எனக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை. திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளதா? ஆயுள் எவ்வாறு உள்ளது? தற்போது நடக்கும் புதன் மஹாதசை எவ்வாறு இருக்கும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்?

உங்களுக்கு துலாம் லக்னம், சிம்ம ராசி. சனிபகவான் ராஜயோக காரகராகி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார். அவரை கர்மாதிபதியும் லக்னாதிபதியும் லாப ஸ்தானத்திலிருந்து பார்வை செய்கிறார்கள்.

உங்களுக்கு துலாம் லக்னம், சிம்ம ராசி. சனிபகவான் ராஜயோக காரகராகி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார். அவரை கர்மாதிபதியும் லக்னாதிபதியும் லாப ஸ்தானத்திலிருந்து பார்வை செய்கிறார்கள். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் அயன ஸ்தானத்திலேயே ஆட்சி உச்சம் மூலத்திரிகோணம் பெற்றிருக்கிறார். விரயாதிபதியாக ஆவதால் சிறிது செலவினங்கள் கூடும் என்றாலும் பாக்கியங்களும் யோகங்களும் கலந்தே அமையும் என்பதையும் மறக்கக் கூடாது. தற்சமயம் புதபகவானின் தசை சிறப்பு. அதனால் புதமஹா தசை சிறப்பாகவே செல்லும். மற்றபடி தீர்க்காயுள் உண்டு. இறுதிவரை ஆரோக்கியத்திலும் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. பிரதி தினமும் முடிந்தவரை "ராமா ராமா' என்று ஜபித்து வரவும். 

- வாசகர், விருதுநகர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com