வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

ரிஷபம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** ரிஷபம் (TAURUS) இது ஒரு பெண் ராசி. பூமி ராசியின் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இது ஒரு ஸ்திர ராசியும்கூட. இதற்கு அதிபதி சுக்கிரன். இது மாடு உருவம் கொண்ட ராசி. இதை B என்ற குறியீட்டால் குறிப்பார்கள். ஒரு மாடு இரண்டு கொம்களுடன் கூடிய உருவமாக இருக்கும். இது ஒரு நாலு கால் ராசி. சந்திரன் இங்குதான் உச்சம் பெறுகிறார். பொதுவாக, சனியானவர் கெடுதல் செய்யும் கிரகமாகவே கருதப்படுகிறார். ஆனால், ரிஷபத்துக்கு அவர் ஒன்பது, பத்தாம் வீடுகளுக்கு அதிபதியாவதால், யோககாரகனாகக் கருதப்படுகிறார். இந்த ராசி, விவசாயத்தைக் குறிக்கும் ராசி. இதன் அதிபதியான சுக்கிரன், கலைகள், சினிமா துறை, கால்நடைகள் ஆகியவற்றுக்கு அதிபதி. உடல் உறுப்புகளில் இந்த ராசி கழுத்து, தொண்டை ஆகியவற்றைக் குறிக்கும்.​

இன்று

செப்டம்பர் 20

இன்று துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை. திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான வேலைகளையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

இந்த வாரம்

செப்டம்பர் 14 - செப்டம்பர் 20 (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) பொருளாதாரத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். உடலில் அசதி தோன்றும். தன்னம்பிக்கை குறையும். உடன்பிறந்தோர் வழியில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் படிப்படியாக நல்லநிகழ்ச்சிகள் நடைபெறும். ஸ்பெகுலேஷன் போன்ற துறைகளிலிருந்து தள்ளி இருக்கவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின்ஆதரவு சுமாராகவே இருக்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். ஆனாலும்
கவனத்துடன் இருக்கவும். விவசாயிகள் விளைச்சல் அதிகமாகி லாபம் பெறுவர். அதேநேரம் பழைய கடன்களை அடைத்தபிறகே புதிய குத்தகைகளை எடுக்கவும். 

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டாம்.  மேலிடத்தில் நல்ல பெயர் எடுக்கவும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகளின் எண்ணிக்கை குறையும். பணவரவு
சற்று குறையும். பெண்மணிகளுக்கு பெண்கள் மூலமாகவே உதவிகள் கிடைக்கும். தோழிகளிடம் மிகுந்த அன்பு செலுத்துவீர்கள். மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்த மதிப்பெண்கள் பெறுவார்கள்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.  அனுகூலமான தினங்கள்: 14,15.  சந்திராஷ்டமம்:17,18,19.

இந்த மாதம்

செப்டம்பர் மாத பலன்கள் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  சுகஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் சுகஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் சுகாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தில் திருமண முயற்சிகளை சற்று தள்ளிபோட வேண்டி வரலாம். நல்ல யோகமான செய்திகளை கேட்க வேண்டி வரும். பிள்ளைகள் நலனுக்காக செலவு செய்ய வேண்டி வரும். அவர்கள் மனதில் உள்ளவற்றை  மனம் விட்டு பேச விடுங்கள். வெகுதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும். குடும்பத்திற்கு  தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தொழிலில் நயமாக பேசுவதன் மூலம் விற்பனையை அதிகரிக்க முடியும். ஓய்வெடுக்கும் தருணங்களில் ஓய்வெடுக்கலாம். ஏனெனில் உடம்பில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. புதிய நபர்களில் நட்பு கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை இப்போது எடுப்பது நல்லது. உங்களுக்கு சாதகமாக உங்கள் மேலதிகாரி நடந்து கொள்வார். வழக்கத்தை விட சற்று அதிகமாக உழைத்து பாராட்டை பெறுவீகள். தீடீரென்று எதிர்பாராத செலவு வரும். அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான மாதமாக இருந்தாலும் பற்பல சோதனைகளை சந்திக்க வேண்டி வரும். கலைத்துறையினருக்கு பல்வேறு வகைகளில் அனுசரனையாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறிகள் நீங்கும். வாய்ப்புகள்   குவிந்த வண்ணம் இருக்கும். வெளிநாடுகள் சென்று வருவீர்கள்.  கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.  பெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனித்து வருபவர்கள் கடினமாக உழைக்க வேண்டி வரும். எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காமல் போகலாம். மாணவர்களுக்கு கல்வியில் பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் வாகனம் ஓட்டிச் செல்வதை தவிர்த்திடுங்கள். சிறு விபத்துகள் நேரலாம்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின் தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். 

