18 நவம்பர் 2018

கன்னி

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** கன்னி (VIRGO) இது ஒரு பெண் ராசி. இது ஒரு நில ராசியும்கூட. இதன் அதிபதி புதன். புதனுக்கு இது உச்ச வீடாகவும் மற்றும் மூலத் திரிகோண வீடாகவும் ஆகிறது. இந்த ராசிக்கு ஒரு பெண்ணின் உருவத்தைக் கொடுத்தாலும், இந்த ராசிக்கு உரிய சின்னம் F. புதனுக்கு சுக்கிரன் நண்பனாக இருந்தாலும், இந்த ராசியில்தான் சுக்கிரன் நீச்சமாகிறார். ஒரு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் இந்த ராசியில் இருந்தால், அவர்கள் எதிரியின் வீட்டில் இருப்பதாகவே கருதப்படுவார்கள். சனி இருப்பின், அது நண்பன் வீட்டில் இருப்பதாகக் கருதப்படும். இது உடலில் உள்ள நரம்பு மண்டலத்தையும், உள் உறுப்புகளில் குடலையும் குறிக்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள், பணம் சேமிக்கும் குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். பிறருக்குத் தெரியாமல் சேமிக்கும் குணம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

இன்று

நவம்பர் 18

இன்று உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல்நலனைப் பொறுத்த வரை சிறப்பாக இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
 

இந்த வாரம்

நவம்பர் 16 - நவம்பர் 22 (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய) சிறிதே தாமதமானாலும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். மற்றவர்களைச் சார்ந்து செயலாற்றிய நீங்கள் சுயமாகச் செயலாற்றும் காலமிது. தைரியமாகத் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். பணவசதி சரளமாக இருக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் சிறப்பாக முடியும். ஊதிய உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் பிரச்னைகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சாதுர்யமாகச்
சமாளிப்பார்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிக்காக எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். கால்நடைகளால் அனுகூலம் உண்டாகும். 

அரசியல்வாதிகள் அனைத்து காரியங்களிலும் வெற்றிவாகை சூடுவார்கள். அதிகம் சிரமப்படாமல் புதிய பதவிகளில் அமர்வர். தொண்டர்கள் ஆதரவும் இருக்கும். கலைத்துறையினரைத்தேடி புதிய
வாய்ப்புகள் வரும். உங்கள் முயற்சியை மற்றவர்கள் பாராட்டுவார்கள்.

பெண்மணிகள் கணவரிடம் அனுசரித்துச் செல்லவும். வார்த்தைகளில் கவனம் தேவை. மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம்அதிகரிக்கும். இதனால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பரிகாரம்: பார்வதி தேவியை தீபமேற்றி வழிபடவும்.  அனுகூலமான தினங்கள்: 18, 20.   சந்திராஷ்டமம்: 21, 22.

இந்த மாதம்

நவம்பர் மாத பலன்கள் (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) இந்த மாதம் ராசிநாதன் புதன் தைரிய வீர்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்பட்டாலும் வந்து சேர்வதில் எந்த தடைகளும் இருக்காது. எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி செய்து முடிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது.  புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். கொடுத்த வேலைகளை நேரத்தில் செய்வது உகந்தது. குடும்பாதிபதி சுக்ரன் ஆட்சியாக இருக்கிறார். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும்.  பெண்களுக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.  அரசியல் துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள்.  கலைத்துறையினர் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவு உண்டாகும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.  மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். 

உத்திரம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும்  செலவு உண்டாகும்.

ஹஸ்தம்:
இந்த மாதம் திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான  சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி  காண்பீர்கள். 

சித்திரை:
இந்த மாதம் சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். 

