செவ்வாய்க்கிழமை 11 டிசம்பர் 2018

மீனம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). ***​ மீனம் (PISCES) (இது ராசி மண்டலத்தின் கடைசி ராசி; இது ஒரு பெண் ராசி. உபய ராசி. இரட்டை ராசி. இதன் உருவம் இரண்டு மீன்கள். இதன் சின்னம் L. இரண்டு மீன்கள் எதிர் எதிர் திசையில் பிணைத்திருப்பது போன்றது. உடல் உறுப்புகளில் கால்களைக் குறிக்கிறது. இங்கு சுக்கிரன் உச்சம் பெறுகிறார். புதன் நீச்சம் பெறுகிறார். இந்த ராசியானது சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோருக்கு நட்பு ராசி. இங்கு சூரியன் இருந்தால், ரத்த ஓட்டம் சம்பந்தமான நோய்கள் வரக்கூடும். ஏனெனில், சூரியன் 6-ம் வீட்டு அதிபதி அல்லவா? இங்கு சந்திரன் இருந்தால் சிலர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகக்கூடும். செவ்வாய், இருந்தால், கால்களில் எலும்பு முறிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். புதன் இருந்தால், நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும். குரு இருந்தால், கால்களில் வீக்கம், அடிவயிற்றில் கட்டிகள் போன்றவை ஏற்படக்கூடும். சனி முடக்குவாதத்தை ஏற்படுத்தக்கூடும்.

இன்று

டிசம்பர் 11 இன்று எதிர்ப்புகள் விலகி உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக உழைப்பின் மூலம்  லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3


 

இந்த வாரம்

டிசம்பர் 7 - டிசம்பர் 13 (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய) பொருளாதாரச் சூழல் சிறப்பாக இருக்கும். பேச்சில் கண்ணியம் கூடும். எடுத்த காரியங்களைச் சிறப்பாகச் செய்து புகழ் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரிகள் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தைப் பெருக்குவார்கள். விவசாயிகள் லாபங்களைக் காண்பார்கள். எண்ணெய் வித்துக்கள், கருப்பு நிற தானியங்களால் வருமானம் கூடும். 

அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். அதை முழுமையாக அனுபவிக்க விடாமல் சில இடையூறுகள் ஏற்படும். கலைத்துறையினரைத் தேடி, புதிய வாய்ப்புகள் வந்து சேரும். 
பெண்மணிகளுக்கு எதிலும் திருப்தி கிடைக்காத சூழல் நிலவினாலும் அதையெல்லாம் கடந்து விடுவீர்கள். மாணவமணிகள் படிப்பில் சிரம்மேற்கொண்டு உழைப்பதினால் எதிர்பாராத கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.  அனுகூலமான தினங்கள்: 12, 13.  சந்திராஷ்டமம்:  இல்லை.

இந்த மாதம்

டிசம்பர் மாத பலன்கள் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) குரு பகவானை ராசிநாதனாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் செலவுகள் கூடும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து  அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும். தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும். கலைத்துறையினர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்யுங்கள். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. உபதொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும்.  அரசியல்துறையினருக்கு மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். உங்கள் வசம் உள்ள ஆவணங்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.  மாணவர்கள் கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: குல தெய்வத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது குழப்பத்தை போக் கும். செல்வம் செல்வம் செல்வாக்கு உயரச் செய்யும். தடை, தாமதம் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிலும் நிதானமாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது. குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். 

உத்திரட்டாதி:
இந்த மாதம் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. மாணவர்கள் பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

ரேவதி:
இந்த மாதம் அதிகார தோரணையுடன் காணப்படுவீர்கள். நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும்.
 

