செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

விருச்சிகம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** விருச்சிகம் (SCORPIO) இது ஒரு பெண் ராசி. இதன் அதிபதி செவ்வாய். இது ஒரு நீர் ராசி; ஸ்திர ராசியும்கூட. தேள்தான் இந்த ராசியின் உருவம். இதனுடைய சின்னம் H. இது பிறப்பு உறுப்புகளைக் குறிக்கிறது. இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதியாவதால் மிக்க சுறுசுறுப்பு உடையவராகவும், எதையும் நேருக்கு நேர் பேசும் குணம் கொண்டவராகவும் இருப்பர். எந்தத் தடங்கல் வந்தபோதும், எடுத்த காரியத்தை முடிக்கும் குணம் கொண்டவராக இருப்பர். இந்த ராசிக்கு 6-ம் ராசி மேஷம். அதனால், மேஷத்தில் உள்ள கிரகங்கள் உடல் நலத்தைக் கொடுக்கக்கூடும். செவ்வாயே 1-ம் வீட்டுக்கும் 6-ம் வீட்டுக்கும் அதிபதியாவதால், செவ்வாயே உடல் நலத்தைப் பாதிக்கக்கூடும்.

இன்று

செப்டம்பர் 25

இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். முழுகவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுடன் முன்னேற்றம்
காண்பீர்கள். மன அமைதி, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
 

இந்த வாரம்

செப்டம்பர் 21 - செப்டம்பர் 27 (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய) திட்டமிட்ட வேலைகளில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு நீங்கள் எதிர்பார்த்தபடியே அமையும். எல்லா செயல்களையும் உங்களை சார்ந்தவர்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்வீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் தடைபட்டிருந்த காரியங்களில் வெற்றிவகை சூடுவீர்கள். பதவி உயர்வுக்கான வழிகள் பிறக்கும். வியாபாரிகளுக்கு  கொடுக்கல் வாங்கல் சுமுகமாகவே முடியும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு தானிய விற்பனையும் பால் வியாபாரமும் நன்றாகவே நடக்கும். 

அரசியல்வாதிகள் முக்கியப் பொறுப்புகளையும் பதவிகளையும் பெறுவீர்கள். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு அங்கீகாரம் கிடைக்கும். சக கலைஞர்கள் உதவுவார்கள். 
பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். சுற்றுலா சென்று வருவீர்கள். மாணவமணிகள் பாடங்களை மனதில் ஏற்றிக் கொண்டு கவனமாக படித்தால்தான் நினைத்த மதிப்பெண்களைப் பெற முடியும்.

பரிகாரம்: அம்பாளை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும்.  அனுகூலமான தினங்கள்: 23, 26.  சந்திராஷ்டமம்: இல்லை.

இந்த மாதம்

செப்டம்பர் மாத பலன்கள் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் தொழில் அதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் விருச்சிக ராசி அன்பர்களே,
குடும்ப உறுப்பினர்கள் தாயாரின் உடல்நிலையில் அதிக அக்கறை செலுத்துங்கள். எத்தருணத்திலும் யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடவோ பிறருக்கு உதவுவதோ வேண்டாம். நெருங்கிய உறவினர்களுடன் சுற்றுலா சென்று வருவீர்கள். நேரம் கிடைக்கும் பொழுது ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள். உடல் அசதியால் காய்ச்சல் போன்ற உடல்நோய் வந்து போகலாம். அது உடனே சரியாகும் கவலை வேண்டாம்.

தொழில் விவகாரங்களில் விற்பனையும், லாபமும் திருப்திகரமாக இருக்கும். வியாபார ரீதியான பயணங்கள் இப்போது ஏற்படக்கூடும். கொடுக்கல் - வாங்கலில் இருந்து வந்த பிர்ச்சினைகள் தீரும். மனநிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் சிலர் முக்கியப் பதவியில் அமர்வதற்கு சிறந்த வாய்ப்புள்ளது. உங்கள் புத்தி சாதுர்யத்திற்கு கிடைத்த பரிசாக இருக்கும். மேலும் சிலருக்கு சிறப்பு சலுகைகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். எதிர்கட்சியினரும்  உங்களுக்கு ஆதரவு தருவார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவைப்   பெறுவீர்கள். இதனால் புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொண்டர்களின்  எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். உட்கட்சிப் பூசலில்   சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்வீர்கள். 

கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை  முடித்துக் கொடுத்த பின்னரே புதிய ஒப்பந்தங்களில்   கையெழுத்திடவும். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவக் கூடிய நிலையில் இருப்பதால் அவர்களை  முழுமையாகப்   பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களின் படைப்புகளை புதிய வடிவத்தில் தருவீர்கள். புதிய கலைப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். 
பெண்கள் சிலர் ஆன்மீக சம்பந்தமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளியூர் சென்று வரவும் வாய்ப்பு உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.
மாணவர்கள் வெளியூர் சென்று தொழிற்சாலை பயிற்சி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் லாபம் கூடும். எதிரிகளால் இருந்து வந்த தொல்லை குறையும். அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். 

