புதன்கிழமை 14 நவம்பர் 2018

தனுசு

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** தனுசு (SAGITTARIUS) இது ஒரு நெருப்பு ராசி. உபய ராசி மற்றும் ஆண் ராசி. இதன் அதிபதி குரு. குருவானவர் தெய்வ அம்சம் உள்ளவராகக் கருதப்படுகிறார். “குரு பார்க்கக் கோடி புண்ணியம்” என்பார்கள். குரு எங்கிருந்தாலும், அல்லது எங்கு பார்த்தாலும் நன்மை விளையும் என்று சொல்வார்கள். இந்த ராசி மிகுந்த முன்னேற்றத்தை தருகின்ற ராசி. மனித சுதந்திரத்தை எதிர்பார்க்கின்ற ராசி. நல்ல சிந்தனைகளைக் கொடுக்கின்ற ராசி. பாதி மனிதன் வில், அம்புடன் பாதி குதிரை மேல் இருப்பது போன்ற உருவத்தைக் கொண்டுள்ள ராசி. இதனுடைய சின்னம் அம்பு. இதன் குறியீடு I. இடுப்பு, தொடைகள் மற்றும் கணையத்தைக் குறிப்பது இந்த ராசி. இது ஒரு இரட்டை ராசி. சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் இங்கிருந்தால், நண்பன் வீட்டில் இருப்பதாகக் கருதப்படுகிறது. சனி, சுக்கிரன், புதன் ஆகியவை இங்கிருந்தால், எதிரியின் வீட்டில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இன்று

நவம்பர் 14 இன்று சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். உடல்நலனைப் பொறுத்தமட்டில் உடற்சோர்வு மன சோர்வு வரலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6
 

இந்த வாரம்

நவம்பர் 9 - நவம்பர் 15 (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய) பணவரவு சீராக இருக்கும். மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். சாமர்த்தியமாகப் பேசி போட்டிகளை சமாளித்து சாதமாக்கிக் கொள்வீர்கள். குழந்தைகள் வளர்ச்சி அடைவார்கள். அனைவருடனும் அன்புடனும் அணுசரனையுடன் நடந்து கொள்ளவும்.  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கெடுபிடிகள் சற்று அதிகமாகலாம். வேலைகளில் கவனமாக இருக்கவும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய கடைகளைத் திறப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.  விவசாயிகள் புதிய சாதனைகளை வாங்குவீர்கள். விவசாயப்பணிகள் வெற்றிகரமாக முடியும். அரசியல்வாதிகளின் பொதுச் சேவையை அனைவரும் பாராட்டுவார்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.  கலைத்துறையினர் அனைத்து வேலைகளையும் நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்மணிகள் மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  பரிகாரம்: பார்வதி தேவியை வெள்ளிக்கிழமையில் வழிபட்டு வரவும்.  அனுகூலமான தினங்கள்: 11, 16. 

சந்திராஷ்டமம்:  இல்லை.
 

இந்த மாதம்

நவம்பர் மாத பலன்கள் (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்) இந்த மாதம் ராசிநாதன் குருவின் சஞ்சாரத்தால் பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். தொழில் வியாபாரத்தில் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும்.  வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பாதி சனிபகவான் ராசியில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் இதமான சூழ்நிலை  காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது.  பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது. பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.  கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். கலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும்.  அரசியல்துறையினருக்கு எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும். காரிய தடைதாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும்.  மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்ஒது வேற்றுமை நீங்கும்.

மூலம்:
இந்த மாதம் முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும். தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். 

பூராடம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். 

உத்திராடம்:
இந்த மாதம் உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில்  சாதகமான பலன் கிடைக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

பரிகாரம்: முருகனை வணங்கிவர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;  தேய்பிறை: செவ்வாய், வியாழன்;  சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28, 29 அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12, 13