ரோகிணி:
இந்த மாதம்  எடுத்த காரியம் அனுகூலத்தை கொடுக்கும். வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது மிகச் சிறப்பானதாய் அமையும். 

மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
இந்த மாதம் சிலருக்கு நல்ல பணப்புழக்கம் ஏற்படலாம். உறவினர்கள் அன்னியோன்யமாக இருப்பார்கள். குடும்பத்தில் கணவன், மனைவியருக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். 

சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - சனி
பரிகாரம்: முருகன் கோவிலுக்குச் சென்று அரளி பூ மாலை சாற்றி வணங்க நன்மை நடக்கும்.

இந்த ஆண்டு

    தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2018 (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசிரீஷம் 2-ம் பாதம் முடிய) இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்களும் எதிர்பாராத முன்னேற்றங்களும் உண்டாகும். மேலும் செய்தொழிலில் புதகிய அனுபவங்களைப் பெறுவீர்கள். வெளியில் சொல்ல முடியாத உடல் உபாதைகளிலிருந்து மீண்டு வந்து விடுவீர்கள். அசையா சொத்துக்களுக்கு ஏற்பட்ட வழக்குகள் சாதகமான தீர்ப்பை நோக்கிச் செல்லும். நெடுநாளாக விலகியிருந்த உற்றார் உறவினர்கள் மறுபடியும் குடும்பத்ததுடன் இணைவார்கள்.  உங்களின் புதிய செயல்களுக்கு புதிய நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகங்கள் உண்டாகும். மேலும் சமூகத்தில் பிரபலமானவர்களும் நண்பர்களாவார்கள். வீடு மாற்றம் செய்ய நினைத்தவர்கள் இந்த காலகட்டத்தில் அதை செய்யலாம். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தாருடன் புதிய ஆலயங்களுக்கும் சென்று வருவீர்கள். பணவரவு சரளமாக இருப்பதால் தர்மகாரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். பொதுச் சேவையில் முன்னேற்றங்கûள் உண்டாகலாம். அலைந்து திரிந்து செய்த காரியங்கள் சுலபமாக முடிவடையும். மற்றபடி அதிகமாக முயற்சி செய்யமலேயே சுகங்கள் அனுபவிக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் மிகையாகாது. இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்கள் அனைத்தும் ராஜபாட்டையில் செல்ல விசா எதிர்பார்க்கின்றவர்களுக்கு விசா கிடைத்து வெளிநாடு பயணிப்பார்கள். பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்தோருகளுக்கிடையே ஏற்பட்ட சிற்சில பிரச்னைகள் தானாகவே தீந்துவிடும். அதேநேரம் அனைவரிடமும் நிதானமாக பேசிப்பழகுவீர்கள். இதனால் உங்கள் பெயர் புகழ் அந்தஸ்து சமுதாயத்தில் கூடத் தொடங்கும். உங்கள் செயல்களில் விழிப்புடன் இருந்து வருமானத்தைப் பெருக்குவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் மேம்பட யோகா செய்யவும். நெடு நாளாக ஒதுக்கி வைத்திருந்த காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள், பொருளாதாரத்தில் பற்றாக்குறை என்று எதுவும் ஏற்படாமல் இருக்கும் காலகட்டமாக இது அமையும் என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலை குறையும். ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளும் படியாக இருக்கும். தயக்கமின்றி உங்கள் எண்ணங்களை மேலதிகாரிகளிடம் எடுத்துக் கூறுவீர்கள். வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். அனைத்துச் செயல்களும் தடைகளுக்குப்பிறகே வெற்றியைக் கொடுக்கும்.  வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் பெரிய கடன்கள் சேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும். வியாபாரிகளுக்கு கூடுதல் விளைச்சலைக் காண்பார்கள். தரமிக்க விதைகளை வாங்கி மகசூலை இருமடங்காக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். உபரி வருமானங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சிமேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். மக்களுக்கு நலம் செய்யும் உங்கள் முயற்சிகளை எதிர்க்கட்சியினரும் பாராட்டுவார்கள். கலைத்துறையினருக்கு செய்யும் விடாமுயற்சிகள் பெரும் வெற்றியைத் தரும். அதிக முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்சதங்கள் கிடைக்கும். ஆனாலும் உங்களை குறைசொல்லும் சக கலைஞர்களைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். பணியில் கவனம் செலுத்தவும்.  பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் பாசமும் அதிகரிக்கும். சுற்றுலா சென்று மன மகிழ்ச்சியைக் கூட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்து காணப்படும். பிள்ளைகளாலும் சந்தோஷம் நிறையும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயர்ந்து காணப்படும். மாணவமணிகள் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகம் பாடுபட்டு படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். எனினும் பெற்றோர்கள் தேவையான ஆதரவைத் தருவார்கள். உற்சாகத்துடன் விளையாட்டில் ஈடுபடுவீர்கள்.  பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு சிறப்புகளைக் கூட்டிக் கொள்ளுங்கள். ***** ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் - 2018 (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) இந்த 2018 -ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சிக்கனமாக  இருந்து சேமிப்பை கூட்டுவீர்கள். பெரிய செலவுகள் என்று எதுவும் வந்து கையை கடிக்காது. உடல் நலம் சீராக இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிணி லேசாக தோன்றி மறைந்துவிடும். சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாகும். செய்தொழிலில் நல்ல சீர்திருத்தங்களை கொண்டு வருவீர்கள்.  அரசாங்க சட்டதிட்டங்களுக்கு மதிப்பு கொடுத்து நடப்பீர்கள். நிறைய மனிதர்களச் சந்தித்து பிரபலமாவீர்கள். உங்களை நாடி வந்தவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். குழந்தைகளின் முன்னேற்றத்தில் சிறிது தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சில நேரங்களில் குழப்பமான மனநிலை ஏற்படும். வழக்குகளில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை. வெளியூர், வெளிநாட்டிலிருந்து இனிமையான தகவல்கள் உங்களைத் தேடிவரும். துணிந்து புதிய திட்டங்களில் ஈடுபட்டு பிரகாசமான எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் பிரச்னைகள் அதிகம் இருக்காது. பொருளாதாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி சகஜ நிலை உண்டாகும். பழைய கடன்களை திருப்பி அடைத்து விடுவீர்கள். சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். செய்தொழிலில் நிலைமைகள் மாறி அனைத்தும் உங்களுக்கு சாதகமாக மாறும். தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகும். உங்களை அவமதித்தவர்களை கௌரவமாக நடத்துவீர்கள்.  பங்கு மார்க்கெட் போன்ற துறைகளில் ஈடுபட்டு கணிசமான தொகைகளை ஈட்டுவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களின் ஆற்றல் கூடும். தன்னம்பிக்கை வெளிப்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அனைவரையும் அரவணைத்து செல்லும் ஆற்றல் உண்டாகும். உங்களின் மிடுக்கான தோற்றத்தால் நீங்களே பெருமைபட்டு கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு அரசாங்க வழியில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நெடுங்காலமாக மனதை அரித்துக் கொண்டிருந்த விஷயம் இந்த காலகட்டத்தில் முடிவுக்கு வரும் என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை திட்டமிட்டு குறித்த காலத்திற்குள் செய்து முடிப்பார்கள். உங்கள் வேலைகளில் தெளிந்த மனநிலையுடன் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளிடமும் சுமுகமான உறவுநிலை தொடரும். சக ஊழியர்களுக்கு ஒரு தலைவர் போல் நீங்கள் காட்சி அளிப்பீர்கள். அலுவலகத்தில் உயர் பொறுப்புகளையும் பெறுவீர்கள்.  வியாபாரிகளுக்கு முயற்சிக்குத் தகுந்த லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். அனைத்துச் செயல்களும் தடைகளுக்குப்பிறகே வெற்றியைக் கொடுக்கும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவு படுத்தினாலும் பெரிய கடன்கள் சேர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். விவசாயிகள் நூதன யுக்திகளைக் கையாண்டு விவசாயத்தைப் பெருக்குவார்கள். மனச்சோர்வு நீங்கி எதையும் சாதிக்குமளவிற்கு தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பிச் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். மக்களுக்கு நலம் செய்யும் உங்கள் முயற்சிகளை எதிர்கட்சியினரும் பாராட்டுவார்கள். புதிய பயணங்கள் உற்சாகப்படுத்தும்.  கலைத்துறையினர் தேவைக்கேற்ற வருமானத்தைக் காண்பார்கள்.  புதிய கலைஞர்களின் நட்பு கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் ஆண்டாக இது அமைகிறது. பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் பாசமும் அதிகரிக்கும். சுற்றுலா சென்று மகிழ்ச்சியைக் கூட்டிக் கொள்வீர்கள்.  குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்து காணப்படும். குழந்தைகளாலும் சந்தோஷம் நிறையும். மாணவமணிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள். மனதில் உற்சாகம் கூடும். முயற்சிகள் யாவும் தாமதமின்றி நிறைவேறும்.  பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...