புதன்கிழமை 21 நவம்பர் 2018

சிம்மம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** சிம்மம் (LEO) இது ஒரு ஆண் ராசி. ஸ்திர ராசியும் கூட. மேஷத்தைப்போல இதுவும் ஒரு நெருப்பு ராசி. இதன் அதிபதி சூரியன். இது சூரியனின் மூலத்திருகோண வீடு. சூரியனின் மேஷ ராசிப் பிரவேசமே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. சூரியனின் கடக ராசிப் பிரவேசம் தட்சணாயணம் என்றும், மகர ராசிப் பிரவேசம் உத்தராயணம் என்றும் கூறப்படுகிறது. இந்த ராசிக்கு சிம்ம உருவத்தைக் கொடுத்தாலும், இந்த ராசி மனித இதயத்தின் இரண்டு வால்வுகளின் அமைப்பையே கொண்டிருக்கிறது. இது E என்று குறிக்கப்படுகிறது. மனித இதயம், பின் முதுகு, முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றை இந்த ராசி குறிக்கிறது.

இன்று

நவம்பர் 21 இன்று அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். பெண்கள் தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள்  மேற்கொள்வீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

இந்த வாரம்

நவம்பர் 16 - நவம்பர் 22 (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய) நீங்கள் மதிப்பு மரியாதை உயரும். பயணங்களால் நன்மை அடைவீர்கள். உறவினர்களின் ஆதரவு கூடும். திட்டமிட்ட வேலைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்துவிடுவீர்கள். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் நட்போடு பழகுவார்கள். வியாபாரிகளுக்கு செயல்கள் அனைத்தும் சாதகமாகவே முடியும். புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் மந்தமாக இருக்கும். கால்நடைகளால் வருமானம் சுமாராக இருக்கும். 

அரசியல்வாதிகள் செய்யும் செயல்களில் வெற்றி பெறுவார்கள்.பெயரும் புகழும் கிடைக்கப் பெறுவர். தொண்டர்களின் ஆதரவுடன் கடினமான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர்
மனதிற்கினிய ஒப்பந்தங்கலைச் செய்வார்கள். ரசிகர்களின் ஆதரவைப் பெறுவார்கள். 

பெண்மணிகள் வீண்வாதங்களில் ஈடுபடாமல் உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.  பரிகாரம்: ஞாயிறன்று சூரிய நமஸ்காரம் செய்து ஆத்ம ஒளி பெறுங்கள்.  அனுகூலமான தினங்கள்: 16, 21.   சந்திராஷ்டமம்: 18, 19, 20. 

இந்த மாதம்

நவம்பர் மாத பலன்கள் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) இந்த மாதம் ராசிநாதன் சூரியன் ஆரம்பத்தில் பலமிழந்தாலும் மாத மத்தியில் பலம் கொள்கிறார். சுகஸ்தானத்திற்கு மாறுகிறார். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடை பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்க கூடும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குடும்பாதிபதி புதன் பகவானால் குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமூகமாக நடந்து முடியும். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள். அரசியல் துறையினருக்கு அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.

மகம்:
இந்த மாதம் நன்மை தீமை பற்றிய கவலைப்படாமல் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வீர்கள். போட்டிகள் மறையும். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். 

பூரம்:
இந்த மாதம் கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். வேற்று மொழி பேசும் நபரால்  நன்மை உண்டாகும். 

உத்திரம்:
இந்த மாதம் புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.  வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல்  ஏற்படலாம். வியாபார  விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். 

பரிகாரம்: பிரதோஷ வேளையில் சிவனையும் நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்சனை களும் சுமூகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: சந்திரன், சுக்கிரன்; தேய்பிறை: சந்திரன், சுக்கிரன் சந்திராஷ்டம தினங்கள்: 19, 20 அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 30