அனுஷம்:
இந்த மாதம் பெண்கள் குடும்பத்தில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய கால கட்டம். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிணக்கு நிலை மறைந்து உறவு பிரகாசிக்கும். 

கேட்டை:
இந்த மாதம் பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். யாருடனும் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.

சந்திராஷ்டம தினங்கள்: 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வெள்ளி
பரிகாரம்: அம்பாள் ஆலயத்திற்குச் சென்று நெய் விளக்கேற்றி வணங்க தைரியம் அதிகரிக்கும்.
 

இந்த ஆண்டு

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2018  (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய) இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் அனைத்துச் செயல்களும் அனுகூலமாகவே முடியும். வருவாயும் வழக்கத்திற்கு மாறாகவே கூடுதலாக இருக்கும். தொழில் வழிச் சிந்தனையாளர்களை நன்கு செயல்படச் செய்வீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உங்களுக்கென்று குடும்பத்திலும் வெளியிலும் ஒரு தனி மதிப்பு உண்டாகும். உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தக்க ஆலோசனைகளைக் கூறுவீர்கள்.  பொருளாதாரத்தில் வளர்ச்சி பெருகிக் கொண்டே போகும். சொல்லும் சொல் வாக்கு பலிதமுடையதாக இருக்கும். வசிக்கும் வீட்டை நவீனமயமாக்குவீர்கள். ஆன்மிகம் தத்துவம் போன்றவற்றில் மனதைச் செலுத்துவீர்கள். இடம் விட்டு இடம் மாறி செய்தொழிலைச் செய்ய வாய்ப்புகள் உண்டாகும். அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த அனுகூல சலுகைகள் தேடிவரும். குடும்ப விஷயங்களில் மூன்றாவது மனிதரின் தலையீட்டைத் தவிர்க்கவும். அனாவசியமாக எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுக்க வேண்டாம். ஆகார விஷயங்களில் கவனமாக இருக்கவும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் இந்த காலகட்டத்தில் சாதகமாக இராது. இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் இதுவரை நினைத்ததற்கு நேர்மாறாக நடந்து வந்த காரியங்கள் மனதிற்கு பிடித்தபடி முடிவடையும். மனதில் புதிய நம்பிக்கை உதயமாகும். குடும்பத்திலிருந்து வந்த குழப்பங்கள் யாவும் விலகி விடும். உற்றார் உறவினர்கள் வகையில் ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். விலையுயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். பொருளாதாரம் சீராகவே தொடரும். புதிய கடன்கள் எதுவும் வாங்க நேரிடாது. மனதில் இருந்த சஞ்சலங்களும் நீங்கி தெளிவு பிறக்கும். உடன்பிறந்தோருக்கு  உபகாரங்கள் செய்தாலும் திருப்திபடுத்த முடியாது.  தீவிர முயற்சியின் பேரில் கடன்வாங்கி புதிய வீடு கட்டவும் சந்தர்ப்பங்கள் கூடிவரும். வெளியிடத்திலிருந்து வர வேண்டிய பணநிலுவைகளும் சிரமத்தின்பேரில் வந்து சேரும். சமுதாயத்தில் உயர்தோரின் நட்பு கிடைக்கும். இதனால் சமுதாயத்தில் பெயர் புகழ் உயரும். சிலர் புதிய தொழிலைத் தொடங்குவார்கள். எதிரிகளின் சூழ்ச்சிக்கு இடம் கொடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடாமல் இருத்தல் நல்லது.  உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் வகையில் நடந்து கொள்வீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகள் சௌகரியங்களை எதிர்பார்க்காமல் கடினமாக உழைப்பார்கள். போட்டியாளர்களின் முட்டுக்கட்டைகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும். பண விஷயங்களை உங்கள் நேர்ப்பார்வையில் வைத்துக்கொண்டால் நலமாக இருக்கும். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். தானிய விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வருமானத்தைப் பங்குபோட நினைக்கும் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும். பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பி அடைப்பீர்கள்.  அரசியல்வாதிகள் கட்சியில் ஆதரவைப் பெறுவார்கள். தொண்டர்கள் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். அதனால் கோபப் படாமல் விவேகத்துடன் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். சமுதாயத்திற்கு பயன்படும் உண்மையான தொண்டுகளில் ஈடுபடுவீர்கள்.  கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களினால் மனநிம்மதி அடைவார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பெண்மணிகள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது யோசித்து எடுக்கவும். மாணவமணிகள் முதலிடத்திற்கு வருவார்கள். பெற்றோர்களுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விரும்பிய துறையில் முன்னேறலாம். நண்பர்களால் ஏற்படும் இடையூறுகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள்.  பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமி அஷ்டகம் பாராயணம் செய்யவும். ***** ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2018 (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய) இந்த 2018 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில் சற்று தொய்வு நிலை உண்டானாலும் இதனால் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. செய்தொழிலிலும் சிறிது சுணக்கங்கள் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்த நிறைய பயணங்களைமேற்கொள்வீர்கள்.  எடுத்த காரியங்கள் அலைச்சல் திரிச்சலுக்குப்பிறகே முடிவடையும். தாய்வழியில் சில சோதனைகளும் மருத்துவ செலவு செய்யும் நிலைமையும் உண்டாகும்.   சோம்பலுக்கு இடம் தராமல் கடின உழைப்பை மேற்கொள்ளவும்.  மேலும் எந்தச் செயலையும் பிறகு செய்யலாம் என்று தள்ளிப்போடாமல் உடனுக்குடன் முடிக்கவும். சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக்கொள்வீர்கள். அதனால் நாவடக்கம் அவசியம். உங்கள் முன்னேற்றமான எண்ணங்கள் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். புதிய பொறுப்புகளை திட்டமிட்டு நடத்துவீர்கள். மனதில் காரணமில்லாமல் இருந்த வருத்தங்களும் குழப்பங்களும் நல்ல முறையில் தீர்ந்துவிடும்.  ஜூலை மாதம் முதல்  இந்த ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்களை படபடவென்று முடித்து விடுவீர்கள். உயர்வான பதவிகளும் புகழ் செல்வாக்கு ஆகிய அனைத்தும் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை ஆகியவை உயரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடிவடையும். உங்களின் எண்ணங்களும் செயல்களும் உங்களை உயர்த்தும். உழைப்பு கூடினாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். உடன்பிறந்தோர் தக்க நேரத்தில் உதவி செய்வார்கள். பயணங்களால் சிலருக்கு திடீர் குருட்டு அதிர்ஷ்டம் உண்டாகும். மேலும் அரசாங்க உதவிகள் கேட்காமலேயே கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது. உத்தியோகஸ்தர்கள் முன்னேற்ற பாதையில் பயணிப்பார்கள். அலைச்சல் திரிச்சல் இல்லாமல் உங்கள் வேலைகளைச் சரியாகச் செய்து முடித்துவிடுவீர்கள். சக ஊழியர்களுடன் சுமுக நிலையை கடைபிடிப்பது அவசியம். வீண் பேச்சுக்களால் குழப்பங்கள் ஏற்படலாம். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படும். பதவி உயர்வு கிடைத்து சாதனை செய்ய விழைவீர்கள். மேலதிகாரிகளிடம் வெளிப்படையாகப் பழகவேண்டாம். வியாபாரிகள் சுக சௌகர்யங்களைப் பாராமல் கடினமாக உழைப்பார்கள். போட்டியாளர்களின் முட்டுக்கட்டைகளையும் எதிர்கொள்ள வேண்டிவரும். கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே முன்னின்று செய்தால் வியாபாரத்தில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்கலாம்.  விவசாயிகள் குறுகிய காலப் பயிர்களையும் ஊடுபயிர்களையும் பயிரிட்டு நலம் பெறுங்கள். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல பலன்களை அடைவார்கள். விவசாய உபகரணங்களை வாங்கி பயிர் விளைச்சலை இரட்டிப்பாக்குவீர்கள். புதிய குத்தகைகளை யோசித்து வாங்கவும். பொறுமையுடன் கடன்களைப் பெற்று எதிர்காலத்திற்கு வித்திடவும். குடும்பத்தில் ஒன்றிரண்டு சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல்வாதிகள் கட்சியின் ஆதரவைப் பெறுவார்கள். தொண்டர்கள் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். அதனால் கோபப்படாமல் விவேகத்துடன் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். சமுதாயத்திற்குப் பயன்படும் உண்மையான தொண்டுகளில் ஈடுபடுவீர்கள். எதிரிகளின் ரகசியங்களை அம்பலப்படுத்துவீர்கள்.   கலைத்துறையினர் தேவையான வருமானத்தைக் காண்பார்கள். கலை நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் சென்று வருவீர்கள்.  ரசிகர்களின் ரசனைக்கு மதிப்பு கொடுப்பீர்கள். பெண்மணிகள் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது சிறிது யோசித்து எடுக்கவும். ஆடம்பரச் செலவுகளைச் செய்து கைப்பொருள்களைக் கரைக்க வேண்டாம். பேசும்போது கடும் சொற்களை உதிர்க்க வேண்டாம்.  மாணவமணிகளுக்கு படிப்பில் சிரத்தை குறைந்து காணப்படும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் கூடும். ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் ஆலோசனைகள் அறிவுரைகள் கேட்டு நடக்கவும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...