இந்த ஆண்டு

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் - 2018 (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய) இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எதற்கும் மனம் தளராது வருவது வரட்டும் என்று காரியமாற்றுவீர்கள். இறுதியில் வெற்றியும் பெறுவீர்கள். நல்லவர்கள் தானாகவே úடிவந்து நட்பு கொள்வார்கள். குடும்ப ஒற்றுமை முன்னிலும் பலமாக அமையும். தொழில் வகையில் பிரச்னை என்று எதுவும் வராது. எதிர்ப்புகள் இருப்பினும் அவைகள் கூடிய மட்டும் பலகீனமுடையதாகவே இருக்கும். அசையாச் சொத்து வகையில் ஒரு பெரிய மாற்றம் உண்டாகும். அதன் வழியில் நல்ல பெயர் ஏற்படுவதுடன் மனநிறைவும் உண்டாகும். உங்கள் மனிதாபிமான சிந்தனையால் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்.  அரசு அதிகாரிகள் உங்களுக்குத் தேவையான  உதவிகள் செய்வார்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். ஓடி ஆடி கடமையுடன் உழைத்து வருமானத்தைப் பெருக்குவீர்கள். தடைபட்டிருந்த கட்டடப் பணிகளையும் தொடர்ந்து முழுமையாக முடித்து கிரகப்பிரவேசத்தையும் செய்வீர்கள். நீங்கள் சார்ந்துள்ள துறையில் புதிய யுக்திகளைக் கற்று நிபுணத்துவம் பெறுவீர்கள். கையிருப்புப் பொருள்களை பத்திரப்படுத்திக் கொண்டு விழிப்புடன் செலவழிக்கும் காலக்கட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தின் பகைமை மறைந்து நேசமுண்டாகும். கொடுக்கல் வாங்கல்களில் சரளமான போக்கு தென்படும். பொருளாதாரத்தில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். தற்காலிகமாக தொழில் செய்தவர்கள் நிரந்தரமாகத் தொழில் செய்வார்கள். சிலருக்கு அரசாங்கத்திலிருந்து கௌரவமும் அங்கீகாரமும் சன்மானமும் கிடைக்கும். குடும்பத்துடன் அயல்நாடுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள்.  உங்களின் தனித்தன்மை வெளிப்படும்.  தன்னம்பிக்கை கூடும். போட்டிகளைச் சுலபமாக எதிர்கொள்வீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். ஞானிகள் மகான்களின் தரிசனம் சிரமமின்றி கிடைக்கும். சிலர் புதிய வீடு வாங்கி அங்கே குடியேறுவார்கள். பெற்றோர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் என்று எதுவும் இராது. சென்ற இடமெல்லாம் புகழ் என்று கூறலாம். எடுத்த காரியத்தை முடிக்காமல் விடுவதில்லை என்கிற உறுதியுடன் நீங்கள் செயல்படுகிற காலகட்டமிது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடிவரும். வருமானம் சீரும்சிறப்புமாக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். உங்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்குமென்றாலும் உங்களின் பேச்சினால் சில அபவாதங்களையும் தேடிக்கொள்வீர்கள். சக ஊழியர்களின் சுமுகமான உறவுநிலை தொடருவதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத்திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நன்றாக நடப்பதால் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும். பழைய கடன்களை அடைத்துவிடும் ஆண்டாகும். வியாபாரத்தைப் பெருக்க புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள்.  விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தகுந்த நேரத்தில் அனைத்து வளமையை கூட்டிக்கொள்ள முற்படுங்கள். விளைச்சல் திருப்திகரமாக இருக்குமாகையால் விளைபொருள்களின் விற்பனை மிகவும் நன்றாக இருக்கும்.   அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவு கனிவான பார்வை உங்கள் மீது விழும். அரசு அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களை மறைமுகமாக எதிர்த்தவர்கள் அடங்கி விடுவார்கள். புதிய முயற்சிகளை தொண்டர்களின் ஆலோசனைகளைக் கேட்டப்பின்பே  செயல்படுத்தவும். கலைத்துறையினர் படிப்படியாக வளர்ச்சியைக் காண்பார்கள். சக கலைஞர்களால் நன்மைகள் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தினரிடம் ஆதரவு கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளுங்கள். மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். அறிவாற்றலும் பெருகும். ஞாபக சக்தியும் கூடும்.  பரிகாரம்: "நமசிவாய' என்று ஜபித்து சிவபெருமானை வழிபட்டு வரவும். ***** ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2018  (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய) இந்த 2018 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்களை உடனுக்குடனும் பொறுப்புடனும் நிதானத்துடனும் செய்து முடிப்பீர்கள்.  