இந்த ஆண்டு

தமிழ் புத்தாண்டு பலன்கள் - 2018  (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய) இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் சொல்லுமளவுக்கு லாபங்கள் கிடைக்கும். செய்தொழில் கணிசமாக விருத்தியடையும். பெற்றோர்களுடன் இணக்கமாக நடந்துகொண்டு அவர்களின் மனம் நோகாமல் பார்த்துக்கொள்வீர்கள். வழக்கு விஷயங்கள் அனுகூலமான திருப்பங்களை சென்றடையும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள்கள் சிறிது விரயமாகும் காலமிது. செலவுகள் செய்யும் நேரத்தில் கவனம் தேவை. நண்பர்கள் உற்றார், உறவினர்களுடன் சுமுகமான தொடர்பை வைத்துக்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்பட  யோகா, பிராணாயாமம் செய்யவும்.  எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் சேருவீர்கள். பழைய தொழிலில் ஆதாயம் இல்லை என்று கருதி புதிய தொழிலையும் தொடங்குவீர்கள். திடீரென்று மகிழ்ச்சி தரும் உல்லாசப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். செய்தொழிலில் பலமான ஓர் அஸ்திவாரத்தையும் போடுவீர்கள். கடன்கள் அனைத்தையும் படிப்படியாக அடைத்து விடுவீர்கள். சிலருக்கு பங்குவர்த்தகத்தின் மூலமும் சிறிது கூடுதல் வருமானம் கிடைக்கும்.  உங்களுக்குக்கீழ் வேலைப் பார்ப்பவர்களுடன் உறவு சீராகவே தொடரும். குடும்பத்தில் முயற்சியின் பேரில் சுப காரியப் பேச்சுவார்த்தைகள் கூடிவரும். மறைமுக எதிரிகள் மறைந்து போவார்கள். இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எண்ணிய எண்ணங்களும் போடும் திட்டங்களும் கூட சில சமயம் நடைபெறவில்லை என்றாலும் சில நாள்கள் கழித்து பலன் தரக்கூடியதாக இருக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை சிறிது சிரமத்தின்பேரில் வாங்குவீர்கள். சுய கௌரவத்திற்காக மற்றவர்களை ஏவி காரிய சாதனை செய்து வந்த நீங்கள் தற்சமயம் தாமாகவே நேர்முகமாக காரியத்தில் காலடி எடுத்து வைத்து மாறுதலைச் சந்திப்பீர்கள். வண்டி வாகனங்களுக்குப் பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும். எந்த விஷயத்திலும் அகலக்கால் வைக்க வேண்டாம். தேக ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டி வரும். கண், தோல், வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தைரியம் துணிவு இப்பொழுது சரிபாதிக்குமேல் குறைந்துவிட்டது போல் தோன்றும். அதனால் அவசரப்பட்டு எதையாவது பேசிவிட்டு பின்பு அதனால் மனவருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. எவருக்கும் முன்ஜாமீன் போடுவதோ உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பதோ கூடாது. உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். பதவி உயர்வு பெறுவதற்கு உங்களை தயார் படுத்திக் கொள்வீர்கள். பணவரவு குறித்த நேரத்தில் கை வந்து சேரும். வியாபாரிகளுக்கு லாபம் பெருகினாலும் கடும் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். அதனால் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும். முதலீடுகளை கூட்டாளிகளுடன் கலந்தாலோசித்தப்பின்பு செய்யவும். வேகமாக விற்பனையாகும் பொருள்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து லாபம் பெருகும். கால்நடைகளால் நல்ல லாபம் கிடைக்குமென்பதால் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள்.  பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். வழக்குகள் முடிய தாமதமாகும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேலும் உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து சில பணிகளைக் கொடுக்கும். அவைகளை செவ்வனே செய்து முடித்து விடுவீர்கள். தொண்டர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். திட்டங்களை சிரமமின்றி முடிப்பீர்கள். கட்சிப் பணிக்காக சில புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெற தீவிர முயற்சிகளைச் செய்ய வேண்டி வரும். சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சக கலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். பெண்மணிகள் கணவருடனான உறவு சீர்படும். குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். உற்றார் உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். மாணவமணிகள் படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவார்கள். பாடங்களை முன்னதாகவே படித்து ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை வழிபட்டு வரவும். ***** ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2018 (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய) இந்த 2018 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் வருமானம் சீராகவே தொடரும் என்றாலும் பேராசைக்கு இடம் தராமல் பணியாற்ற வேண்டும். