18 நவம்பர் 2018

துலாம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** துலாம் (LIBRA) இது ஒரு ஆண் ராசி. சர ராசி - காற்று ராசியும்கூட. இதன் அதிபதி சுக்கிரன். இதற்கு தராசு உருவத்தைக் கொடுத்தாலும், இதன் சின்னம் G. இது முதுகின் பின்பகுதி மற்றும் அதன் கீழ்ப்பகுதி (புட்டம்), சிறுநீரகம் ஆகியவற்றைக் குறிக்கிறது. சனி இந்த ராசியில்தான் உச்சமடைகிறார். சுக்கிரனுக்கு மூலத் திரிகோண வீடு. சந்திரன், செவ்வாய், குரு ஆகியவை இந்த ராசியில் இருந்தால், அவர்கள் எதிரியின் வீட்டில் இருப்பதாகக் கருதப்படும். இந்த ராசியில் பிறந்தவர்கள், தன் கணவன் / மனைவி மேல் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்கு சுக்கிரன் அதிபதியாவதால், இவர்களுக்கு எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் சுபாவம் இருக்கும். எந்தப் பிரச்னையையும் சமாதானமாகப் பேசித் தீர்த்துக்கொள்வதில் ஈடுபாடு காட்டுவார்கள். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் லக்கினாதிபதியாக இருப்பதைப்போல், எட்டாம் வீட்டுக்கும் அதிபதியாகிறார். ஆகவே, இவர்களுடைய பிரச்னைகளுக்கு இவர்களே பொறுப்பு.

இன்று

நவம்பர் 18

இன்று கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நிறைவேறும். உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த  நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும்.  கோபத்தை குறைப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
 

இந்த வாரம்

நவம்பர் 16 - நவம்பர் 22 (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய) உங்கள் எண்ணங்கள் வெற்றி பெறும். சுபச் செய்திகள் தேடி வரும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரக் காண்பீர்கள். நண்பர்களின் அலட்சியப்போக்கை பெரிது படுத்த மாட்டீர்கள். வேலையில் குறியாக இருந்து பலன் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தகர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு தடைபடும். பணிகளில் முன்கூட்டியே செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வியாபாரிகள் புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடவும்.
நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவும். விவசாயிகள் புதிய தானியங்களைப் பயிரிட்டு நல்ல மகசூலைக் காண்பார்கள். வழக்கமான விளைச்சல்களில் அதிக கவனம் செலுத்தவும்.

அரசியல்வாதிகள் தீட்டும் திட்டங்கள் யாவும் வெற்றி பெறும். எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதற்கான நேரம் வந்து விட்டது. கலைத்துறையினர் கடுமையாக உழைத்து நற்பலன் அடைவார்கள். கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் திரும்பக் கிடைக்கும்.  பெண்மணிகளுக்கு குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளால் சந்தோஷம் கிடைக்கும். கணவரின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். மாணவமணிள் படிப்பில் அக்கறை காட்டவும். பரிகாரம்: ஆஞ்சநேயரையும் லட்சுமி ஹயக்ரீவரையும் வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 17, 20.   சந்திராஷ்டமம்: இல்லை.

இந்த மாதம்

நவம்பர் மாத பலன்கள் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்) இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் ஸ்தானத்தில் ராகு இருப்பதும் - தொழில் ஸ்தானத்தை குரு தனது ஒன்பதாம் பார்வையால் பார்ப்பதும் நல்ல அம்சம். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய  முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.  அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பாதிபதி செவ்வாய் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.   கலைத்துறையினருக்கு தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.  புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள்  செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசியல் துறையினருக்கு நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும்.  எதிர்பார்த்த தகவல்கள் வரும்.  மகிழ்ச்சி உண்டாகும்.  வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும்.  மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். 

சித்திரை:
இந்த மாதம் உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம்.

ஸ்வாதி:
இந்த மாதம் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை  சாதகமாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின் நலனின் அக்கறை காட்டுவீர்கள்.

விசாகம்:
இந்த மாதம் அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். 

பரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி;  சந்திராஷ்டம தினங்கள்: 23, 24

அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8
 

இந்த ஆண்டு

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2018 (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய) இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று பிரபலஸ்தர் என்று பெயரெடுப்பீர்கள். செய்தொழிலைச் செம்மையாக நடத்துவீர்கள். உங்களுக்குக்கீழ்  வேலை செய்பவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். பொருளாதாரம் படிப்படியாக வளர்ச்சி அடையும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த ஆதரவும் கிடைக்கும். போட்டிகளில் முழுமையான வெற்றி கிடைக்கும். பகைவர்களும் நண்பர்களாவார்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் வகையில் எண்ணிய எண்ணங்கள் திண்ணமாய் நிறைவேறும்.  வெளிவட்டாரத்தில் பரபரப்பாகச் செயலாற்றுவீர்கள். அதேநேரம் குழந்தைகள் வழியில் சிறிது அனாவசியச் செலவு செய்ய நேரிடும். மேலும் அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். சிலர் சிறிதளவு முதலீடு செய்து பெரிய அளவுக்கு தொழில் செய்ய வாய்ப்புகள் உண்டாகும். சிலருக்கு வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் பராமரிப்புச் செலவுகள் ஏற்படலாம்.  பெற்றோர்களின் உடல் நலம் கவனிக்கப்பட வேண்டியிருக்கும். அவர்களுக்கு சிறிது மருத்துவச் செலவுகளும் உண்டாகும். மற்றபடி நேரடியாகவோ மறைமுகமாகவே ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளும் லாவகமாகச் சமாளித்துவிடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.  இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் வருமானத்திற்கு எந்தவிதக் குறைவும் இருக்காது. குடும்ப ஒற்றுமை நல்ல விதத்தில் காணப்படும்.  கூட்டாகத் தொழில் செய்தவர்கள் தனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டு தனித்து செயல்படத் தொடங்குவார்கள். குழந்தைகளின் கல்வி விஷயத்தில் சிறிது தோக்கம் காணப்படுவதால் அவர்களை சற்று கூடுதலாக கவனிக்க வேண்டி வரும். மறைமுக எதிர்ப்பாளர்கள் உங்கள் காலை வாரிவிட திட்டமிடுவார்கள்.  சமயோஜித புத்தியால் சமாளித்து விடுவீர்கள். உடன்பிறந்தோரை அரவணைத்து அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். பங்கு வர்த்தகத் துறையின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். உங்கள் பேச்சில் கண்ணியமும் நடையில் மிடுக்கும் உண்டாகும். சிலருக்கு திடீரென்று வெளிநாடு சென்று வரும் யோகமும் உண்டாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.  சிலருக்கு வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு மாற்றம் மற்றும் ஊதிய உயர்வு ஆகிய இரண்டுமே கிடைக்கும். மேலதிகாரிகளும் உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடம்பில் இருந்த சோர்வும் மனதிலிருந்த தெளிவின்மையும் அகன்று மிடுக்குடன் நடந்து கொள்வீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். வியாபாரிகள் வியாபாரத்தை முனைப்புடன் செய்வீர்கள். கூட்டாளிகளும் நண்பர்களும் ஒத்துழைப்புடன் நடந்துகொள்வர். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள்.  பொருளாதார வளம் நன்றாக இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். வங்கிகளிடமிருந்து கடன்கள் கிடைக்கும். நீர் வளத்தால் உங்கள் எண்ணங்கள் பலிதமாகும். புதிய குத்தகைகளினால் லாபம் கொட்டும்.  வயல் நிலங்களை வாங்கி மகிழ்வீர்கள். பால் வியாபாரத்தால் பலன் உண்டு. அரசியல்வாதிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே இடையூறுகள் உண்டாகும். அவர்களின் ரகசியத் திட்டங்களை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். மாற்று கட்சியினரிடம் மனம் திறந்து பேச வேண்டாம். கலைத்துறையினரின் அனைத்து காரியங்களும் சுமுகமாகவே முடிவடையும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். பொருளாதார வசதி மேம்படும்.  புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். மாணவமணிகள் படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவார்கள். நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.  