நீங்கள் செய்த சிறிய முதலீடுகளை விரிவுபடுத்துவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.  எவருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.  மனதில் எதிர்நீச்சல் போடும் தெம்பு உண்டாகும்.  உங்களின் வைராக்கியம் கூடும்.  உங்களை ஏமாற்ற நினைக்கும் நண்பர்களின் சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்வீர்கள். உடலில் பொலிவு கூடும். இக்கட்டான தருணங்களில் மனமுதிர்ச்சியுடனும் விவேகத்துடனும் நடந்து கொள்வீர்கள். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எவருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். மனதில் எதிர்நீச்சல் போடும் தெம்பு உண்டாகும். உங்கள் வைராக்கியம் கூடும். உங்கள் முயற்சிகளில் முழு ஆற்றலை வெளிப்படுத்துவீர்கள்.  புதிய முயற்சிகளை செய்வதன் மூலம் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். அனாவசியப் பயணங்களைத் தள்ளி வைக்கவும். ஜூலை மாதம் முதல்  இந்த ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் வருமானம் உயரத்தொடங்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். குழந்தைகளுக்கும் நன்மைகள் உண்டாகும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறக் காண்பீர்கள். தொழில் வகையில் இருந்த சங்கடங்கள் நீங்கி முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். பழைய கடன்களை திருப்பி அடைத்துவிட்டு புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள்.  உடலில் இருந்த நோய்கள் மறைந்து உடல் ஆரோக்கியம் சிறக்கத் தொடங்கும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். மகிழ்ச்சி தரும் பயணங்களைச் செய்வீர்கள். ஷேர் மார்கெட் போன்றவற்றிலிருந்து திடீர் பணவரவும் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். போட்டிகளைத் தனித்து நின்று சமாளிப்பீர்கள். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். நடையில் மிடுக்கு தோன்றும். உழைப்பிற்கு இரண்டு மடங்கு பலன் தரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். உங்கள் வேலைகளைத் தனித்தன்மையுடன் செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். வேலைகளுக்குரிய அங்கீகாரத்தை மேலதிகாரிகள் வழங்குவார்கள். சக ஊழியர்கள் சற்று தள்ளியே இருப்பார்கள். உங்களின் அமைதியான அணுகுமுறையினால் அரவணைத்துச் செல்லவும். மனதில் இருந்த ஒருவித பயம் விலகி தெளிவாக காரியமாற்றுவீர்கள். வியாபாரிகள் போட்டிகளையும் பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன்இருந்து அவைகளைச் சமாளிப்பார்கள்.  புதிய வாடிக்கையாளர்களையும் புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள். கொடுக்கல் வாங்கல்கள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் ஆண்டாக இது அமைகிறது. விவசாயிகள் கொள் முதல் லாபங்களைப் பெறுவார்கள். உங்கள் பேச்சுக்கு உங்களுக்குக்கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் மதிப்பு கொடுப்பார்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். உழைப்புக்கு ஏற்ற வருமானத்தைக் காண்பீர்கள்.  அரசியல்வாதிகள் தாங்கள் சார்ந்துள்ள கட்சித் தொண்டர்களுக்கும் மற்ற நெருங்கியவர்களுக்கும் மிகப்பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கௌரவம் உயரும். சமுதாயத்தில் புதிய அந்தஸ்து உண்டாகும். உங்கள் முயற்சிகள் வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்.  கலைத்துறையினரின் முயற்சிகள் வீண் போகாது. சக கலைஞர்களுக்கு தக்க நேரத்தில் உதவி செய்து உங்கள் நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். ரசிகர்கள் ஆதரவாக இருப்பார்கள். கூடுதல் பணவரவும் உண்டாகும்.  பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அமைதி நிறையும். வெளியூர் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். எவரிடமும் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். மாணவமணிகள் சிறுசிறு குழப்பங்களை சந்திப்பீர்கள். படிப்பில் முழு அக்கறையை காட்டவும்.  பரிகாரம்: ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...