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளும் அவர்கள் தீட்டும் சதித்திட்டங்களும் உங்களை கலக்கமுற செய்யும். அதோடு நன்கு யோசித்த பிறகே மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கவும்.  மற்றபடி பெரிய கடன்களில் சிக்கிக் கொள்ளமாட்டீர்கள். தடங்கல்களைத் தாண்டி வெற்றியடைவீர்கள். நெடுங்காலமாக தொந்தரவு கொடுத்து வந்த உடற்கோளாறுகள் தீர்ந்து உடல்நலம் மேம்பாடு அடையும். சோம்பல் அறவே நீங்கி சுறுசுறுப்புடன் காரியமாற்றுவீர்கள். குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சமூகத்தில் சிறப்பான கௌரவம் அந்தஸ்தும் கிடைக்கும். செய்தொழிலில் புதிய உத்வேகத்துடன் இறங்குவீர்கள். உடன்பிறந்தோர் மூலம் தேவையான ஆதரவைப் பெறுவீர்கள். விஷயங்களைப் புரிந்து கொண்டு சரியான வார்த்தைகளை பயன்படுத்துவீர்கள்.  இல்லத்தில் திருமணம் போன்ற சுய காரியங்களும் குழந்தைப்பேறும் உண்டாகும். பூர்வீக வழி சொத்துகள் சிரமமில்லாமல் கைவந்து சேரும். சமூகத்தில் உயர்ந்தோர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். சிலர் புதிய வீடு வாங்கி நூதன கிரகப்பிரவேசம் செய்யும் காலகட்டமாக இது அமைகிறது.  ஜூலை மாதம் முதல்  இந்த ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் அவசர புத்தியினால் சிறிய தவறுகளைச் செய்தாலும் கடைசி நேரத்தில் அவைகளிடமிருந்து விலகி விடுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளும் தானாகவே விலகி விடும், ஓய்வில்லாமல் காரியமாற்றிக்கொண்டே இருப்பீர்கள். செய்தொழிலில் அனுதினமும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமையும். உங்கள் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேறும். ஆபத்துகளை சூட்சும புத்தியால் கண்டறிந்து அதைக் கடந்து வந்து விடுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தன்னம்பிக்கை உயரும். பேச்சில் வசீகரமும் நடையில் கம்பீரமும் உண்டாகும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும். உங்களின் செயல்களை வரிசைப்படுத்தி காரியமாற்றும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். பணவரவு குறித்த நேரத்தில் கைவந்து சேரும். சக ஊழியர்களுக்கும் உதவி செய்வீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.  பொருளாதார நிலையில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். புதிய முதலீடுகளில் கவனத்துடன் ஈடுபடுவது நன்மை தரும். சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு பொருள்களின் விலையை நிர்ணயித்து லாபங்களைப் பெறுவீர்கள். பழைய கடன்களிலிருந்து விடுபடும் சூழ்நிலை உருவாகும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து லாபம் பெருகும். புதிய கால்நடைகளை வாங்கிப் பயனடைவீர்கள். புதிய முயற்சிகளிலும் ஈடுபடுவீர்கள். பழைய கடன்களையும் திருப்பிச் செலுத்தும் ஆண்டாக இது அமையும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும் . வழக்குகள் முடிய தாமதமாகும். அரசியல்வாதிகளுக்கு நல்ல பெயரும் புகழும் உண்டாகும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொண்டு கட்சிப் பணிகளை ஆற்றுவீர்கள். புதுத்தெம்புடன் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெற தீவிர முயற்சிகளைச் செய்ய வேண்டிவரும். சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சக கலைஞர்களின் உதவியால் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடன் உறவு நன்றாக இருக்கும். உற்றமும் சுற்றமும் அனுகூலமாக இருப்பார்கள். விருந்து கேளிக்கைகளில் ஈடுபட்டு பொழுதை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள். தாய் வீட்டுச் சீதனமும் வந்து சேரும். உங்கள் பெயரில் அசையாச் சொத்துகள் வாங்கும் யோகம் உள்ளது. மாணவமணிகள் படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவார்கள். பெற்றோர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். விளையாட்டில் புதியவைகளைக் கற்றுக்கொள்வீர்கள். பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...