இந்த ஆண்டு

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் - 2018 (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய) இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் புகழ், கீர்த்தி, கௌரவம், செல்வாக்கு அனைத்தும் அதிகரிக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் வந்து சேரும். குடும்பத்தில் பூர்வீகச் சொத்துகளில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். பொருளாதாரம் சுபிட்சமாக இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். நெடுநாளாக தள்ளிப்போயிருந்த புத்திர பாக்கியமும் உண்டாகும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடிவடையும்.  உடலில் இருந்த உபாதைகள் விலகிவிடும். வெளியூரிலிருந்து வர வேண்டிய கடன்களும் வரத்தொடங்கும். சிலருக்கு தம் வசமுள்ள விலை உயர்ந்த பொருள்களை விற்று அதன் மூலம் புதிய மனை, வீடு வாங்க வாய்ப்புண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல ஆதாயமும் அனுகூலமும் வந்து சேரும். குடும்பத்தை விட்டுப்பிரிந்திருந்தவர்கள் மறுபடியும் வந்து இணைவார்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பொன்று உங்கள் வாசல் கதவைத் தட்டும் காலகட்டமிது. கருத்து வேறுபாடுள்ள நண்பர்களிடம் தாமரை இலைத்தண்ணீர் போல் பழகவேண்டும். தன்னிச்சையாக சுயமாகச் சிந்தித்து சரியான முடிவை எடுப்பீர்கள்.  இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செயற்கரிய காரியங்கள் பலவற்றைச் செய்து சமுதாயத்தில் பெரும் புகழ் பெற்றிடுவீர்கள். தரமான உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடிவரும். குடும்ப நிர்வாகமும் மகிழ்ச்சியாகவே செல்லும். குழந்தைகளுக்கு தகுதியான இடத்திலிருந்து வரன் அல்லது வது அமைந்து மகிழ்ச்சியாகத் திருமணத்தை நடத்துவீர்கள்.  கடினமாக உழைத்துப் பொருளீட்டுவீர்கள். மனக்குழப்பங்கள் இல்லாமல் சீராகப் பணியாற்றுவீர்கள். வித்தியாசமான பாதையில் காலடி எடுத்து வைப்பீர்கள். ஏற்றத்தாழ்வுடன் வாழ்க்கை நடத்தி வந்தவர்கள் இப்பொழுது முதல் தாழ்வின்றி படிப்படியாக உயர்வடைவார்கள். மனதை ஆன்மிகத்தில் செலுத்துவீர்கள். குடும்பத்துடன் புனித யாத்திரை சென்று வருவீர்கள். வெளிநாடு செல்ல முயற்சி செய்தவர்கள் அதற்குரிய விசா கிடைக்கப் பெறுவார்கள். சிலர் இல்லத்திற்குத் தேவையான விலையுயர்ந்த பொருள்களை வாங்குவார்கள். முயற்சிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பாராத பதவி  உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவும் நட்பும் கிடைக்கப் பெறுவதால் உங்கள் அந்தஸ்து அலுவலகத்தில் உயர்ந்து காணப்படும். சில முக்கிய பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பீர்கள். வேலைகளை முன்கூட்டியே யோசித்து செய்வது நலம் பயக்கும்.  வியாபாரிகள் நல்லவர்களுடன் கூட்டுச் சேர்வார்கள். வியாபாரத்தில் நஷ்டங்கள் வராது. வாராக்கடன்கள் திரும்ப கைவந்து சேரும். கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்து அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவும். புதிய சந்தைகளைத் தேடிப்பிடித்து அங்கும் வியாபாரத்தைப் பெருக்கி லாபத்தை அடைவீர்கள். உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். கூடுதல் வருமானத்தைப் பெற காய்கறிகள், பழங்கள், கிழங்குகளைப் பயிர் செய்து பயன் பெறவும்.  அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஆதரவு நன்றாக இருந்தாலும் புதிய பொறுப்புகளைப் பெற முடியாது. உங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் உங்களுக்குச் சாதகமாகவே முடிவடையும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். 

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சேரும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் உங்களை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும். வருமானம் சிறப்பாக இருக்கும். பெண்மணிகள் மனநிம்மதியைக் காண்பீர்கள். தர்மகாரியங்கள், தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். புதிய சொத்துகள் வாங்க ஆரம்பகட்ட வேலைகளைத் துவக்குவீர்கள். 
மாணவமணிகள் படிப்பில் மேலும் ஆர்வம் செலுத்தினால்தான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறமுடியும். 