பரிகாரம்: பகவத்கீதை படித்து கண்ணனை வணங்கி வர எல்லா பிரச்சனை களும் தீரும். மன நிம்மதி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை:  ஞாயிறு, புதன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி; சந்திராஷ்டம தினங்கள்: 21, 22

அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5
 

இந்த ஆண்டு

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2018 (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய) இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாரபட்சமின்றி அனைவருக்கும் ஒருமித்த ஒன்று போன்ற வரவேற்பையும் கொடுத்து அன்னியோன்யமாகப் பழகி நற்பெயர் எடுப்பீர்கள். வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சமமாக ஏற்றுக்கொண்டு நடப்பீர்கள். வருமானம் சிறப்பாக இருந்தாலும் அனாவசியச் செயலவுகளைத் தவிர்த்து சிக்கனமாக குடும்பம் நடத்துவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக சில நல்ல திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்களில் நல்ல வரவேற்புகளும் பாராட்டுகளும் கிடைக்கும். அரசாங்க தொடர்புகளில் கூடுமான வரையில் சாதகமான பலன்களும் சலுகைகளும் கிடைக்கும்.  குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். நீண்ட காலமாக உடல் உபாதைகளில் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் குணமாகி பூரண ஆரோக்கியம் பெறுவார்கள். சிலர் புதிய வீட்டிற்கு மாறிச் செல்வார்கள். கடந்த சில ஆண்டுகளாக பட்ட துன்பங்கள், கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் மறைந்து சகஜ நிலை உருவாகும். இழந்த அளவுக்கு மீண்டும் பொருள் கை வந்து சேரும். கடந்த பல ஆண்டுகளாக நடைபெறாமல் தடைபட்டு வந்த சுப காரியங்கள் எல்லாம் இந்த காலகட்டத்தில் மளமளவென்று முடியும்.  உறவினர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள். அயர்ச்சி, பலகீனம், இயலாமை, சோம்பல் போன்றவைகள் அனைத்தும் மாறி புத்துணர்ச்சியுடன் காரியமாற்றும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.  இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் அசையாச் சொத்துகள் விஷயத்தில்  ஒதுக்கி வைத்திருந்த திட்டங்கள் யாவும் ஒவ்வொன்றாகக் கூடி வரும். சிலருக்கு பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். மேலும் சொத்துகளில் இருந்துவந்த வில்லங்கங்கள் தீர்ந்து விடும். உங்களின் ஆற்றலும் திறமையும் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். செய்தொழிலை மேம்படுத்த பயணங்களை மேற்கொள்வீர்கள். சொல்லும் சொல் பயனுள்ளதாக இருக்கும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். உடல்நலத்தில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் குறையும். நண்பர்கள் உற்றார் உறவினர்கள், உடன்பிறந்தோர் உங்களுக்கு முழுமையான ஆதரவைக் கொடுப்பார்கள். சமுதாயத்தில் கௌரவமான பதவிகள் தேடிவரும்.  மனதிற்கினிய ஆலய வழிபாடுகளைச் செய்வீர்கள். செய்தொழிலில் வேறு இடங்களுக்கு மாறிச் சென்று காரியமாற்றும் காலகட்டமிது.  உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். சக ஊழியர்களும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தவர்கள், குற்றமற்றவர் என்று நிரூபணமாகி வேலையில் சேர்வார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பார்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் செல்லவும். அரசு விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவார்கள். கடன் பிரச்னையை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சந்தையில் உங்கள் விளைபொருள்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.  அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடிவரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். சமுதாய நோக்குடைய எண்ணங்களைச் செயல்படுத்த இது உகந்த ஆண்டாக அமைகிறது. தொண்டர்களை அரவணைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மறைமுக எதிர்பார்ப்புகள் அகலும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் பெறுவார்கள். புதிய பாணியில் திறமையை வெளிப் படுத்துவார்கள். சக கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் அனுகூலமான நிலைமையை காண்பீர்கள். உற்றார் உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். குடும்பத்திற்கு தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வர சிறப்புகள் கூடும். ***** ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2018 (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய) இந்த 2018 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் குதூகலம் நிறையும். நெடுநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த  சுப நிகழ்ச்சிகள் தானாகவே நடந்தேறி விடும். வெளிவட்டாரத் தொடர்பினால் உங்கள் கௌரவம், அந்தஸ்து ஆகியவை உயரும். உங்கள் பேச்சினால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். உங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த உடல் உபாதைகள் மறைந்துவிடும். அரசாங்கத்தில் உயர்பதவிகளில் உள்ளவர்களிடம் தொடர்பு உண்டாகும். செய்தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு மேன்மை அடைவீர்கள். ஏமாற்றங்கள் மறைந்து ஒரு சிறப்பான மாற்றத்தை எதிர்நோக்கி பயணப்படுவீர்கள். கடினமான சூழ்நிலைகளிலும் அவசரப்படாமல் ஆராய்ந்து நிதானமாக முடிவெடுப்பீர்கள்.  பூர்வீக வழியில் அதிர்ஷ்ட கதவுகள் திறக்கும். வரவே வராது எனறு நினைத்திருந்த கடன்கள் கைவந்து சேரும். குழந்தைகளை வெளிநாட்டுக்கு, வெளியூர்களுக்கு அனுப்பி படிக்க வைக்கும் வாய்ப்புகளும் உண்டாகும். பழைய வண்டி, வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். மார்பு சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கும் ஆளாவீர்கள். அதனால் கவனமாக இருக்கவும். நண்பர்களிடம் கோபப்படாமல் நடந்து கொண்டு அவர்களின் உறவை நல்ல முறையில் தக்கவைத்துக் கொள்ளவும்.  ஜூலை மாதம் முதல்  இந்த ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் எண்ணங்கள் சிறகடித்து பறக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க காண்பீர்கள்.  உங்கள் மனவருத்தங்களை வெளிகாட்டாமல் வலம் வருவீர்கள். சுதந்திரமாக சிந்தித்து தனித்து செயல்படுவீர்கள். நேர்முக எதிரிகள் திடீரென்று விலகி விடுவார்கள். புதிய உறவுகள் மலர காண்பீர்கள். அவர்கள் உங்கள் செயலுக்கு அரணாக இருப்பார்கள். சிலர் புதிய திட்டங்களை செயலாக்குவீர்கள். வருமானம் சிறக்கும் என்பதால் புதிய சேமிப்புத் திட்டங்களிலும் செயல்படுவீர்கள். எவரிடமும் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வீண் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். தந்தை வழியிலிருந்தும் சில அனுகூலங்கள் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது. உத்தியோகஸ்தர்கள் கவனமாகப் பணியாற்றி உழைப்புக்கேற்ற பலன்கள் பெறுவார்கள். உங்களுக்குக்கீழ் பணியாற்றுபவர்களால் சில பிரச்னைகள் உண்டாகுமாகையால் அவர்களிடம் கவனமாக நடந்து கொள்ளவும். அவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து அவர்களின் பிரச்னைகளை வளர விடாதீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு இரண்டையும் பெறுவீர்கள். மேலிடத்தின் நம்பிக்கைக்குரியவர் என்ற பெயரையும் எடுப்பீர்கள். அலுவலக ரீதியான பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பார்கள். கூட்டாளிகளை அரவணைத்துச்செல்லவும். புதிய சந்தைகளை நாடிச் செலவும் போது அதிக கவனம் எடுக்கவும். மேலும் அரசு விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். கொள்முதலிலும் அதிக லாபங்களைக் காண்பீர்கள். பொருள் வரவு சிறப்பாக இருக்குமாகையால் பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பி செலுத்துவீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடி வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். மறைமுக எதிர்ப்புகள் அகலும். கலைத்துறையினருக்கு மனச்சோர்வு நீங்கி எதையும் சாதிக்கும் அளவுக்குத் திறமைகள் பளிச்சிடும். தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சக கலைஞர்களால் நெடுநாளைய கனவு பலிக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் அனுகூலமான நிலைமைகளைக் காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். இல்லத்திற்கு தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைப்படி நடந்து கொண்டு குழப்பமான சூழ்நிலைகளைத் தவிர்ப்பீர்கள். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். விரும்பிய பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பீர்கள். பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...