) இந்த மாதம் ராசிநாதன் புதன் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருக்கிறார். ராசிநாதன் புதன் சஞ்சாரத்தால் நல்ல பலன்களைப் பெற இயலும்.  எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு அதிகரிக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதே நேரத்தில் பொருள்வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். தொழில் ஸ்தானதிபதி குரு மறைந்திருந்தாலும் அவர் தனது ஐந்தாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தைப் பார்க்கிறார். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும்.  குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து திருப்தியடைவீர்கள். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். கலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். அரசியல் துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும்.  மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற தடைகளை தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடைய நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.

திருவாதிரை:
இந்த மாதம் முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க  வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். 

புனர்பூசம்:
இந்த மாதம் புதிய ஆர்டர் விஷயமாக தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம்  காண்பீர்கள். புதிய கிளைகள்  தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள்.

பரிகாரம்: பெருமாளை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன் சந்திராஷ்டம தினங்கள்: 14, 15 அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

இந்த ஆண்டு

தமிழ் புத்தாண்டு பலன்கள் - 2018 (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் அனைத்துச் செயல்களிலும் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். உங்கள் கௌரவம், அந்தஸ்து ஆகியவை படிப்படியாக உயரத்தொடங்கும். முக்கியமான விஷயங்களில் பெற்றோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன்பிறந்தோரை விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் போட்டியாளர்கள் அடங்கியே இருப்பார்கள். செய்தொழிலை விரிவுபடுத்த சிறிய தூரப்பயணங்களை அடிக்கடி செய்ய வேண்டி வரும். பொருளாதாரம் சிறப்பாகவே செல்லும். பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளும் தேடி வரும். அரசாங்கத்திடமிருந்து, கெடுபிடிகள் என்று எதுவும் ஏற்படாது. அதேநேரம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அவசரப்பட்டு முன்யோசனையின்றி எவரிடமும் பேசவேண்டாம். மேலும் இந்த காலகட்டத்தில் தற்பெருமை கூடாது.  இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் ஆக்கபூர்வமான விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். செலவினங்கள் கட்டுக்குள்ளேயே இருக்கும். இதுவரை விலை போகாமலிருந்த மண் மனைகள் நல்ல விலைக்கு விற்பனை ஆகும். அரசாங்க அதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள். உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். அநாவசியமாக எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். இதனால் வீண்பழிகளுக்கு ஆளாக நேரிடும். மற்றபடி மன தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். விருந்து கேளிக்கைகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். எல்லா விஷயங்களிலும் முன்னதாக திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.  உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் சில அனுகூல திருப்பங்களைக் காண்பீர்கள். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலாகிச் செல்லும் நிலை ஏற்படும். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்துகொண்டாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பு நல்குவார்கள். பதவி உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும். சோம்பலுக்கு இடம்தர கூடாது. வியாபாரிகள் வியாபாரத்தில் வளர்ச்சியைக் காண்பார்கள். தொடர்ந்து வளர்ந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவு பெருமளவுக்கு இருப்பதால் கூட்டுத்தொழில் சிறப்பாக நடக்கும். புதிய முதலீடுகள் செய்து கடையை விரிவுபடுத்துவீர்கள். இந்த ஆண்டு கொஞ்சம் நலம் தரும் திருப்பங்களைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். விவசாய உபகரணங்களுக்கு சற்று கூடுதல் செலவு செய்ய நேரிடலாம். புதிய நிலங்கள் குத்தகைக்கு வந்து சேரும். போட்டிக்கு தகுந்த விலையை நிர்ணயிப்பீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் தைரியமும் செயல்படும் ஆற்றலும் கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கட்சித்தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பைக் காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் செயல்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். பெயர் புகழ் கூடும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெயரும் புகழும் கூடும். ரசிகர்கள் உங்களை அலட்சியப் படுத்தினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்கு பணம் செலவு செய்வீர்கள். பெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக இருப்பதால் ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். இதனால் சுப விரயங்கள் உண்டாகும். கணவருடன் ஒற்றுமையோடு நடந்து கொள்ளுவார்கள். கணவரும் உங்களை மதித்து நடத்துவார். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோர்களின் ஆதரவு கிட்டும். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவார்கள். உடல்நலம் பலப்படும்.  பரிகாரம்: துர்க்கையையும் நவக்கிரகங்களையும் பிரதட்சணம் செய்யுங்கள். ***** ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2018 (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய) இந்த 2018 -ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நீங்கள் ஒரு பாதுகாப்பு வளையத்தில் வலம் வருவீர்கள். சில சிரமங்கள் ஏற்பட்டாலும் வெகு சாமர்த்தியமாக அதிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். பெற்றோர் வழியில் இருந்த நோய் நொடிகளும் குணமாகிவிடும். கைவிட்டுச் சென்ற வாய்ப்பும் திரும்ப கைக்கு கிடைத்துவிடும். வழக்கு விஷயங்கள் நூற்றுக்கு நூறு சாதகமாகும். 