பரிகாரம்: சனீஸ்வரர் அஷ்டகம் பாராயணம் செய்து சனிபகவானை வழிபட்டு வரவும். ***** ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் - 2018 (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)  இந்த 2018 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் ஒன்றன்பின் ஒன்றாக செயல்கள் பூர்த்தியடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். நம்பிக்கையுடன் உங்கள் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிறிது ஆடம்பரச் செலவுகளும் செய்வீர்கள். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.  குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகள் பேரக்குழந்தைகள் பிறக்கும் ஆண்டாகவும் இது அமைகிறது. புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடலாம்.   உங்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வருவீர்கள். பழைய கடன்களும் வசூலாகும். எதிரிகளின் பலம் குறைந்து அவர்களை விரட்டும் ஆற்றலையும் பெறுவீர்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம்உண்டாகும்.  தருமக்காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மனதில் இருந்த அழுத்தங்கள் மறைந்து  தெளிவாகச் சிந்திப்பீர்கள். எவருக்கும் முன்ஜாமீன் போடுவதோ வாக்குக்கொடுப்பதோ கூடாது. குறிப்பாக மற்றவர்களுக்கு உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பது அறவே கூடாது.  சாதுர்யமாக பேசி எவரையும் பகைத்துக் கொள்ளாமல் இருந்தால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.  ஜூலை மாதம் முதல்  இந்த ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் அனைத்து வேலைகளிலும் கடுமையான உழைப்புக்குப் பிறகே வெற்றி கிடைக்கும்.  உங்கள் வேலைகளை மற்றவர்களை நம்பிக் கொடுக்க வேண்டாம். வெகுதூரத்திலிருந்து மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணம் கைகூடும். சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களைப் பற்றி அவதூராக பேசியவர்களைக் கண்டறிந்து உங்களை தெளிவுபடுத்தி விலகிவிடும் காலகட்டமாக இது அமைகிறது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும் . சக ஊழியர்கள் ஆதரவும் நட்பும் கிடைக்கப் பெறுவதால் உங்கள் அந்தஸ்து அலுவலகத்தில் உயர்ந்து காணப்படும். சில முக்கிய பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பீர்கள். உங்கள் வேலைகளை முன்கூட்டியே யோசித்துச் செய்வது நலம் பயக்கும். வியாபாரிகள் பணப்புழக்கம் நன்றாக இருக்கக்  காண்பார்கள். அரசு வழியில் அனுகூலங்களைக் காண்பார்கள். உங்கள் வசீகரத் திட்டங்களில் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். கூட்டாளிகளிடம் பகை, மறைமுக விரோதம்  ஏற்படாமல்  பார்த்துக் கொள்ளவும். புதிய முயற்சிகளில் சிறியதாக முதலீடு செய்யலாம். விவசாயிகளுக்கு லாபங்கள் அதிகரிக்கும். நீர்ப்பாசன வசதிகளுக்காகச் சிறிது செலவு செய்ய நேரிடும். கொள்முதல் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவும். அரசு மானியங்கள் வந்தடையும்.   அரசியல்வாதிகள் தங்கள் முயற்சிகளில் வெற்றிகளைக் காண்பீர்கள். சமுதாயத்தில் பெயர் புகழ் கூடும். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கட்சி மேலிடம் உங்கள் செயல்களை ஊன்று கவனிக்கும். மறைமுக நேர்முக எதிர்ப்புகளைப் பற்றிக் கவலைப்பட  மாட்டீர்கள். தொண்டர்கள் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவர்.  கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். முயற்சிகள் அனைத்தும் உங்களை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும். புதிய நட்புகள் புதிய வாய்ப்புகளையும் தரும். சக கலைஞர்களும் ரசிகர்களும் ஆதரவு தருவார்கள். நீங்கள் கடினமாக உழைத்து முழு திறமையையும் வெளிக்கொண்டு வருவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும் ஆண்டாக இது அமைகிறது.  பெண்மணிகள் கணவன் மனைவி வகையில் விரிசல் ஏற்படாமல் கவனமாக இருக்கவும். உடன் பிறந்தவர்களால் பிரச்னைகள் உண்டாகலாம். பிள்ளைகளால் கவலைகள் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடத்தும்போது உறவினர்களுக்கு உரிய மரியாதையை கொடுத்து கௌரவிக்கவும். மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் படிப்பார்கள். வருங்காலத் திட்டங்களுக்காக அடித்தளம் போடுவீர்கள். விளையாட்டுகளிலும் சிறு வெற்றிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை படிப்படியாக வளரும். பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...