பரிகாரம்: ஸ்ரீ ராமரை ராமநாமத்தை ஜெபித்தபடி  வழிபடவும். ***** ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2018 (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய) இந்த 2018 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் வளர்ச்சி அடைவீர்கள். தாய் வழியின் மூலம் நன்மைகள் கூடும். அன்னை வழி உறவினர்களுடன் விட்டுப் போயிருந்த உறவுகள் திரும்ப வந்து சேரும். அவர்களுக்கு நீங்கள் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். உள்நாட்டு பயணங்களை அதிகமாக செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருந்தாலும் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படலாம். அதனால் சரியான நேரத்தில் ஆகாரத்தை எடுத்துக் கொள்ளவும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் எண்ணங்கள் போல் செயல்கள் நடக்கும். அனைத்து விஷயங்களிலும் நல்லதையே பார்ப்பீர்கள். வருமானம் சிறப்பாக இருப்பதால் வரவுகளை எதிர்காலத்துக்கு சேமித்துக் கொள்வீர்கள். எதிரிகள் ஒதுங்கிச் செல்வர்.  போட்டிகளையும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். கடிதம் மூலம் மகிழ்ச்சிகரமான செய்தி வரும். தெய்வீகம் உங்கள் வாழ்க்கையில் இரண்டற கலந்திருக்கும் காலகட்டமிது. ஜூலை மாதம் முதல்  இந்த ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் புத்தி சாதுர்யம் கூடும். அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். குழந்தைகளால் மேன்மை அடைவீர்கள். நெடுநாள் விற்காமல் இருந்து வந்த சொத்து நல்ல விலைக்கு விற்பனையாகும். வருமானம் வந்துகொண்டிருந்தாலும் செலவுகளும் சேர்ந்தே தொடரும்.  அதனால் அத்தியாவசிய செலவுகள் மட்டுமே செய்து கையிருப்பைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சிலர் வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். எவரையும் வீண் சந்தேகப்படுவது நன்மை தராது. அனைத்து விஷயங்களிலும் நிதானமாக செயல்படவும். பெரிதாக மனக்கோட்டைகள் கட்ட வேண்டாம். குடும்பத்தாருடன் புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மகான்களின் சந்திப்பு மூலம் மன அமைதியும் கிட்டும். வம்பு வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்கு தேவையான வசதி வாய்ப்புகளை உருவாக்கித் தரும் காலகட்டமாக இது அமைகிறது. உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு, ஊதிய உயர்வு ஆகிய இரண்டும் கிடைக்கும். மேலதிகாரிகள் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடலில் இருந்த சோர்வும் மனதிலிருந்த தெளிவின்மையும் அகன்று மிடுக்குடன் நடந்து கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ஒழுங்காக நடக்கும். வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டங்களுக்கு உள்ளாவீர்கள். கூட்டாளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். வியாபாரிகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். சிலர் கூட்டாளிகளை விட்டொழித்து தனியாகத்தொழில் தொடங்கும் ஆண்டாக இது அமைகிறது. விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். புதிய குத்தகைகளால் லாபம் கொட்டும். விளை நிலங்கள் வாங்குவீர்கள். சேமிப்புகளும் உயரும். பால் வியாபாரத்தாலும் கால்நடைகளாலும் நன்மை உண்டாகும். வழக்குகள் சாதகமாகும்.  அரசியல்வாதிகள் கஷ்டப்படாமல் காரியமாற்றலாம் என்று நினைத்து செயலில் இறங்குவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு ஒப்பானது. இதனால் உழைப்பை கூட்டிக்கொள்ளுங்கள். கட்சித் தலைமையிடம் கவனமாக இருக்கவும். உங்கள் சொல்லுக்கு மக்கள் மத்தியில் மதிப்பு கூடினாலும் தொண்டர்கள் உங்களிடம் நிறைய எதிர்பார்ப்பார்கள். கலைத்துறையினருக்கு அனைத்து காரியங்களும் சுமுகமாக முடிவடையும். உங்களைத் தேடி புதிய வாய்ப்புகள் வந்து சேரும். திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் தேடி வரும். பொருளாதார வசதி மேம்படும். பெண்மணிகள் குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். உறவினர்கள் வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி அமைதி நிலவும். மேலும் குழந்தைகளால் மகிழ்ச்சி கூடும். கணவர் உங்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்.   மாணவமணிகள் படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவார்கள். ஒருமித்த மனதுடன் படித்து மதிப்பெண்களை அள்ளுவீர்கள். நண்பர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். விளையாட்டுகளில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற முடியாமல் போகும். பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...