தலை சுமை இறங்கிவிட்டது போன்ற உணர்வுகளைப் பெறுவீர்கள். சோம்பல் என்பது அறவே இராது. சுறுசுறுப்பாக செயல்பட்டு பழைய இழப்புகளை சரிகட்டி விடுவீர்கள். புதுவித தொழில் ஆகியவற்றை செய்வீர்கள். குடும்ப சகிதமாக புனித யாத்திரைக்குச் சென்று வருவீர்கள். மேலும் குடும்பத்தாருடன் வருமானத்தை பெருக்க பல வழிகளிலும் யோசிப்பீர்கள். நிதி நெருக்கடி ஏற்படாது காக்கப்படுவீர்கள். 
அவசியமில்லாத கவலைகள் மனதை விட்டு அகலும். உங்களின் சரியான அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக ஆக்குவீர்கள். வில் வளைந்தது போல் வளைந்த நீங்கள் அம்பு வேகமாய் பாய்ந்தது போன்று துரிதமாக செயல்களைச் செய்து அவைகளை சாதனையாக மாற்றிவிடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் கடினமாக உழைத்து காரியமாற்றுவீர்கள். அதற்குண்டான பலன் சிறிது தாமதத்துடன் கிடைக்கும் என்றாலும் பொருளாதார நிலையில் தொய்வு ஏதும் உண்டாகாது. திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்பதற்கு இணங்க பலர் குடும்பத்தைவிட்டு பிரிந்து வெளிநாடு செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதால் சிக்கன நடவடிக்கையை கடைப்பிடிப்பது அவசியம். கண், சிறுநீரக கல் சம்பந்தப்பட்ட உபாதைகள் சிலருக்கு ஏற்பட்டு அதனால் மருத்துவ செலவுகள் உண்டாகும். தேக ஆரோக்கியம் சீராகவே தொடரும். வீடு மாறும் எண்ணம் உள்ளவர்கள் மனம் விரும்பிய வீட்டுக்கு மாறிச் செல்வார்கள். பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். சிலருக்கு வெளிநாட்டிலிருந்து வருமானம் வரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் சில அனுகூல திருப்பங்களைக் காண்பீர்கள். சிலருக்கு மனதிற்கு விருப்பமான இடமாற்றங்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்து கொண்டாலும் தொல்லைகள் கொடுக்கமாட்டார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள். பதவி உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும். வேலைகளை திட்டமிட்டு சரியாகச் செய்வது அவசியம். சோம்பலுக்கு இடம் தரக்கூடாது.  வியாபாரிகள் கொக்குக்கு ஒன்றே  மதி என்கிற ரீதியில் வியாபாரத்தில் குறியாக இருக்கவும். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். கூட்டாளிகளும் நண்பர்களும் அனுசரணையாக இருப்பார்கள். கடன் கொடுக்காமல் கறாராகப்பேசி வியாபாரத்தை விரிவு படுத்தவும். பழைய கடன்களைப் படிப்படியாகத் திருப்பிச் செலுத்தி விடுவீர்கள்.  விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். பாசன வசதிகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாய உபகரணங்களுக்கு சற்று கூடுதல் செலவு செய்ய ஆழ்ந்து திட்டம் தீட்டுவீர்கள். போட்டிக்குத் தகுந்த விலையை நிர்ணயிப்பீர்கள். அரசியல்வாதிகள் பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்படுவார்கள். மேலிடத்தின் கருணை பார்வைகளுக்கு உந்து சக்தியாக அமையும். சில நேரங்களில் உட்கட்சிப் பூசலில் சிக்கி மன வருத்தத்திற்கு ஆளாவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெயரும் புகழும் கூடும். சக கலைஞர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். சக கலைஞர்களிடம் நல்ல உறவை பேணுவீர்கள்.  பெண்மணிகளுக்கு புத்திசாலித்தனம் கூடும். பெரியோர்களின் ஆதரவு நிறைந்திருக்கும். பொருளாதாரத்தில் சிறப்புகளைக் காண்பீர்கள். ஆடை அணிமணிகளை வாங்கும் யோகம் உண்டாகும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். பெற்றோர் உங்கள்விருப்பத்தை நிறைவேற்றுவர்.  சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  அநாவசிய சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்கவும். உடல் நலம் பலப்பட தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...